உலக சிறுவர் தினமும் துஸ்பிரயோக சாத்தான்களும்

எஸ்தர் மலையகம் (திருகோணமலையிலிருந்து)

 

women-strugle

 

child-face-150x1242015 ம் ஆண்டு இலங்கையில் பல வரலாற்று சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. வீழ்த்தவே முடியாத என நினைத்த அரச தலைமைகள் தலைகீழாக வீழ்த்தப்பட்டது. மண்மேடு சரிவதுப் போல சரசரவென சரிந்து விட்டது. புதிய அரசும் பலதரப்பட்ட வாக்குறுதிகளுடனும் 100 நாள் வேலைத்திட்டத்துடனும் ஆட்சிக்கு வந்தது. மாற்றத்தைப் போலவே மாற்றங்களும் இடம்பெற்றவண்ணமும் உள்ளது. நாடு நிம்மதிப் பயணத்துடனும் விலைவாசி இறக்கத்தடனும் நகர்ந்துக் கொண்டிருந்த வேளை சமுகத்தல் களைத்தெரியப்படாமல் காணப்படும் விசம்மிகளால் அப்பாவிக் கூட்டம் ஆண்குறிகளால் குறிவைக்கப்படுகின்றது. அதில் அடங்குவது பெண்களும் சிறார்களுமே. வித்தியாவின் ஆத்மா சாந்தி அடைவதற்க்குள் அடுத்த மலரும் மொட்டு ஒன்று பிடுங்கி கசக்கி எறியப்பட்டுள்ளது. அதுதான் தென்னிலங்கைளில் கொழும்பை அண்மித்தப் பகுதியான கம்பகா என்ற இடத்தில் கொட்டதெனிய படல்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சேயா சதொவ்மி என்ற 4 வயது நிரம்பிய பிஞ்சு பெண்பிள்ளை இரவில் வீட்டில் நித்திரையில் இருந்த வேளை மர்ம நபரால் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வண்புனர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார்.அவரது சடலம் சிறுமி வசித்த வீட்டிலிருந்த200 மீட்டர் தொலைவில் உள்ள ஓடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதை கேள்விப்பட்டதும் இலங்கையில் இருக்கிறோமா அல்லது நரகத்தில் இருக்கிறோமா என தோன்றியது ஆசியாவின் ஆச்சரியத்தைப் பார்த்து வாய்பிளந்த அலற வேண்டியதாகிவிட்டது. இதனை இக்குடும்பத்துக்க தெரிந்த நன்கு பரிச்சயமுள்ள நபரொருவர் புரிந்தள்ளார். அவரையும் அவர் சம்பந்தமான சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.நாட்டு மக்கள் இதற்கான கண்டனத்தை இன்றுவரை பதிவு செய்தக் கொண்டு வருகிறார்கள்.

நாட்டின் தலைவர் ஜனாதிபதி அவர்களிடம் நாட்டு மக்களுக்கு சோறு வேண்டுமோ இல்லையோ தூக்குத் தண்டனை சட்டமாகக் கொண்டு வர வேண்டும் எனக் கதறுகிறார்கள் ஜனதிபதி அவர்களும் நாட்டு மக்கள் அமைதி அடைய வேண்டும் தூக்கு தண்டனையை மீண்டும் கொண்டு வருவதுப்பற்றி தீவிரமாக முயற்சிகள் எடுப்பதாகக் வாக்குறுதியளித்துள்ளார். நாட்டின் பரவலான இடங்களில் சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் அதிகரித்துக் nhண்டே செல்கின்றன. சிறுமியின் கொலையாளி என சந்தேகிக்கப்பட்ட நபர் பொலிசாரினால் துரிதமாக கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கும் மருத்துவ பரிசோதனைகளுக்கும் உட்படுத்தயுள்ளார்கள் மேலும் அவரது சகோதரர் ஒருவரையும் 

கைது செய்தள்ளனர்.நாட்டில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு அவசியமாகும்.அதனை பிள்ளைகளின் பெற்றோரும் குடும்பத்தினரும் உறுதி செய்தல் அவசியம். சிவில் சமுகத்தின் பங்களிப்பு இதில் அத்தியவசியமாகும்.

இலங்கை இந்து சமுத்திரத்தின் கழன்று விழாத கண்ணீர்துளி.மரத்தில் ஏறி விழுந்தவனை மாடேறி மிதிப்பதுப் போல் துஸ்பிரயோகம் தலைவிரித்தாடுகின்றது. குடும்பத்தவர்களின் கண்காணிப்பு தவறும் பட்சத்தில் குழந்தைகள் பாதகாப்பற்ற கிணறுகளில் விழுவதும் ஆறுகளில் விழுவதும் ஏன் வீட்டின் மீன் தொட்டியில் கூட விழுந்து உயிரிழந்த சம்பவம் பதிவாகிக் கொண்டு வருகின்றது.

இதனால்தான் இம்முறை தேசிய இளைஞர் மன்றம் (யேவழையெட லழரவா ஊழரnஉடை )இம்முறை உலக சிறுவர் தினத்தில் ‘பிள்ளைகளை உயிர்ப் போல் ; காப்போம்” எனற வாசகத்துடன் பல விழிப்புணர்வு திட்டத்தை நாடு முழுதும் செயல்படுத்தியது.

‘பிள்ளைகளை உயிர் போல் பாதுகாப்போம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *