பவானி
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முதன் முதலாக பெண்ணிய வாதத்தை முன்வைத்தவர் பவானி ஆழ்வாப்பிள்ளை சிறுகதை மூலம் எல்லாரதும் கவனத்தையும் ஈர்த்தார்.
என கூறப்படுகிறது. பேராதனை பல்கலைக்கழத்தில் பட்டதாரியான பவானி 1960 களில் மிகத் துணிச்சலாக தன் சிறுகதைகள்மூலம் முன் வைத்த பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை எழுத்தில் சிறுகதைகளாக எழுதியவர் மனிதர்களின் உணர்வுகளைத் தம் சிறுகதைகளில் பல கருத்துக்களோடு சிறுகதைகளாக தந்துள்ளார். .லக்சுமி, பொரிக்காத முட்டை, மன்னிப்பாரா?’, காப்பு, ‘விடிவை நோக்கி’, ‘சரியா தப்பா?’, ‘பிரார்த்தனைஎன்பன பவானியின் தரமான சிறுகதைகளாகவுள்ளன. ‘கடவுளரும் மனிதரும்’ அவரது சிறுகதைகள் அடங்கிய தொகுதியாகும். அர்த்தமற்ற சில பண்பாட்டுக் கொள்கைகள் எப்படி பெண்ணையும், ஆணையும் எப்படி அலைக்கழிக்கின்றன அவர்கள் எப்படி பாரிய தாக்குத்திற்கு உட்படுகிறார்கள் என்பதையும் அவர்கள் பண்பாட்டிலிருந்து இறங்கிய நிலையிலிருந்தும் தங்கள் உரிமைகளை பேசுவதை தனது சிறுகதைகளை எழுதியுள்ளார்…!
இவர் எழுதிய சிறுகதைகள் கடவுளரும் மனிதரும் தொகுப்பாக வெளிவந்துள்ளது
http://noolaham.net/project/11/1060/1060.pdf
பவானியின் போட்டோவை எடுத்து தந்த பத்மநாப ஐயருக்கு நன்றி
இதுவரை ஊடறுவில் பிரசுரமாகிய ஈழத்து பெண்படைப்பாளிகள் பற்றிய குறிப்புகளும்…!
– ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி “குறமகள்”
– கிழக்கிலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் “பா. பாலேஸ்வரி.”
– 1960களில் ஈழத்தின் சிறுகதைத்துறைக்குள் பெருமை தேடித்தந்த (யாழ்நங்கை)”அன்னலட்சுமி இராஜதுரை”
– மலையக பெண்களுக்காக குரல் கொடுத்த முதல் தமிழ்ப் பெண்மணி திருமதி “மீனாஷியம்மாள் நடேசய்யர்”
– மலையகத்தின் இலக்கியத் தாரகை “நயீமா சித்தீக்”
– ஈழத்தின் பெண் எழுத்தாளர் “தாமரைச்செல்வி.”
– ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “குந்தவை”
– கிழக்கிலங்கை மூத்த பெண் படைப்பாளி “ராணி சீதரன்”
– ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளி “யோகேஸ்வரி சிவப்பிரகாசம்”
– ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி “சித்ரா நாகநாதன்”
– ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி கவிதா-1963 ஆம் ஆண்டு முதன் முதலில் இவரது சிறுகதைவெளியாகியுள்ளது.
– ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி -சந்திரா தனபாலசிங்கம்ஈழத்தின் பெண் எழுத்தாளர் சிதம்பரபத்தினி எனும் பத்தினியம்மா திலகநாயகம் போல்.