எஸ்தர் – மலையகம் – (திருகோணமலையிலிருந்து)
நீங்கள் புலம்பெயர்ந்த நாளில் பனி மரங்கள்
உங்களுடன் பேச நினைத்தது
தவறாமல்; சிறைபிடிக்கும்
கொடும் குளிரைப்பற்றி
அப்போதும் அதன் வாய்கள் உறைந்துவிட்டிருந்தன
கெட்டிப் பனியில்.
தஞ்சம் அடைந்திருந்த உங்களின் நெற்றிகளில்
வெயிலைப் பச்சைக் குத்தியிருந்தும்
உறையும் பனி அவர்களை உறைய வைத்தது.
வெயில் உங்களை சிறை நீக்க சாசனம்
ஒன்றை வரைந்து வியர்த்த நாளில்
காலங்கள் உறைந்து போயின!!
(குளிர்காலத்தில் அவதிப்படும் புலம்பெயர்ந்த அகதிகளுக்கு- சமர்ப்பணம்)