சௌந்தரியின் “நீர்த்திரை”

 றஞ்சி 

sownthary.jpg 1

இனமென்பது என்பது எனது அடையாளம்

neerthiraiழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படத்த இயலாமல் போகும் எழுத்துக்களைக் படைப்புக்களை அண்மைக்காலங்களில் நாம் பார்க்கின்றோம்.  80 களுக்கு பிந்திய ஈழத்து இலக்கியங்கள் என்பது ஈழப்போர், மற்றும் புலம்பெயர் வாழ்வுகளை குறித்த இலக்கியமாக பரிணமித்து நிற்கிறது. போர் முற்று பெற்றுவிட்டதாக கூறும் இலங்கை இனவாத அரசுகள் போருக்கு பிறகு நிகழும் வேதனைகள், இழப்பின் சோகங்கள் காணாமல் போனோரின் அவலங்கள் கைதிகளின் சிறைவாசம் அவர்கள் மீதான சித்திரவதைகள், என பலதரப்பட்ட வாழ்வியல் சோகங்கள் இன்னும் தொடருகின்றன. இன்று வரை ஈழப்படைப்பாளிகளால் அல்லது புலம்பெயர்ந்த ஈழத்து படைப்பாளிகளால் தமது படைப்புக்களை இனப்பிரச்சினை, போர், புலம்பெயர்வு ஆகியவற்றை புறந்தள்ளி படைக்க இயலாது உள்ளது என்பது என்னவோ உண்மை தான் ஆனாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பங்களில் ஈழப்போராட்டம் ஒவ்வொருவரினதும் வாழ்விலும் புதையுண்டு உள்ளதாகவே உணருகின்றோம்.

அந்த வகையில் 2015 இல் வெளிவந்த பெண்களின் கவிதைத் தொகுதிகளில் சௌந்தரியின் நீர்த்திரை மிக முக்கியமானது. மக்களோடு உறவாடும் புதிய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பக் கருத்துக்களைக் கலையழகு குன்றாமல் கவிதைவெளிக்குக் கொண்டுவருதல். கவிதைகளிலே பேசப்பட்ட ஒடுக்கப்பட்டோரதும் விளிம்பு நிலையினரதும் அனுபவங்களை புதிய எழுத்துவடிவக் கவிதைகளின் உள்ளடக்கமாக்குதல். கவிஞர்கள் தாம் பெற்ற அரசியல் மற்றும் சமூகவினைப்பாட்டு அனுபவங்களைக் கவிதைகளாக்குதல் எடுத்தாளுதல் போன்றவைகள் சௌந்தரியின் கவிதைகளில் தாராளமாக விரவிக் கிடக்கின்றன. நெடுங்கவிதைகள் வழக்கிழந்து போய்விட்டன என்ற கருத்துகளுக்கு அமைய அவற்றை புறம் தள்ளி வைக்க நம்மிடம் இப்போது நீர்த்திரை கவிதைகள் உள்ளது அவருடைய இந்தத் தொகுப்பில் உள்ளவை கவிதை இலக்கியத்திற்குப் புது மெருகு சேர்ப்பவை. மொழியின் நுண் அழகும் , சிந்தனையும் கூடும் படைப்புக்கள் இவை. வரலாற்றுக்குச் சாட்சியாகக் கவிஞர் நிற்க மறுத்தாலும் தவிர்க்க முடியாமல் கவித்துவ சாட்சியாக மாறும் முரண் நகையும் இந்தத் தொகுப்பில் இழையோடுகிறது.


வீடும் நிலமும் இழந்து
புகலிடத்தில் பொருத்தப்பட்டேன்
ஏந்த வீடு என்னுடையது
குடிபெயர்ந்த இந்த வீடா?
குடியிருந்த அந்த வீடா?

இவ்வரிகள் ; புலம்பெயர்ந்தோரை வதை செய்யக்கூடியது தாய் நிலத்தை இழந்த அந்தரிப்பின் வலி

பாடித் திரிந்த இனத்தின் நேசம்
என்னோடு ஊஞ்சலாடுகின்றது இன;னும்
மண்ணில் தவழ்ந்து புரண்டு
காதலும் கனிவும் சாதலும் வலியும்
இரண்டறக் கலந்து இலக்கணமாகி
இனத்துடன் வளர்ந்த இளையவள் நானே

இனமென்பது என்பது எனது அடையாளம்
இனமென்பது எனது அந்தஸ்து
எனது ஏக்கமும் அதுவே
எனது ஏற்றமும் அதுவே

