தகவல் -ஜெய்சங்கர்-
மேதகைமையுள்ளவர்களே!
இனத்துவ சமயம்சார் சமுதாயங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேற்கொள்வது இலங்கையின் புதிய அரசாங்கமானது எதிர் கொள்ளும் மிகவும் பாரிய சவால்களுள் ஒன்றாகும். இந்தச் சவால் ஒரு மாபெரும் சவாலாகவே உள்ளது. ஏனெனில், 2009 ஆம்ஆண்டில், இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த காலம் தொட்டு, ஆட்சியில் உள்ள அரசு சிங்கள இனப் பெரும்பான்மையினரின் மேலாதிக்கம் தழுவிய கருத்தியலையே மீளவும் வலியுறுத்தியும் பலப்படுத்தியும், அதே வேளை சிறுபான்மையினரை அடக்கி ஆண்டும் வந்திருக்கின்றது. இந்தத் தருணத்தில்தான்இ நாங்கள் அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பெற்ற அறிக்கைதொடர்பாகஇ அதிலும் குறிப்பாக நடைமுறையிலுள்ள அரசினால் இணைந்து மேற்கொள்ளப்பட்ட அறிக்கை தொடர்பாக ஒரு பதிலிறுப்பினைச் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதன்கீழ்க் கையொப்பமிட்டுள்ள நாங்கள் இலங்கையின் ஆயுதந்தாங்கிய படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நிகழ்ந்;த யுத்தத்தின்போது வௌ;வேறு நிலைப்பாடுகளை எடுத்திருந்தோம.; எம்மில் ஒரு சிலர் யுத்தத்தை எதிர்த்தோம். அதேவேளை மேலும் சிலர் இராணுவரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தோம். எவ்வாறாயினும் யுத்தம் பற்றிய இத்தகைய கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் 2009ஆம் வருடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டபின், அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் நடத்தைப் போக்கானது நாட்டில் அமுலில் இருந்த இனத்துவ பதற்ற நிலமைகளை மேலும் சிக்கலாக்குவதாகவே அமைந்தது என்பது எமது கருத்தாகும். எந்தவொரு யுத்தமும் எத்தகையதொரு மனித உரிமை மீறல்களுமின்றி புரியப்பட்டதாக எவரும் கொண்டாட முடியாது. போரானது போர்க்குற்றம் புரிந்தோருடனும் போருக்கு பலிக்கடாவாக்கபட்டோருடனுமே முடிந்திருக்கின்றது. அண்மைய ஐ.நா. சபை அறிக்கையானது யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை பலமான சான்றாதாரங்களுடன் நிருபணம் செய்துள்ளது. எமது சொந்த அவதானிப்புக்களும் அனுபவங்களும் எமது சக பிரஜைகள் விசேடமாக வடக்கு வாழ் பிரஜைகள் அனுபவித்த துயரங்கள், துன்பங்கள், பெரும் இழப்புக்கள், யுத்த வடுக்கள் போன்றவற்றிற்கு அத்தாட்சியாக உள்ளன.
இறுதியாக ஆட்சிபுரிந்த அரசாங்கம் யத்தத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட ,இவ்வாறான இழப்புக்களை மறைப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளே தேசிய நல்லிணக்கத்துக்கு பெரும் தடையாக இருந்து வருகின்றன. யுத்த இழப்புக்கள்இ வன்முறைகள் போன்றவற்றை கூறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தேசிய விரோதஇ தேசத்துரோக பயங்கரவாத நடவடிக்கைகளாகச் சித்தரிக்க அரசாங்கம் முற்பட்டது. இலங்கை அரசாங்கத்தினால் சொந்தம் கொண்டாடப்படும் இந்த யுத்தவெற்றியானது சொந்த நாட்டுப் பிரஜைகளுக்கு எதிராக ஈட்டப்பட்ட ஒரு வெற்றியாகும் என்பதனையும்இ இதன் காரணமாக நாட்டைக் கட்டியெழுப்புதலில் வரலாற்றுத் தோல்விகள் எதிர்கொள்ளப்பட்டன என்பதனையும் நினைவில் கொண்டுஇ அரசானது மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு மறுப்பேதும் சொல்லாது பதிலளிக்க வேண்டிய பொறுப்பையும் கொண்டிருக்கின்றது.
