மாத்தளை ஜெசீமா ஹமீட் இன் நிழலின்காலடி ஓசை நூலுக்கான விமர்சனப் பார்வையுடனான பகிர்வு

பெண்கள்தினக் கட்டுரை மார்ச் 08 –

சை.கிங்ஸ்லி கோமஸ்jezeema

jezeema2

மார்ச் 08 இற்கான கட்டுரையாக ஜெசீமாவின் கவிதை தொகுப்பினை தெரிவு செய்ய இரண்டு முக்கிய காரணங்களை அடையாளப்படுத்தல் தகும் எனக்கருதிதொடர்கின்றேன். ஒடுக்கப் படும் இரண்டு சிறுப்பான்மை இனங்களுக்கு இடையில் விரிசளை ஏற்படுத்த எத்தணிக்கும் பிற்போக்கு அரசியல் சக்திகளின் சதிகளுக்கு எதிராக தெளிவான சிந்தனையுடன் இணைந்து போராட வேண்டிய காலக்கட்டத்தில் இலக்கியத்தினூடாக முற்போக்கு அடையாளம் ஒன்றினை எடுத்திருக்கும் இவர் இரண்டு சமூகங்களுக்கு இடையில் சிறந்த இணைப்பு பாலமாக காண்கின்றார்.வர்க்க சிந்தனையின் மூலமே பெண் விடுதலை சாத்தியப் படும் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகமாக காணப் படுகின்றது. மாத்தளையின் மற்றும் ஒரு நம்பிக்கைக்குரிய கவிக் குயில் nஐசீமா.பல்கலைக் கழக சங்கப் பலகையில் இருந்து தனது காத்திரமான படைப்புக்களுக்கு உயிர் கொடுக்க துவங்கிய இவர் அந்த சங்கப் பலகையின் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார்.
அழகான அட்டைப்படம் உள்ளடக்கம் தேட தூண்டும் வகையில்அமைத்துதமிழ்நாட்டு பாடலாசிரியரும் கவிஞருமானஅபிவை டி. எம்.எம்.தாஐ;தீனின் கவித்துவமான அணிந்துரையும் பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் துரைமனோகரனின் வாழ்த்துரையுடனும் கவிதாயினியின் நன்றி நவிலலுடன் கவிதைகளைக் கண்தேட பிரசவித்துள்ளது நிழலின் காலடியோசை.

தேசிய கலை இலக்கிய பேரவையின் மாத்தளை கிளை உறுப்பிணரும் சிறந்த மேடைப் பேச்சாளரும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பால் அதீத அன்பையும் கொண்ட பெண்ணிய செயற்பாட்டாளர் ஜெசீமாவின் கவிதைகள் பார்க்கப் பட வேண்டியவையாகும். கவிதை நூலை வாசிக்க வேண்டும் ஆர்வத்தினை தூண்டிய கவிதையில் இருந்து விமர்சனப் பகிர்வை ஆரம்பித்தல் நலம் என கருதி தொடர்கிறேன்.

கவ்வாத்து மலைக் கனவுகள்

‘பொழுதுகள் விடியும் போதெல்லாம்
எங்கள் நாளாந்த ஏக்கமோ
ஒருபானைச் சோற்றுக்கே தவமிருக்கின்றது
சுகம் என்பதைக் கூட
அப்பப்போ நாங்கள்
சோகங்களுக்ககுள் இருந்து தான்
சுவைத்துக் கொள்வோம்”

என்னும் கவிவரிகளின் தொடர்ச்சியில் ‘எண்பதுகளில் இருந்து தானே இனப்பிரச்சினை எங்கள் துயரத்தின் வேர்களோ மூன்று சகாப்தங்கள் முன்னோக்கியவை மாசியும் தேங்காயம் தேடித் தேடியே இத்தனை நூற்றாண்டுகளைத் தோற்று போனோம் இனியும் எதைத் தோற்பது’என்னும் வரிகள்இதயத்திற்கு அடியிள் தேங்கிக் கிடக்கும்துயரத்தை கிளர்ந்துள்ளது.
நூலில் மொத்தம் 55 கவிதைகள் இவற்றின் சில கவிதைகள் வெளிப்படுத்தும் துளிகள்

* அன்னைக்கு-அன்பு
* தந்தையின் ஞாபகங்கள்-உழைப்பும் கண்ணீரும்
* வாழ்க்கைத் தோழன்-எதிர்பார்ப்பு
* என்செல்லப் பிள்ளைக்கு-வஸந்தகால ஞாபகங்கள்
* நானொரு கடன்காரி-தாய்மையின் தியாகங்கள்
* செஞ்சோற்றுக் கடன்-குருதட்சனை

என்று தொடரும் கவிதைகளிலே பொறுமையின் தாயகம் ஈமான்நபிகள் நாயகம்எனும் கவிதையும் பன்றிக்காய்ச்சலும் டெங்கின் கூச்சலும் -நான்யார்-பர்தாவுடைய வாழ்வு ஆகிய கவிதைகள் இஸ்லாம் மார்க்கம் பற்றியும் அதன்தேவைபற்றியும் பாடப்பட்டள்ளது. பர்தாவுடைய வாழ்வு என்னும் கவிதையினை வாசகர்களின் விமர்சனத்திற்கு விட்டு அதன் வரிகள் சிலவற்றினை பகிர்தல் என் கடமையாகும்ஒழுக்கம் உயர்த்தி-இழிநிலைத் தளர்த்தி-ஈனச்செயலகற்றும் அந்தப் பர்தாவுக்குள் தான்-பேரின்பத்தின் பாதை-புனிதமாய் புதைந்திருக்கின்றது.பர்தாவுக்குள் புதைந்திருக்கும் பேரின்பம் எது சேலைக்குள் புதைந்திருக்கும் பேரின்பம் எனும்பொழுது ஏற்படும் கொச்சைத் தனமான காமக் கிளர்ச்சி எண்ணம் சமப்படுத்தப் படுமா?எனும் கேள்விகள் எழுகின்றது.

‘ஆக- அறிவியல் சிகரமாய்த் தெரியும்- அத்தனை நாட்டிலும்- பெண் உரிமைக்காய் கொடிப்பிடித்து கோசமிடும்- கோரிக்கை;கெல்லாம்-முடிவு(முற்றுப்புள்ளி)பர்தாவில் இருக்கின்றது”.
இதில் பாதுகாப்பு இருக்கின்றது என்னும் வரிகள் சேலை அணிபவருக்கம் ஏனைய ஆடை அணிபவருக்கம் பாதுகாப்பு இல்லாமல் எல்லாம் இழந்து கற்பிழந்து வாழ்வதாக அர்த்தப் படுமா எனும் கேள்விகளையும் கவிதாயினியிடம் விட்டு.
மணமகள் தேவை எனும் கவிதை கருப்பு பணமாய் கைமாறும் அல்லது இந்த சீதனம் hலாலா ? hராமா எனும் கேள்வி பெண்ணிய சிந்தனையில் வரலாறு காணா துயரங்களை ஏற்படுத்திய சீதனப் பிரச்சனையின் பார்க்காதப் பலப் பக்கங்களைப் பார்க்க வைக்கின்றது.
இக் கவிதையில் தொடர்ந்து.

