சரோஜா
படங்கள்: வின்செண்ட் பால் –
Thanks – to -Uyirmmai Emagazine
ஓரினம் அமைப்பும் Goethe instituteம் இணைந்து மாற்றுப் பாலினத்தவருக்காக செயல்படும் பிற அமைப்புகளான நிறங்கள்,RIOV, nir, saathi, andu East- west center ஆகியோர்களால் இணைந்து ரெயின்போ பிரைடின் ஒரு பகுதியாக திரையிடல் நுங்கம்பாக்கம்Goethe institute இல் Reel desires: Chennai International Queer Film Festival 2015நடைபெற்றது.ஜூலை 26 மாலை பன்மை தியேட்டர் வழங்கிய Color or Trans 2.0என்ற நாடகம் நடைபெற்றது.ஸ்மைலி என்கிற லிவிங் ஸ்மைல் வித்யா, ஏஞ்சல் கிளாடி, மற்றும் ஜி இமான் செம்மலர் ஆகியோர் நடித்த நாடகம் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் குடும்பம், சமூகம் புறக்கணித்த வலிமிகுந்த வாழ்க்கையைப் பதிவு செய்தது.
திருநங்கைகள் பற்றிய ஒட்டுமொத்த வாழ்க்கை குறிப்பாக இந்த நாடகம் அமைந்தது. பெண்ணாக மாறியபோதும் தங்களுக்கு இருக்கும் கரகரப்பான குரல் எனத் தொடங்கி, சினிமா உலகம் காட்டிய அபத்தங்களும், உணர்வுகளை புரியாத வீடுகளும் சமூக வீதிகளும், போலி மருத்துவர்களால் தவறான அறுவை சிகிச்சை என திருநர்களின் குருதிவடியும் துயரங்கள் யாவையும் முற்றும் முழுதாக பேசுகிறது இந்த நாடகம்.
இந்த நாடகம் டிவைசிங் தியேட்டர் முறையில் வடிவமைக்கப்பட்டது. “டிவைசிங் தியேட்டர் என்றால் இதில் நடிக்கும் ஒவ்வொருவரும் அவர் நடிக்கும் பகுதியை அவரவரே இயக்க வேண்டும் தனியாக இயக்குநர் என்று ஒருவர் கிடையாது என விளக்கினார் ஸ்மைலி”
பொதுவெளியில் திருநர்கள் குறித்து இருக்கும் எதிர்மறையான கற்பிதங்களை கலைந்து கொள்ள, ஒரு தினத்தில் color of trans நடக்கும் மாலையை ஒதுக்குங்கள். அரங்கத்திற்கு உள்ளே சென்றவர்கள் அல்ல நீங்கள் வெளியே வரும்போது.
–