இலங்கை மத்ரசா ஒழுங்கில் இலங்கைவாழ் முஸ்லிம் சமூகம் சார்ந்த குடுப்பப்பிரச்சினைக் குறித்தோ விவாகம் விவாகரத்து தொடர்பான பிரச்சினைகள் குறித்தோ அல்லது விவாக விவாகரத்து சட்ட நடைமுறைகள் குறித்தோ எந்தக் கற்கையும் இல்லை என்பது கசப்பான உண்மையாகும். மாற்றமாக நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஒரு சமூகக்கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட விவாகரம் விகாரத்து மற்றும் கும்பவிவகாரங்கள் தொடர்பான சில தீர்வுகள் வாசித்த அனுபவம் வேண்டுமானால் இருக்கலாம்.சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகுறித்தும் சட்டநடைமுறைகள் குறித்தும் சமூகநிலைமைகள் குறித்தும் எவ்விதமான அனுபவமும் பெற்றுக்கொள்ள முடியாத விதத்தில்தான் இலங்கை மத்ரசாக் கட்கைகள் காணப்படுகின்றது