சுனிலா அபயசேகர பல தசாப்தங்களாக பெண்களின் உரிமைகள்,பால்நிலை சமத்துவம் என்பவற்றுக்காக போராடியவர் தான் செய்த வேலைகளின் எண்ணக்கருக்களை தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய பெண் சிறுபான்மையினரின் உரிமைகளை ஜனநாயக வழியில் பெறவேண்டும் எனும் உறுதிப்பாட்டுன் வாழ்நத பெண் ஆவார்.
2008ம் ஆண்டு மனித உரிமை அமைப்பின்; மனித உரிமைகள் பாதுகாவலர் என்ற ((Human Rights Watch) விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஆவ் விருது கிடைத்தபோது அவர் கூறிய கருத்துக்கள்.
இரு தசாப்தங்களுக்கு முன்பு மனித உரிமைகள் தொடர்பான பணியை நான் ஆரம்பித்தபோது அது இலகுவாக இருக்கவில்லை. அரசின் பங்களிப்பு ஜனநாயக கூட்டமைப்புகளை சிதைக்கும் வேறுபட்ட அரசியல் தரப்பினர்இ இராணுவமயமாக்கல் போன்ற சூழலை உருவாக்குதல் என்பன தொடர்பாக கேள்வி எழுப்பியபோது பல தரப்புகளிலிருந்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன அத்துடன் குழப்பத்தை ஏற்படுத்துபவரெனவும் சில வேளைகளில் துரோகியெனவும் முத்திரைக் குத்தப்பட்பட்டு கொலை மிரட்டல்களுக்கு ஆளானேன் என்றார் சுனிலா. அத்துடன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் அனைத்து தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தளராது போராடிவரும் உறுதிப்பாடும் நேர்மையான கொள்கைப்பற்றுதியுமுடைய பெண்மணி சுனிலா எனக் கூறப்படுகிறது. அவர் இன்று எம்முடன் இல்லை
2008 ம் ஆண்டு ஊடறுவில் வெளியான அவருக்கான வாழ்த்துச் செய்தி