ஓர் இலங்கைச் சிறுமி (வயது 13 பெயர் தெரியவில்லை ) (நன்றி மூன்றாம் உலகக் குரல் வெளியீடு சவுத் ஏசியன் புக்ஸ்)
என்னிடம் ஒரு வர்ணப்பெட்டி இருந்தது
ஜொலித்துக் கொண்டு தூக்கலாக
என்னிடம் ஒரு வர்ணப்பெட்டி இருந்தது
சில சூடாக, சில சில்லிட்டுப் போய்
அந்தக் காயங்களின் இரத்தத்தை வரைய
என்னிடம் சிவப்பு இருக்கவில்லை
அந்த ஆதரவற்றவளின் துக்கத்தைத் தீட்ட
என்னிடம் கருப்பு இருக்கவில்லை
அந்த செத்த முகங்களுக்கு உருக்கொடுக்க
என்னிடம் வெள்ளை இருக்கவில்லை
அந்த தகித்துக் கொண்டிருந்த மணல்களை விவரிக்க
என்னிடம் மஞ்சள் இருக்கவில்லை.
ஆனால் என்னிடம் ஆரஞ்சு இருந்தது
வாழ்க்கையின் ஆனந்தத்தை பிழிந்து காட்ட
என்னிடம் நீலம் இருந்தது
தெளிந்த வானத்தை பிரதிபலித்துக் காட்ட
என்னிடம் பச்சை இருந்தது
இளந்தளிர்களை படம்படித்துக்க காட்ட
என்னிடம் ரோஸ் இருந்தது
நம்பிக்கை கனவுகளை சித்திரமாக்கிக் காட்ட
நான் உட்கார்ந்து வரையத் துவங்கினேன்
ச மா தா ன ம்