எஸ்தர்.(மலையகம்) திருகோணமலையிலிருந்து.
நீ அங்கு இல்லை என்று தெரிந்தப்பின்னும்
உன் சாலைகளை தேடி வந்திருக்கிறேன்
நீண்ட நாட்களுக்கு பின்,
அது வெறுச்சோடிக் கிடப்பதைக் குறித்து
கவலைகள் மட்டும் என்னை தொடரவில்லை
அங்கே சிரிப்பூட்டும் கேலிகளும் சிலிர்ப்பூட்டும்
கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றது, புறாக்கள் அவற்றை
குழுமியிருந்து கொத்திச் சுவைக்கின்றது.
வளையும் சாலைகள் உன் பிரிவைப் பற்றி என்னிடம்
அலட்டுகின்றது.
மேலும் ஒரு வல்லூறு ஒன்று எட்ட வானத்தில் வட்டமடித்து
வட்டமடித்து சைகை காட்டுகிறது மீந்துரிக்கும் உன் காதலைக்
கொத்திக் கொண்டு பறக்க!!
நான் சாலைகளை கடந்து ஓடுகிறேன் நீ அமர்ந்து பாடும் மதிலின்
மேலே ஏறுகிறேன்.
கிழவி ஒருத்தி புறாக்களுக்கு உணவு ஊட்டி திருப்தியுடன்
பொக்கை வாயில் ஏதோ பாடுகிறாள்
நாளை நீயும் இதே சாலைகளில் நடக்கலாம் – உன் குழந்iயுடன்
உன் காதலை ஒரு புறாவைப்போல குறு குறுத்துக்கொண்டு!!
இவள் இவளேதான்