யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை என்ற இடத்தில் பிறந்தவர் பத்மா சோமகாந்தன்இவரின் புனைபெயர் புதுமைப்பிரியை மூன்று சிறுகதைத் தொகுதிகளோடு, சிறுவர் இலக்கிய நூல்கள் இரண்டையும் வெளியீடு செய்துள்ளார்.. பெண்ணின் குரல் எனும் காலாண்டு சஞ்சிகையின் ஆசிரியராக 11 வருடங்கள் பணியாற்றியவர். சொல் என்ற சஞ்சிகையின் ஆசிரியராவும் பணியாற்றியுள்ளார். இவர் கடவுளின் பூக்கள், புதிய வார்ப்புக்கள், வேள்வி மலர்கள், மாண்புறு மகளிர் (புகழ் பூத்த ஈழத்துப் பெண்களின் வரலாறு), அனுமன் கதை, ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்,இளைஞர் யுவதிகளுக்கான ஆலோசனை கூறும் நூல்களையும் வெளியிட்டுள்ளார். .இவர் வெளியிட்ட பத்தகங்களான ஈழத்து மாண்புறு மகளிர் இளம் பெண்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் ஆலோசனைகளும் . பெண்ணிய செயல்பாட்டாளரும் ஆவார்.தற்போது கொழும்பில் வசித்து வரும் அவரை அறிமுகம் செய்வதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.
பெண்ணின் குரல்–சஞ்சிகையை வாசிக்க
http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Search?search=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D
திறமை குறைவாக இருந்தால் ஒழிய பெண் என்ற காரணத்தால் பெண்கள் ஒதுக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. மானிட வாழ்வில் ஆண் பெண் தோற்றங்கள் இயற்கையாகவே படைக்கப்பட்டன. இரு இனமும் சமநிலையில் உரிமைகளைப் பொறுத்தவரையில் சமத்துவமாக வாழ்ந்தால்தான் இப்பூவுலக வாழ்வு செழிப்புறும் என்பது எல்லா சிந்தனையாளர்களாலும், சீர்திருத்தக்காரர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. எனவே இந்த உண்மையை நோக்கியே அவரது சிந்தனை, செயல், எழுத்து, பேச்சு என யாவும் உள்ளன. என அவர் கூறுகின்றார்
இதுவரை ஊடறுவில் பிரசுரமாகிய ஈழத்து பெண்படைப்பாளிகள் பற்றிய குறிப்புகளும்…!
– ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி “குறமகள்”
– கிழக்கிலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் “பா. பாலேஸ்வரி.”
– 1960களில் ஈழத்தின் சிறுகதைத்துறைக்குள் பெருமை தேடித்தந்த (யாழ்நங்கை)”அன்னலட்சுமி இராஜதுரை”
– மலையக பெண்களுக்காக குரல் கொடுத்த முதல் தமிழ்ப் பெண்மணி திருமதி “மீனாஷியம்மாள் நடேசய்யர்”
– மலையகத்தின் இலக்கியத் தாரகை “நயீமா சித்தீக்”
– ஈழத்தின் பெண் எழுத்தாளர் “தாமரைச்செல்வி.”
– ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “குந்தவை”
– கிழக்கிலங்கை மூத்த பெண் படைப்பாளி “ராணி சீதரன்”
– ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளி “யோகேஸ்வரி சிவப்பிரகாசம்”
– ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி “சித்ரா நாகநாதன்”
– ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி கவிதா-1963 ஆம் ஆண்டு முதன் முதலில் இவரது சிறுகதைவெளியாகியுள்ளது.
– ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி -சந்திரா தனபாலசிங்கம்
ஈழத்தின் பெண் எழுத்தாளர் சிதம்பரபத்தினி எனும் பத்தினியம்மா திலகநாயகம் போல்.
– ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் -பவானி
– ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “பத்மா” சோமகாந்தன்