புதியமாதவி
இரு நாட்களாக கைகளில் ஒலிக்காத இளவேனில் கவிதை தொகுப்பு.
தான்யா & பிரதிபா தில்லைநாதன் தொகுப்பில் புலம்பெயர் ஈழப்பெண்களின் கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தொகுப்பு
கனமானதாக இருக்கிறது என்பதுடன் அறிமுகத்தில் கனடாவிலிருந்து
என்று எழுதவேண்டிய இடத்தில் பிரதிபா அவர்கள் எழுதுகிறார். :
மார்கழி, 2003 – -05 குளிர்காலம், ஐரோப்பாவிலிருந்து
குடியேறிய ஆக்கிரமிப்பாளர்களால் “கனடா” எனப்படுகிற – பூர்விகர்களின் – திருடப்பட்ட நிலத்திலிருந்து . (மறு திருத்தங்களுடன்)
இந்த வரிகளைப் பலமுறை வாசித்துவிட்டேன். sinox என்றழைக்கபப்டும் அமெரிக்க மலைவாழ் மக்களின் போராட்டம் நினைவுக்கு வந்து அலைக்கழிக்கிறது. அந்த மலைவாழ் மக்கள் சொல்கிறார்கள்
அமெரிக்க மண்ணின் மைந்தர்களின் குதிரைகளை அபகரித்தார்கள். மொழியை ஊமையாக்கினார்கள்.அவர்களின் சடங்கு சமய நம்பிக்கைகளை குற்றமாக்கினார்கள். தடை செய்தார்கள். ஒரு நூற்றாண்டுக்கு மேலாக எங்கள் குருக்கள் தலைமறைவு வாழ்க்கை
வாழ்ந்தார்கள். இத்தனைக்கும் பிறகும் எங்கள் நம்பிக்கைகளை அவர்களால் துடைத்து எடுத்துவிட முடியவில்லை. எங்கள் மொழியின் அடையாளங்களும் எளிதில் மறைந்துவிடக்கூடியது அல்ல.
அம்மக்கள் அமெரிக்க வல்லரசை எதிர்த்து தங்களின் பூர்விகமான கறுப்பு மலைக்காக போராடினார்கள். அந்த மலையில் தான் தங்கமிருப்பது கண்டறியபப்ட்டது. அவர்களின் போராட்ட வரலாறு நூற்றாண்டுகளைக் கடநது தொடர்வது. 1980, ஜூன் 30 யு.எஸ் உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் சொன்னது: 1877 ஆம் ஆண்டின் மதிப்புபடி $ 17.5 மில்லியன் டாலர். அத்துடன் 103 வருட வட்டியும் சேர்த்து $ 106 மில்லியன் அரசு அம்மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னது.
2009 டிசம்பர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கையெப்பமிட்ட (defence appropriations bill) சட்ட வரைவு ” அமெரிக்க மண்ணின் மைந்தர்களுக்கு அமெரிக்க நாட்டின் அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட வங்கொடுமைகளுக்கும் அவமரியாதைகளுக்கும் பகிரங்கமாக மன்ன்னிப்பு கோரி இருக்கிறது.