– மாலதி மைத்ரி
பெண்ணியத்திற்கென தமிழில் பதிப்பு மற்றும் நூல்வெளியீடுகளுக்கான ஒரு இயக்கம் தொடங்கவேண்டுமென்ற என் நெடுங்காலக் கனவு கைகூடியிருக்கிறது. அணங்கு இதழைத் தொடர்ந்து கொண்டு வருவதற்கும் அணங்கு பதிப்பகம் நடத்துவதற்குமான பல வாய்ப்புகள் வந்தபோதும் தொண்டு நிறுவனங்கள் அல்லது செல்வாக்குள்ள தனிநபர்களிடம் நிதி பெற்று என் கருத்தியலுக்குப் பொருந்தாத வகையில் அணங்கு செயல்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அணங்கின் தனித்தன்மை என்றும் எதற்காகவும் விலை பேசப்படக்கூடாது என்பதற்கான தயாரிப்புடன் பத்தாண்டுகள் கடந்துவிட்டன, பத்தாண்டுகள் வரலாற்றில் மிகப் பெரிய காலம் என்றாலும் தற்போது பதிப்பகம் சாத்தியமாயிருக்கிறது.
மார்க்சிய, தலித்திய, பெரியாரிய, விளிம்புநிலை பெண்ணிய எழுத்திற்கான தளம் அணங்கு. தமிழில் பதிப்பக நிறுவனங்களின் குழு அரசியலிலிருந்து விடுபட விழையும் பெண் படைப்பாளிகளுக்கு களமாக அமைவதுடன் புதிய பெண்ணிய எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் தளமாகவும் அணங்கு இருக்கும். பெண்ணியப் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
மின்னஞ்சல் : anangufeministpublication@gmail.com
தொலைபேசி: +91 9968454175