– விஜயலட்சுமி சேகர்:
பெண்ணின் வாழ்வினை மீட்டெடுக்க எம்முடன் இணையுங்கள் – பி. ப 3.30 மணிக்கு:- 04.12.2015
ஓலைக் குடிசையுள்
ஒழுகும் வானத்து நீரையும்
வாட்டும் சூரியப் பொட்டையும்;
விரட்ட
அவளுக்குத் தேவை
கல் வீடுடொன்றே
இன்னும்
காற்றினில் ஆடிடும்
அக்குடிசைக்குள்
இன்று
விக்கி விறைத்துக் கிடக்கும்
அவள் தாயினதும்
பிள்ளைகளினதும்
கண்ணீருக்குள்
மலையாய் புதைந்து
உறைந்து கிடக்கிறது
பயம்..
12 மணி வெள்ளிக்கிழமை
தொழுகை நேரம்
முடிந்த பின்….
முடிந்த பின்….
பயத்தில்
உயிர் பிரிய….
அங்கே
அவள்
தலைக்காய் காத்திருக்கும்
கல் இ கற்குவியலாய்…..
இலங்கையை சேர்ந்த வீட்டுப்பணிப்பெண் ஒருவருக்கு எதிர்வரும் 04.12.2015 அன்று கல் எறிந்து கொலை செய்ய வேண்டும் என சவூதி நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது தொடர்பாக எமது எதிர்ப்பை தெரிவிக்கவும் இவ்வாறான உயிரை பறிக்கும் தண்டனைகளை பெண்கள் செயற்பாட்டாளர்களாகிய நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்பதனையும், சமூகம் மத்தியில் இது தொடர்பாக ஓர் சிந்தனையை ஏற்படுத்தும் நோக்குட னும் எமது அரசு இப்பணிப்பெண்ணை விடயத்தில் அதிக அக்கறையுடன் துரிதமாக செயற்பட்டு இப்பெண்ணை தண்டனையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நேற்றைய தினம் WCDM அங்கத்தவர்கள் ஏனையோருடன் இணைந்து மிக குறுகிய நேரத்தில் ஓர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம்.இதன் தொடர் ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் 03.12.2015 மட்டக்களப்பு நகர் பாலத்தில் பி. ப 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அனைவரும் இதில் பங்கெடுத்து பெண்ணின் வாழ்வினை மீட்டெடுக்க எம்முடன் இணையுங்கள்.