யாழினி யோகேஸ்வரன்
அவளை நான் கண்டேன்
முன்னெப்பொழுதுமிலா சூரியனின்
மறைதலுக்குள் ஒளிர்ந்த நிலவென
என்னிடம் வந்தாள்
வருகையின் நடத்தைகள் வழக்கத்தோடிருந்தாலும்
தோற்றம் மட்டும் வழக்கமற்றவையாகவேருந்தது
நாம் நண்பராயிருந்த காலங்கள் அவை
வரிசைப் பல் தெரிய மின்னிய புன்னகை
குழி விழுந்த கன்னங்களைப்
பேரழகாக்கி கொண்டிருந்தன அவளுக்கு
அன்பும் அமைதியும்
அகத்தால் நிறைந்தவள்
உள்ளம் உயர்ந்து
உதவிக்கரம் நீட்டுபவள் – இன்று
வெள்ளை ஆடையில் வெளிப்படையாய் தெரிகின்றாள்
கன்னியாஸ்திரி வடிவில் – ஆண்டவரின் பிள்ளையென
Thanks oodaru