எனவே இந்த யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புக்களும், துன்பங்களும், மனவடுக்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடொன்றை நாங்கள் கொண்டிருக்கின்றோம். மனித உரிமை மீறலுக்குள்ளானவர்கள் அனைவரும் அவர்களின் கதைகளும்; செவிமடுக்கப்படுவதற்கும், குறிக்கப்படுவதற்குமான தகைமையுடையவராவார்கள். மேற்படி இந்த அறிக்கையானது நாட்டின் தென்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களையுங்கூட ஆவணப்படுத்தியுள்ளமை குறிப்பிடப்படவேண்டியதாகும். “பயங்கரவாதத்தை தோற்கடித்தல்”, “நாட்டின் இறைமையை பாதுகாத்தல்”; போன்ற கதையாடல்களால் உரிமைகள் மீறப்பட்டுள்ளோரின் துயரமும், வருத்தமும், இழப்பும், வெறுமனே முற்றாக அலட்சியப்படுத்தவோ, புறக்கணிப்புச் செய்துவிடவோ முடியாது. இந்த அறிக்கையை இலங்கைக்கு எதிரான ஒரு அறிக்கை என்று காட்டுவதற்கு சில குழுக்களும், தனிநபர்களும், தொலைதொடர்பு சாதனங்களும் மேற்கொண்டுவரும் பிரயத்தனங்கள் கவலைக்குரியனவாகும். இந்த முயற்சி சில இலங்கைப் பிரஜைகள் பெறுமதியற்றவர்கள், மற்றவர்களை விட பலிகொடுக்கப்படக்கூடியவர்கள்; என்றே கருதுகிறது. எனவே, மேற்படி காரணங்களை முன்னிட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதனையும், அவ்வாறான மீறல்களுக்கு பொறுப்பானவர்களை பொறுப்புக் கூற வைப்பதனை நலிவுறச்செய்யும்இ பிரயத்தனத்தையும் நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். இந்த விடயத்தில் தலையிடும் முயற்சிகளை மேற்குலக நாடுகளின் சதிகள், இறைமைக்கு எதிரான தாக்குதல்கள்இ யுத்த வீரர்களை அவமதித்தல்; என்று சட்டகப்படுத்த எடுக்கும் முயற்சிகளை நாங்கள் அவதானிக்கின்றோம். இவைகள்; நல்லிணக்கம், நலமாக்கல் போன்றவைகளுக்கு பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு பிரஜையினதும் மனித உரிமைகளை பேணுவது இலங்கையின் சர்வதேச கடப்பாடாகும் என்பதை இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும், விசேடமாக மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யும் முயற்சிகளை எதிர்ப்போர்களுக்கும், சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.