ஈழ அரசியல்  ஈழத்தமிழர்களை மிக ஆழமாகப் பாதித்துள்ளது. இன்னும் அது அவர்களைப் பாதித்துக்  கொண்டிருக்கிறது. அதுவும் நேரடிப்பாதிப்பு. அவலமும் வலியும் வேதனையும் நிரம்பிய  பாதிப்பு அது. சொந்த நிலத்திலும் அவர்களின் வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இனமென்பது எனது அடையாளம் என்கிறார்

நீயும் நானும்
படித்த புத்தகங்களும்
பதித்த தத்துவங்களும்
முரண்பட்டு நின்றன
முரண்பட்ட கருத்துக்கள்
மோதுகின்ற கணத்தில்
மூச்செறிந்து மௌனித்தோம்
ஏன் இந்த மௌனம்
சொல்ல நினைப்பதை
சொல்லமுடியாத மௌனம்
நம்மை நாமே அறிந்தோமா? இல்லை

வாழ் காலத்தினதும் யதார்த்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டியஅவசியத்தை புறக்கணிக்க முடியாத நிலையின் வெளிப்பாடு இது.

எத்தனை வீடுகள் தமிழனுக்கு
ஏதில முகாம்களில் கூடார வீடுகள்
நாட்டுக்கு நாடு விடுதி வீடுகள்
சிறைக்குள் வாடும் கம்பி வீடுகள்
உயிரைக் குடிக்கும் இராணுவ முகாம்கள்
இனத்தின் சாபமாய் இப்படியம் வீடுகள்
பாதுகாப்பற்று பாழடைந்த வீடுகள்
செல்லடிபட்டு சிதைந்த வீடுகளாய் ஈழமெங்கும் எத்தனை வீடுகள்…

அது வும் சொந்த நிலத்தில் வாழவியலாத விதியை நினைந்தழும் குரல் இந்தப்பெருவெளியில் துடித்துக் கொண்டிருக்கிறது ஒரு தசைத்துண்டாய். தகிக்கும் கூடொன்றின் சொல் இக் கவிதை விரும்புகிற இடத்தில் வாழமுடியாத அவலம்.

பட்டுப் போன பூமியில் எட்டிப் பார்க்கிற விதை தேசம்,ஈழத்தமிழர் படுகின்ற பாடுகளும் அவரது உணர்வுகளும் இங்கே பதிவுபெறுகின்றன 

எனக்காக அழுகின்ற
எனக்கான உறவுகளpன்
பாசச் சிறகுகள் வீசம் வெப்பத்தில்
பத்திரமாக பயணிக்கிறேன்

மனித வாழ்க்கை குறித்த உறவு நிலை என்ற அழிக்க முடியாத மனப்படிமத்தைக் கடக்கவியலாத தத்தளிப்பு, புதிய காலத்தினுள்ளும் புதிய களத்தினுள்ளும் நுழைந்து கொள்ள வேண்டியயதார்த்தம்   புலம் பெயர் வாழ்வும் உறவுகளும் இவற்றில் முக்கியமடைந்துள்ளன.

போராடி போராடி
தோற்கப் பிடிக்காமல்
வெல்லத் தெரியாமல்
தொடர்கிறது பயணம் என்கிறார்

தன்னை, தனது ஆர்வத்தைனது திறமையை தான் அதிகமாக நேசிப்பதாக கூறுகிறார் சௌந்தரி உண்மையில் அது மிகப்பெரிய அவரின் இலக்கியத்துறைக்கும் சேவைக்கும் அவருக்கு நிகராக விளங்குகிறது என்பதை அவரின்ன் செயற்பாட்டினுடாக நாம் காணுகின்றோம். தன்னைத் தானே பாராட்டவும் ஏற்றுக்கொள்ளவும் ஒரு மனசு தேவை அதன் பின்னர் தான் மற்றவர்களின் பாராட்டுக்கள். போலி உறவுகளால் நிரம்பி வழியும் இவ்வுலகில் சௌந்தரியின் இவ் தன் மீதான நேசிப்பானது உயர்வானது தனித்துவமானது. புரிந்தும் புரியாமலும் வாழும் மனிதர்களுக்கிடையில் தன் மீது அதீத நம்பிக்கை வைத்து அவள் பயணிப்பது மெச்சத் தக்கது. அவளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

 

இவ்நூலைப் பெற

Valari .Koodam014@ gmail.com

0091 7871548146

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *