பா. பாலேஸ்வரி
கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர் ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு முக்கியமானவர் இலங்கையில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர். ‘பாப்பா’, ‘ராஜி’ ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதி வந்தவர்.. பதினொரு நாவல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ‘அந்த நினைவு’, ‘இரட்டைக் குழந்தைகள்’, ‘தியாகம்’, ‘கடிதம் சிரித்தது’. ‘கற்பு நிலை’ என்பன வற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.. தமிழ் மணி, சிறுகதை சிற்பி பட்டம், ஆளுனர் விருது, கலாபூசண விருது பெற்றவர்.
நாவல்கள்
பாலேஸ்வரி பன்னிரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கையில் பெண் எழுத்தாளர் ஒருவர் பன்னிரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டிருப்பது இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவே முதற்தடவை.
விபரம் வருமாறு
- ‘சுடர்விளக்கு’ – 1966 (திருகோணமலை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடு)
- ‘பூஜைக்கு வந்த மலர்’ – 1971 (வீரகேசரி வெளியீடு)
- ‘உறவுக்கப்பால்’ – 1975 (வீரகேசரி வெளியீடு)
- ‘கோவும் கோயிலும்’ – 1990 ஜனவரி (நரசி வெளியீடு)
- ‘உள்ளக்கோயில்’ – 1983 நவம்பர் (வீரகேசரி வெளியீடு) –
- ‘உள்ளத்தினுள்ளே’-1 990 ஏப்ரல் (மட்டக்களப்பு செபஸ்டியர் அச்சகம் வெளியீடு)
- ‘பிராயச்சித்தம்’ – 1984 ஜூலை (ரஜனி பப்ளிகேஸன்)
- ‘மாது என்னை மன்னித்துவிடு’ – 1993 ஜனவரி (ஸ்ரீபத்திரகாலி அம்மன் தேவஸ்தால வெளியீடு)
- ‘எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு’ – 1993 ஆகஸ்ட் (காந்தளகம் வெளியீடு, இந்தியா)
- ‘அகிலா உனக்காக’ – 1993 (மகாராஜ் அச்சகம், இந்தியா)
- ‘தத்தைவிடு தூது’ – 1992 ஜூலை (மட்டக்களப்பு கத்தோலிக்க அச்சகம்)
- ‘நினைவு நீங்காதது’ – 2003 (மணிமேகலைப்பிரசுரம், இந்தியா)
சிறுகதை தொகுதிகள்
இவர் இரண்டு சிறுகதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
- சுமைதாங்கி – 1973 (நரசு வெளியீடு)
- தெய்வம் பேசுவதில்லை – 2000 (காந்தளகம் வெளியீடு இந்தியா)
2012 செப்டம்பர் ஊடறுவில் அவரைப்பற்றிய குறிப்பு ஒன்று http://www.oodaru.com/?p=5444