2007ம் ஆண்டு ஊடறு மின்னஞ்சலுக்கு ஒரு கவிதை, யோகி மலேசியா என்று அனுப்பட்டிருந்தது. அந் நேரத்தில் குழலிவீரன் , மணிமொழி லதா போன்றோர்கள் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து ஊடறுவுக்கு எழுதுவார்கள். . யோகி என்றவுடன் இவர் ஆணா பெண்ணா என்ற குழப்பம் இருந்தது. பின்னர் வல்லினம் குழுவினரிடம் உறுதிப்படுத்திய பின்னரே யோகியின் கவிதையை ஊடறுவில் பிரசுரித்திருந்தோம். சிறு வயதில் பெற்ற தன் அனுபவங்களையும், தற்போது பெற்றுவரும் அனுபவங்களையும்இ எது எது தன்னை தொந்தரவு செய்கிறதோ அதை இலக்கியத்தின் ஊடே எழுத்தில் கொண்டு வர முயற்சிப்பதாக கூறுகிறாள் யோகி . தன் மனதின் டைரியை புரட்டும் போதெல்லாம் ஏதோ ஒன்று தன்னை பாதித்திருப்பதை நான் உணர்கிறேன் என்கிறாள். ‘ ஒரு நாள் கடவுளுடனும் மிருகத்துடனும் வாழ நேர்ந்தது‘ என்ற கவிதையும் ‘என் மரணத்தை நானே சம்பவிக்க’ என்ற கவிதையும் மனதுக்கு பிடித்தமான கவிதைகள் .
1.உவப்பற்று இருக்கிற
இருப்பை
எடுத்துக்கொண்டு
திரிகிற காமத்திற்கு
அறியப்படுத்துவது என்னவென்றால்
பற்றற்று இருக்கும்
யோனிகளுக்கு
உவப்பற்றுதான் போகும்
எல்லா ஆண்குறிகளும்
2.துடைக்கப்படாத ரத்தக் கரைகள்’
பிறிதொரு நாள்
பிறிதொரு நாளில்
பிறிதொரு நாளையைப் பற்றிய
கவிதை எழுத
மனம் எத்தனித்திருந்தது
அதற்கு பிறிதொரு காலமும்
பிறிதொரு நேரமும் தேவைப்பட்டது
தருணம் தோய்ந்த பிறிதொரு நாளில்
அக்கவிதையை எழுதத் தொடங்கினேன்
கவிதை நீண்டு
பல பிறிதொரு நாட்களை
விழுங்கியது
கவிதையை முடித்து
அடியில் என் பெயரை எழுதிட
அந்தப்
பிறிதொரு நாள்
யோகி என்று படைப்புலகில் அடையாளம் காணப்படும் இவர் நவீன இலக்கிய வெளியில் தன்னை நிலையாக நிறுத்திக்கொள்கின்றார். இவர் ஆரம்ப காலங்களில் பத்திரிகை துறையில் நிருபராகவும் பணியாற்றியுள்ளார். கவிதைஇ கதை, கட்டுரை என எழுதிக்கொண்டிருக்கும் இவரின் பத்திகள் ‘துடைக்கப்படாத ரத்தக் கறைகள்’ என்ற நூல் வடிவில் வல்லினம் வெளியீடாக வெளிவந்திருந்தது. . வாழ்வின் நகர்த்தலில் தான் காண்பதை மிக எதார்த்தமாக தனது எழுத்தின் மூலம் உரையாடுகிறாள் தற்போது யட்சியாக அவளது கவிதைத் தொகுப்பு உயிர்மை வெளியீடாக வெளிவந்துள்ளது.