தொழுகையின் நோன்பைக் கூட துச்சமாக எண்ணும் நீங்கள் கைக்கூலி என்றதும் சளைக்காமல் ஓடுவதன் சங்கதிதான் என்ன? ஒரு வேலை உணவுக்கே உழைத்துக் களைத்து போன எங்கள் வாப்பாவிடம் உங்கள் மகன்களுக்காயும் சொத்து சேர்க்க இனியும் உடல் பலம் இல்லை. என்னும் கவி வரிகளுட்குள்ளே சமுகத்தில் காணப் படும் மிக மோசமான சுரண்டல் பழக்கமான சீதனம் எவ்வாறு உழைப்பவர் பணத்தை சீர் தனம் என்னும் நாகரீக வார்த்தை மூலம் சுரண்டுகின்றார்கள் என்பதனை வேதனையுடன் வெளிப்படுத்துகின்றார்.இந்தக் கவிதை ஜெசீமாவின் கவிதைகளில் அடையாளப் படுத்தப் பட வேண்டிய கவிதையாகும். இந்தக்கவிதையினூடக மார்க்கப்பற்றாளரகளாக இருப்பவர்கள் கூட சுரண்டல் என்று வரும் போது சுரண்டுபவர்கள் ஏகாதிபத்திய வாதிகள் என்றும் சுரண்டப்படுபவர்கள் ஏழைகள் என்றும் சுரண்டல் என்னும் சீதனம் ஹலால் என்றும் ஹராம் என்றும் எழுதியுள்ளார் கன்னியர் வாழ்வதனை கரியாக்கும் ஆண்களே கவனம் உங்களை நரகின் பால் நகர்த்தி விட எங்கள் கண்ணீரே சாட்சியாகிட வேண்டாம்

* பாகிஸ்தான்ஐpந்தாபாத்-ஏக்கத்தக்கே ஏக்கம்
* எரியும் காஸ்மீர்-இஸ்லாத்தின் அடிப்படைவாதம்
* தலைப்பைத் தொலைத்த கவிதைகள்-சாபங்களின் சங்கமங்கள்.
* ?-தூக்கத்தின் விலை
* பால் வார்த்துப் போங்கள்-பெண் துயர் துடைக்க
* செப்டம்பர் 11-கசப்பான நிணைவுகள்
* எது சரி-எல்லாம் மயக்கம்
* மலை சுமக்கும் வென்பணி-இயற்கையுடன் இணைந்த நேசம் கவி வரிகளாய்
* நிழலின் காலடியோசை-மரக்க மருக்கும் நிணைவுகளின் பதிவுகள் நினைத்துப் பார்க்க வைக்கும் ஏக்கத்தின் வார்த்தைகள் எங்கோ எதையோ தொலைத்த கவிதாயினி நிழலின் காலடியோசைக்குள் தொலைந்ததை தேட விரும்புகின்றார் நிழலின் கலடி ஓசை என்றும் கேட்காது என்பது தின்னம் ஆனால் இந்த கவிதை நிழலுக்க உயிர் கொடுத்து இல்லா ஓசைக்கு சங்கீதம் இசைக்கின்றது.
* நேசி நேசித்துக் கொண்டேயிறு-நேசத்திற்காய் யாசித்துக் கொண்டிருக்கும் நெஞ்சம்
* நெருப்பு நிலா-நற்புக்கு முகவரி
* நேசமானவளே ஏன்-நட்புக்கு அழைப்பு

“அழுதாலும் கண்ணீர் இணிக்கும்-உன் நெசம் என் வழ்க்கையின் றோட்டின் முன்னால் நாட்காலி போட்டு அமர்ந்திருக்கின்றது”

* புதிய உறவே-நட்பின் படிமங்கள்
* உனக்காய்-நட்புக்காய் நாட்டப்பட்ட செடிகளில் ஒன்று Öத்து குளுங்குகின்றது.
* நட்பு-பச்சை இலையுடனான கொடியில் அழகாய்ப் Öத்திருக்கும் மஞ்சல் மலர்
* முதல் நேசமும் நட்பும்-பள்ளித் தோழிக்காய் பாடிய பாசமான பாடல்கள்
* நிலவு- இயற்கையின் எழில் பாடும் சின்னக் கவிதை
* பிரிவதற்கம் விழா-பல்கலைக் கழக ஞாபகங்கள்
* காதல் சாபம்-கண்ணீர்
* பூமித்தாய்க்கு வியர்க்கின்றது -சூழல் எம் மூச்சு