இதன் காரணமாக, நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கும்இ சகல அரசியல் கட்சிகளுக்கும், ரு மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்களுக்கும்இ ருர்ஊசு தீர்மானத்தினை முன் மொழிவு செய்தோருக்கும் யுத்தத்தின் போது துயரங்களுக்கும் இழப்புக்களுக்கும் உள்ளானோரின் கவலைகளும் தேவைகளும் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படபோகும் எந்த பொறிமுறைகளிலும் முன்னிற்கும் அம்சமாக உள்ளடக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். இத்தேவைகள் அவர்களுடைய பாதுகாப்போடு மட்டும் தொடர்புபட்டது என்பதன்றி சமூக உளவியல்சார் மற்றும்இ நலமே வாழும் நிலமைகளையும் கருத்தில் கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். அத்துடன் மனித உரிமை மீறல்களுக்கு இலக்கானவர்கள் மீண்டும் உள அதிர்ச்சி இன்னலுக்கு ஆளாக்கப்படாதிருப்பதையும்- அதாவது இந்த முயற்சியினூடாக சமூக உளவியல்சார் ஆதரவு விசாரணைகளுக்கு முன்னரும்இ விசாரணைகளுக்குப் பின்னரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருந்துவருவதையும் நாங்கள் உறுதி செய்யவேண்டும். இந்த வகையில் இப்போது நாங்கள் வலியுறுத்துவது நீதி விசாரணை மூலம் தண்டனை கொடுக்கக்கூடிய விசாரணை செயன்முறைகள் போன்றவைகளை அல்ல மாறாக பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை (பொருள்ரீதியானஈ உணர்வுரீதியானஇ சமூகரீதியான பாதுகாப்புகள்) கருத்திற் கொண்டு பதிலிறுக்கக்கூடிய ஒரு செயன்முறையே. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் கவனத்தில் கொள்ளக் கூடிய செயன்முறையாக இருக்க வேண்டும். எனவே சாத்தியமான முறையில் அகல்விரிவான புலப்பதிவுடன் இப்பிச்சினைகளின் நீதியை அணுகுதல் வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களையும், மனவடுக்களையும் பயன்படுத்தி செய்யப்படும் குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட எல்லா செயற்பாடுகளை நிறுத்துமாறு எல்லா கட்சிகளையும் நாங்கள் உறுதியாக வேண்டிக்கொள்கின்றோம். இலங்கை அரசாங்கமும், ஐ நா. வும் பொறுப்புக்கூறல் செயன்முறையை மேலும் பொருளுள்ளதாக்குவதற்கு ஏதோ தனிநபர்க குழு அமைப்பு போன்றனவற்றின் மதிப்பைக் கட்டியெழுப்பும் ஒரு அப்பியாசம் என்ற தோரணையில் மேற்கொள்ளாமல் அர்த்தபு~;டியான ஒரு பொறுப்புக்கூறல் செயன்முறையாக இருப்பதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
இந்த வகையில் விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறைகள் சுயாதீனமானதாகவும்இ நியாயாதிக்கமானதாகவும் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என நாங்கள் கவனம் எடுக்கிறோம். கடந்த கால அரச நீதித்துறைகளில் இருந்த சீர்கேடுகளை கருத்திற் கொண்டுஇ தனியே உள்நாட்டுப் பொறிமுறையானது நீதியை உறுதிப்படுத்தாது என்றும்இ பாதிக்கப்பட்ட மக்களிடம் நம்பிக்கையை வளர்க்காது என்றும் நாங்கள் கருதுகிறோம். வெறுமனே சர்வதேச பங்கேற்பாளர்களின் பிரசன்னம் மட்டும் இவைகளை உறுதிப்படுத்தாது என நினைக்கிறோம். தென்னாபிரிக்கா. கம்போடியா போன்ற நாடுகளிலிருந்த இதே மாதிரியாக செயன்முறைகளை கற்றுக் கொண்டு அந்த கற்றறிந்த பாடங்களை இலங்கையின் செயன்முறைகளிலும், நிறுவனங்களிலும் பிரயோகிப்பதற்கு இதற்கு பொறுப்பான எல்லோருக்கும் நாங்கள் அழைப்புவிடுக்கிறோம்.
இதன் கீழ்க் கையொப்பமிட்டுள்ள நாங்கள் மீளவலியுறுத்திக் கூறிக்கொள்வது என்னவென்றால் யுத்த காலப் பகுதியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை எவ்வாறு கையாளப்போகிறோம் என்பதே உண்மையான சனநாயகப் பண்புகளையும், பன்மைத்துவத்தையும் கொண்ட எமது நாட்டின் நல்லிணக்கத்திற்கும், நலமாற்றலுக்கும், மீள்கட்டுமானத்திற்கும் மிகவும் முக்கியமான தேவைப்படும் குறிக்கோளாக இருக்கிறது. கடந்த காலத்தில் நாங்கள் செய்த பிழைகளை குறிப்பிடாமல் நாங்கள் ஒரு நாடாகவும் சமூகமாகவும் முன்னோக்கி நகர முடியாது.
01. பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட கொழும்பு பல்லைக்கழகம்
02. கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி கொழும்பு பல்லைக்கழகம்
03. கலாநிதி நீவிஸ் மொறாயஸ் திறந்த பல்லைக்கழகம்
04. கலாநிதி மஹிம் மெண்டிஸ் திறந்த பல்லைக்கழகம்
05. திலிபா விதாரண திறந்த பல்லைக்கழகம்
06. ஹரிணி அமரசூரிய திறந்த பல்லைக்கழகம்
07. கலாநிதி ஹர்சனா ரம்புக்வல்ல திறந்த பல்லைக்கழகம்
08. கலாநிதி பர்சானா ஹனிபா கொழும்பு பல்கலைக்கழகம்
09. கலாநிதி தியடோர் பெர்னாண்டோ திறந்த பல்லைக்கழகம்
10. பேராசிரியர் கமீலா சமரசிங்க கொழும்பு பல்லைக்கழகம்
11. என்.ஜீ.ஏ. கருணாதிலக களனி பல்லைக்கழகம்
12. சிதுமனி ரத்மலாலா மொரட்டுவ பல்கலைக்கழகம்
13. கலாநிதி அபுபக்கர் றமீஸ் தென்கிழக்கு பல்லைக்கழகம்
14. கலாநிதி பிரபாத் ஜயசிங்க கொழும்பு பல்கலைக்கழகம்
15. கலாநிதி பவித்ரா கைலாசபதி கொழும்பு பல்கலைக்கழகம்
16. கலாநிதி ஜெயசங்கர் சிவஞானம் கிழக்குபல்கலைக்கழகம்
17. கலாநிதி சங்கரப்பிள்ளை அறிவழகன் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
18. கலாநிதி சுமதி சிவமோகன் பேராதனை பல்கலைக்கழகம்
19. அதுல குமார சமரகோன் திறந்த பல்கலைக்கழகம்
20. கலாநிதி றுவான் வீரசிங்க கொழும்பு பல்கலைக்கழகம்
21. டினேஸ் சமரரத்ன கொழும்பு பல்கலைக்கழகம்
22. உபாலி பன்னிலாகே றுகுணு பல்கலைக்கழகம்
23. கலாநிதி ஜானகி ஜெயவர்தன கொழும்பு பல்கலைக்கழகம்
24. கலாநிதி ஏ.டபிள்யு. விஜேரத்ன சப்ரகமுவ பல்கலைக்கழகம்
25. கலாநிதி றொமொலா றசூல் களனி பல்கலைக்கழகம்
26. கலாநிதி சந்திரபோஸ் சுப்பையா திறந்த பல்கலைக்கழகம்
27. கலாநிதி தினுகா விஜேதுங்க கொழும்பு பல்கலைக்கழகம்
28. கலாநிதி டீ.எச்.எஸ். மைத்திரிபால பேராதனை பல்கலைக்கழகம்
29. கலாநிதி கௌசல்ய பெரேரா களனி பல்கலைக்கழகம்
30. பேராசிரியை நிலூபர் டீமெல் கொழும்பு பல்கலைக்கழகம்
31. கலாநிதி ஜே. கென்னடி கிழக்கு பல்கலைக்கழகம்
32. கலாநிதி சியாமினி ஹெற்றியாராச்சி களனி பல்கலைக்கழகம்
33. சந்திரகுப்த தேனுவர கட்புல ஆற்றுகை கலைகள் பல்கலைக்கழகம்
34. கலாநிதி ஜெயரட்னம் ஜெயதேவன் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
35. கலாநிதி கிரிஸ்ணகுமாhர் திறந்த பல்கலைக்கழகம்
36. பேராசிரியர் பிரியன் டயஸ் மொரட்டுவ பல்கலைக்கழகம்
37. கலாநிதி றணில் டீ குணரட்ண கொழும்பு பல்கலைக்கழகம்
38. கிரிசாந்த பிரட்ரிக்ஸ் கொழும்பு பல்கலைக்கழகம்
39. கலாநிதி ஜெயசீலன் குணசீலன் வவுனியா வளாகம்
40. ரவி டீ மெல் திறந்த பல்கலைக்கழகம்
41. எஸ். செல்வராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழகம்