முற்றிலும் ஈழத்தமிழர்களால் மாத்திரம் படைக்கப்பட்ட 10,000 இற்கும் மேற்பட்ட அனைத்து படைப்பு நூல்களும் ஒரே இடத்தில் நவீன முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட நூலகம் ஐரேப்பிய தமிழர் ஆவணக்காப்பகம் (European Tamil Documentation and Research Centre ) ஆகும்.
இது எதிர்கால சந்ததியினரின் சிற்ப்பு ஆய்வுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையிலும், பல்கலைக்கழகங்ககளை இணைக்கக் கூடிய வகையிலும் ஒரு தொண்டு நிறுவனமாக சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது.
எனினும் லண்டன் மாநகரில் இந்நூலகத்தினை அமைப்பதற்கு இடம் கிடைக்காமையால் லூட்டனில் அதன் ஸ்தாபகர் நூலகர் என்.செல்வராஜா அவர்களின் வீட்டின் ஓர் புறத்தில் அமைதியாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
இந்நூலகத்தினை அமைப்பதில் நாட்டம் உள்ளவர்களின் உதவிக்கரங்களை எதிர்பார்க்கின்றோம். அத்துடன் இந்நூலகத்தில் ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களும் இடம்பெறவேண்டுமானால் உங்கள் நூலகளையும் தந்துதவுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்,
European Tamil Documentation and Research Centre
Reg. Charity no :- 1127365
இது உங்களின் பார்வைக்கு