அடையாள மீட்பு (கூகி வா தியாங்கோ)

தமிழில் அ. மங்கை

a.mankai 10s குட்டி முதலாளித்துவ வாதிகளுக்கு இப்போது ஒரு கடந்த காலம் பண்பாடு இலக்கியம் ஆகியவை கிடைத்தன.அவற்றைக் கொண்டு  ஐரோப்பாவின் இனவாத வெறித்தனத்தை  எதிர்கொள்ள முடிந்தது.  இந்த நம்பிக்கை படைப்புகளின் தொனி ஐரோப்பிய பூர்ஷவா நாகரீகத்திற்கு எதிரான கூர்மையானவிமர்சனம் அதன் விளைவுகள் நீக்ரோவியமாதிரி வடிவம் போன்றவையாக உருக் கொண்டன

சர்வதேசிய அளவில் இந்த வர்க்கம், அரசியல,; வணிகம,; கல்வி போன்ற துறைகளில்  புதிதாகக் காலனீயத்திலிருந்து விடுபட்டு வளரத் தொடங்கிய நாடுகளில் தலைமைப் பொறுப்பேற்கத் தொடங்கி இருந்தது. ஆல்லது வளர்ச்சிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது  இந்த இலக்கியம் ஆப்பிரிக்காவை உலகிற்கு விளக்க உதவியது. ஆப்பிரிக்காவிற்கு ஒரு கடந்த காலம் உண்டு. மதிப்பும் மனிதாய சிக்கல்களும் கொண்ட பண்பாடு உண்டு என அறிவித்தது.

உள்நாட்டில் இந்த இலக்கியம் இந்த வர்க்கத்திற்கு தொடர்ச்சியான மரபைக் கொடுத்தது. பொதுவான இலக்கியச் சான்றுகளைக் கொடுத்தது. விவசாயப் பண்பாட்டில் ஊன்றிய பிடிப்பற்ற வேர்களிலும் நகர்ப்புற பூர்ஷ்வா பண்பாட்டிலும் அவர்களுக்கு கிடைக்காத மரபை இந்த இலக்கியம் கொடுத்தது. இலக்கியம் இவ்வர்க்கத்திற்கு நம்பிக்கை தந்தது.  குட்டி முதலாளித்துவ வாதிகளுக்கு  இப்போது ஒரு கடந்த காலம் பண்பாடு இலக்கியம் ஆகியவை கிடைத்தன. அவற்றைக் கொண்டு  ஐரோப்பாவின் இனவாத வெறித்தனத்தை  எதிர்கொள்ள முடிந்தது.  இந்த நம்பிக்கை படைப்புகளின் தொனி ஐரோப்பிய பூர்ஷவா  நாகரீகத்திற்கு எதிரான கூர்மையான விமர்சனம் அதன் விளைவுகள் நீக்ரோவிய மாதிரி வடிவம் போன்றவையாக உருக் கொண்டன. உலகிற்கு புதிதாக  ஒன்றைத் தர ஆப்பிரிக்காவால் முடியும் எனக் காட்டியது விடுதலைக்கு முன்பும் விடுதலை கிடைத்த உடனேயும் குட்டி முடுதலாளித்துவ வாதிகளால் நாட்டுப்பற்று மிக்க  தேசியவாதப் பிரிவினர்  அரசியிலில் பெறந்ற இடத்தைப் பிரதிபலித்தது. 

போருக்கு பிந்தைய உலகில் தேசிய ஜனநாயக புரட்சிகர காலனீய எதிர்ப்பு சீனா இந்தியா போன்ற நாடுகளில் வலுப்பெற்றன. கென்யா, அல்ஜீரியாவில் ஆயுத எழுச்சிகள் ஏற்பட்டன. கானா நைஜீரியா நாடுகள் விடுதலையை எதிர்நோக்கி இருந்தன. ஆசியா ஆப்பரிக்கா இலத்தீன் அமெரிக்கா எதிர்ப்பு எழுச்சிகிளன் பகுதியாகவே தொடக்கத்தில் இந்த இலக்கியம் செயற்பட்டது. இந்த வழிப்புணர்வால் இந்த இலக்கயம் எழுச்சி பெற்றது என தகவல்களை அ. மங்கை மொழிபெயர்த்துள்ள கூகி வா தியாங்கோவின் அடையாள மீட்பு நமக்கு எடுத்துக் கூறுகிறது.

இப்புத்தகத்தை வல்லினம் வெளியிட்டுள்ளது.

தொடர்புகட்கு

வல்லினம் எண், 9Y பிளாக், அரசு கடியிருப்பு
இலாசுப்பேட்டை, புதுவை -605008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *