வாழ்க்கை என்பது போராட்டம் அதே போல் யுத்தம் என்பது மிகக் கொடியது அதனால் பாதிக்கப்பட்ட எமக்கு உதவி செய்ய யாருமே இல்லை என கூறும் இத் தம்பதிகள் தங்களுக்கு யாராவது உதவி செய்வீர்களா என வாய் விட்டு அழுது கேட்கிறார்கள். யுத்தத்தினால் பாதிப்படைந்து ஒரு நேர சாப்பாட்டுக்கு கையேந்தி நிற்கும் இம்மக்கள் என்ன பாவம் செய்தார்கள் |
வாழ்க்கை என்பது போராட்டம் அதே போல் யுத்தம் என்பது மிகக் கொடியது அதனால் பாதிக்கப்பட்ட எமக்கு உதவி செய்ய யாருமே இல்லை என கூறும் இத் தம்பதிகள் தங்களுக்கு யாராவது உதவி செய்வீர்களா என வாய் விட்டு அழுது கேட்கிறார்கள். யுத்தத்தினால் பாதிப்படைந்து ஒரு நேர சாப்பாட்டுக்கு கையேந்தி நிற்கும் இம்மக்கள் என்ன பாவம் செய்தார்கள் யாருக்காக தமது உயிர்களை காவு கொண்டார்கள் புலம்பெயர் மக்களிடம் தாங்கள் உயிர் வாழ்வதற்காக கையேந்தும் நிலையை எண்ணி அவர்கள் கவலைப்படுவதை விட நாம் தான் வெட்கப்பட வேண்டியவர்கள் இவர்களை இந்நிலைக்கு உருவாக்கியது யார். அவர்கள் செய்த பாவம் தான் என்ன? அவர்களை இந்நிலைக்கு உள்ளாக்கியதில் எமக்கு எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி நாம் இவர்களை கண்டும் காணத மாதிரி இருப்பது சரியா என்ற கேள்விகள் எம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியவர்களாகிறோம். இப்படி பல்லாயிரக்கணக்கானவர்கள் ஊனமற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். கணவனையிழந்த பெண்கள் வாழ வழியில்லாமல் அழுகின்றனர். பிள்ளைகள் ஒரு வேளை கஞ்சிக்காக ஏங்குகின்றனர்.
நாங்கள் இருவரும் 1990ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம் நன்றாக உழைத்தோம் சந்தோசமாக வாழ்ந்தோம் ஆனால் இந்த பாழாப்போன யுத்தத்தால்; ஒன்றும் அறியாத நாம் எம் கால்களை பறி கொடுத்துவிட்டோம் நாம் காயப்பட்டவுடன் வசாவிளானை விட்டு ஓட்டுமடத்திற்கு சென்றோம் அங்கு ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் வாழ்ந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம் 2009 மே மாதம் புத்தளத்திலிருந்து அவ் வீட்டு சொந்தக்காரர்கள் வந்து எம்மை எழும்பும் படி கூறியதால் நாம் அவ்விடத்தைவிட்டு போவதற்கு வேறு இடமில்லாமல் தற்போது யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் ஒரு மூலையில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கு எந்த வருமானமும் உதவியும் இல்லை எம் இருவராலும் எந்த வேலையும் நடமாடி செய்ய முடியாது. யாராவது இந்த புகையிரத நிலையத்தை பார்க்க வருபவர்கள் எமக்கு கொஞ்சப் பணமோ அல்லது சாப்பாடோ தந்து விட்டு போவார்கள். எமது கவலையெல்லாம் எங்களது 4 வயது மகளைப்பற்றியது தான் யுத்தம் முடிவடைந்து விட்டது இப்பொழுது பிரச்சினையில்லாமல் மீன் பிடிக்கலாம், தச்சு வேலை செய்யலாம் விவசாயம் செய்யலாம் ஆனால் எம்மால் தான் எதுவுமே செய்ய முடியாத நிலை..
ஆனால் புலம்பெயர் நாடுகளில் கோயில்கள், நடந்தவை,நடப்பவை, நடக்கப்போறவை பற்றி சொல்லும் போலிச்சாமியாருக்கு பவுண்ட்களிலும்,யூரோக்களிலும் பிராங்குகளிலும், டொலர்களிலும் அள்ளிக் கொடுக்க முன் வரும் புலம்பெயர் மக்கள் இம் மக்களை பாராமுகமாக விட்டதேன்.? புகலிட நாடுகளில் உள்ள கோயில்களுக்கு உடைக்கும் தேங்காயை குறைத்து இத்தம்பதிகள் போன்று யுத்தத்தால் ஊனமற்றவர்களாக்கப்பட்டுள்ள பலருக்கு உதவலாமே…
ஜெயரூபி, ஜெயலிங்கம்,40 வயது அவரது கணவர் செல்வரட்னம் ஜெயலிங்கம் வயது 43 அவர்களின் மகள் தர்ஷிகா வயது 4 . இவர்கள் வசாவிளைனைச் சேர்ந்தவர்கள். ஒரு நாள் இரவு இவர்கள் நித்திரையில் இருக்கும் போது புலிகளுக்கும் இராணுவத்திற்கும் நடைபெற்ற உக்கிரமான சண்டையில் ஏற்பட்ட செல்தாக்குதலில் கணவரான ஜெயலிங்கம் வலது காலையிழந்தார் ஜெயரூபி; இரண்டுகால்களையும் அவரது பத்துவிரல்களையும் இழந்தார். ஆனால் கடவுளின் கருணையால் அவர்கள் தங்கள் கண்களை தாம் இழக்கவில்லை என கண்ணீர் மல்க கூறுகின்றார்கள் அவர்களின் சோகக் கதை… கூறும் பல்லாயிரக்கணக்காவர்கள் உள்ளனர் இவர்களைப் பற்றி யார் சிந்திப்பர்
ம்… உலகின் மூலை முடுக்குகளில் குவிந்துள்ள பல்லாயிரம் பேர்களில்
இவர்களும் அடக்கம்,இவர்களின் இந்த நிலைக்கு காரணம்யார்?லாபம்..லாபம்
என்று அலையும் உலக முதலாளி வர்க்கம்,இதை தூக்கிஎறிய உழைக்கும்
வர்க்கமாகிய நாம் ஒன்றாய் சிந்திக்கும்போதுதான்…இதற்க்கு விடைகிடைக்கும்
யுத்தங்கள் இறுதியில் விட்டுச்செல்வது அழிவுகளையும் சோகங்களையும்தான்…. இவர்களது தொட்ர்புவிபரங்களை அறியத்தருவதால் உதவிசெய்ய ஆர்வம் உள்ளவர்களை தொடர்புபடுத்திவிடலாமே
இவர்களுக்கு விலாசம் இல்லை இவர்களுக்கு என்று ஓர் இடம் இல்லை நீங்கள் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு சென்றால் (இடிந்த நிலையில் இருக்கும்) அங்கு இவர்களை காணலாம் மற்றப்படி அவர்களுக்குகென்று தொடர்பு விலாசம் இல்லை. உங்கள் கருத்துக்கும் ஆர்வத்துக்கும் நன்றி