இவ்வாறாகத் தொடர்கின்றது ஏனையக் கவிதைகள்

நிழலின் காலடியோசை தொடர்பான நூல் தொடர்பான பார்வையில் கணனி அச்சுப்பிரதி என்பது மிகவும் விமர்சனத்துக்குரியதாய் காணப் படுகின்றது. கவிதைக்கு கவிதை எழுத்துக்களின் வடிவமும் அளவும் வேறுபடுகின்றது இதற்கு காரணம் கவிதை வரிகளின் எண்ணிக்கையாகும் இது கவிதை நூலின் உள்ளடக்கம் தொடர்பான மதிப்பினைஇல்லாமல் செய்கின்றது.கவிதைகளின் தலைப்புக்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக காணப் படுவதனால் வாசகனது எண்ணத்தில் இந்தக் கவிதை சிறந்ததாக இருக்கின்றபடியால் இதன் தலைப்பு அழகாகவும் பெரிதாகவும் காணப் படுகின்றது எனும் எண்ணம் வாசகர்களுக்கு ஏற்படக்கூடியதாய் அமைந்து தலைப்புக்கள் பெரிதாகவும் அழகாகவும் இருக்கும் கவிதைகளை மாத்திரம் வாசித்து ஏனைய கவிதைகளை வாசிக்காமல் விடும் தன்மை ஏற்படும்.இது போன்ற விடயங்களில் மிக நுணுக்கமான கவனம் இருத்தல் அவசியமாகும்.

ஜெசீமாவின் நிழலின் காலடி ஓசைக்கான கவிதைகள்பிறந்த காலக்கட்டத்தில் அவரது உணர்வுகளின் வெளிப்பாடுகளாக மாத்திரமே கவிதைகள் வரையப் பட்டுள்ளது சமூக அசைவியக்கத்தில் பெண் விடுதலை செயற்பாட்டுடனான ஒருவரின் படைப்புகள் நூலாக வரும் போது இன்னும் காத்திரமான பெண் அடக்கு முறைக்கு எதிராக விசேடமாக மதம் அல்லது மார்க்கம் பரப்பும் பார்வையினைக் குறைத்து மக்கள் நேயம் சார்ந்த படைப்புக்களாக வருமாயின் ஆரோக்கியமாக அமையும் எனும் விமர்சனக் குறிப்பினை முன் வைத்து கடந்த கால படைப்புக்களோடு ஒப்பிடும் போது கவிதாயினியின் அண்மைக்காலப் படைப்புக்கள் மக்கள் விடுதலைக்கான படைப்புக்களாய் காணப்படகின்றது. இதனை இனம் காட்டும் குறிக்காட்டியாக கீழ் காணும் கவிதையினை அடையாளப் படுத்தலாம்

கதவு திறக்கப் பாடுவோம் காலப் பொருத்தமாய் காவியம் சொள்ளும் கவிதைத் தலைப்பு ஊதியம் இல்லா தேட்டத்து உழைப்பாளிகள் பற்றியும் உரிமை தொலைத்த இளைய சமுதாயம் பற்றியும் போகட்டும் போகட்டும் என்றே  -பொறுத்தத போதும் இனி புரட்டி போடுவோம் சரித்திரம் மாரட்டும்  என்னும் கவிதை வரிகள் காலம் மாறும் போது ஓரு ;மனிதன் எவரோடு சேர்ந்த இந்த சமுகத்தின் விடுதலைக்காய் குரல் கொடுக்க முன் வருகின்ரானோ அதற்கான சமுக விடுதலை கீதங்களாக இலக்கியங்கள் பிறப்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக nஐசீமாவின் படைப்புக்கள் பரிணாம வளர்ச்சியடைகின்றது வாழ்த்துக்கள் ஜெசீமா. ஜெசீமாவின் நிழலின் காலடியோசை மக்கள் இலக்கியப் படைப்பக்கள் உருவாவதற்கான சிறந்த ஆரம்பமாகும்.இவை வாசிக்கப்பட வேண்டிய கவிதைகள். அடுத்து வரும் கவிதைத் தொகுப்புக்கள் இன்னும் காத்திரமான மனித நேயம் பேசும் கவிதைகள் சுமந்து வர வாழ்த்துக்கள்

;

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *