ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் குறமகளுடனான உரையாடல் தாய்வீட்டில்
பெண்களைத் தனித்து பெண்களுக்கான உலகம் என்கிறதான பார்வை சிலரிடம் காணப்பட்டது. அப்படியில்லாமல் பெண்களும் ஆண்களும் இணைந்தே பெண்விடுதலையை சாத்தியப்படுத்தலாம் என்பது எனது அபிப்பிராயமாக இருந்தது.
மெல்ல மெல்ல இங்கே எமது சமூகத்தில் இருந்த எல்லாவிதமான ஒடுக்கு முறைகளையும் இங்கும் கொண்டுவந்துவிட்டோம். சாதிப்பாகுபாடு என்பது இங்கும் வலுவாகவே இருக்கின்றது.
மக்களில் ஒரு சாராரை உள்ளே நுழையவிடாத அந்த ஆலயத்தில் நுழையக்கூடாது என்று முடிவெடுத்து, அவ்விதமே கடைப்பிடித்தும் வந்தேன்.ஆனால் மெல்ல மெல்ல இங்கே எமது சமூகத்தில் இருந்த எல்லாவிதமான ஒடுக்கு முறைகளையும் இங்கும் கொண்டுவந்துவிட்டோம். சாதிப்பாகுபாடு என்பது இங்கும் வலுவாகவே இருக்கின்றது.
ஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும், சமூகச் செயற்பாட்டாளரும், நாடகம், பட்டிமன்றம், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவருமான குறமகள் என்று பரவலாக அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம் ஈழத்தின் வடக்கே – காங்கேசன்துறையில் ஜனவரி 9, 1933 இல் பிறந்தார். தனது பாடசாலைக் கல்வியை நடேஸ்வராக் கல்லூரியிலும், இளவாலை திருக்குடுப்பக் கன்னியர்மடத்திலும் கற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் பயிற்றப்பட்ட ஆசிரியராவார். இந்தியாவில் உள்ள உத்கல பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டதாரியாக கல்விகற்றவர். பின்னர் கொழும்புப் பல்கலைக்கழத்தில் நாடகவியலிலும் கல்வியியலிலும் பட்டயச்சான்றிதழ்(Diploma)தகைமைகளைப் பெற்றுக்கொண்டவர். ஈழத்திலும் பின்னர் புலம்பெயர்ந்து கனடாவிலும் தனது எழுத்துக்களின் ஊடாகவும் பேச்சுக்களின் ஊடாகவும் பெண்களின் விடுதலைக்கும், சமத்துவத்துக்குமாகத் தொடர்ந்து குரல் கொடுத்தும் செயற்பட்டும் வந்தவர். தமிழ்ச் சமூகத்துக்கு அவரது முக்கிய பங்களிப்பாக அவரது யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கள் கல்வி என்கிற ஆய்வு நூலைக் குறிப்பிடலாம்.
ஊடறுவில் குறமகள்
ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி “குறமகள்”