ஊடறு ஆர் – றஞ்சி
11 வது ஆண்டில் ஊடறு கால்களைப் பதித்துக் கொள்ளுகின்றது என்பதை உங்களோடு கரம் கோர்த்துப் மகிழ்ச்சி கொள்கின்றோம் 10 வருடங்கள் ஆகி விட்டனவா எனத் திரும்பிப் பார்க்கிறோம். ஊடறு தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதிலும் அதற்கான செயல்பாடுகளிலும் திசைமாறவில்லை. எந்த குழுவாத சகதிக்குள்ளும், இணையவில்லை. புலம்பெயர்ந்த வாழ்வு, வாழ்க்கைச் சூழல், வேலைப்பளு இவைகளுக்கு நடுவில் ஊடறு தனது பத்து வருடங்களை கடந்து விட்டது ஒருவரோ அல்லது ஒரு அமைப்போ இல்லை ஒரு குழுவோ தன்னுடைய சமூகத்துக்கு அல்லது நாட்டுக;கு அல்லது உலகத்துக;கு தம்மால் ஏதேனும் ஒரு வகையில் சிறப்பாகப் பங்களிப்புச் செய்யும்போது, பல விமர்சனங்களை எதிர்கொள்வர் அந்தவகையில் ஊடறுவும் அதற்கு விதிவலக்கல்ல
ஊடறு ஒரு இணைய தொடர்பாடல் என்பதற்கு அப்பால், தான் சார்ந்த சமூகத்தின் பெண்களின் பிரச்சினைகளை பெண்நிலைசார்ந்து செயற்படுகின்றது. பெண்நிலைசார்ந்த கருத்துக்களை பொதிந்துவைத்துள்ள ஒரு தொடர்பாடலாகவும் உறவாகவம் இருக்கிறது. பல்வேறு பார்வைக் கோணங்களிலும் பெண்நிலை சார்ந்த பெண்ணிய கருத்துக்களை வெளிக்கொண்டு வருவதில் வாசல்களை உருவாக;கி வந்துள்ளது
ஊடறுவின் செயற்பாடுகள் தனியே புத்தகங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எம்மால் இயன்ற வரை உதவிகளையும் செய்துள்ளோம் எமது சொந்த உழைப்பில் (எவ்வித அமைப்பும் சாராது) இவ் வேலைகளை நாம் செய்ததில் மனத் திருப்தியடைகின்றோம்.
அஞ்சலியகத்தில் உள்ள 75 கணவனையிழந்த பெண்களுக்கான மருத்துசெலவுக்கான உதவிகளை நாம் வழங்கியிருந்தோம்.
யுத்ததால் பாதிக்கப்பட்டு இடது முழங்காலுக்கு கீழ் துண்டிக்கப்பட்ட அங்கவீனமான பெண்போராளி ஒருவரின் சுயதொழில் முயற்சிக்காக ஊடறு சார்பில் (பெயரிடாத நட்சத்திரங்கள் நூலின் மூலமாக கிடைக்கப்பெற்ற பணம்) வழங்கியிருந்தோம். இவை எம்மால் இயன்ற சிறிய உதவிகளின் செயற்பாடுகளே.
குரல்-16
பெண்களுக்கிடையேயான கருத்துப்பரிமாற்றத்திற்கு செயற்பாட்டுத் தளத்தையும் தொடர்பாடலையும் உருவாக்கவும் இந்தியாவிலும் உள்ள பெண்நிலை செயற்பாட்டாளர்கள், மற்றும் பெண்ணியலாளர்களுடன் இணைந்து உடறு நடத்திய கருத்தரங்கும் இலங்கை மலையகத்திலும் பெண்நிலைச்சந்திப்பையும் கருத்தரங்கையும் நடாத்தி பெண்களுக்கிடையோயன ஒரு உறவுப்பாலமாக ஊடறு முன்நின்றதையும் இங்கு நினைவு கூறுகின்றோம்.
பெண்களின் படைப்புகளும் இருபாலாரினது ஒத்துழைப்பும் வாசகர்களது தளவருகைகளும் ஊடறுவை ஒரு எழுத்தியக்கத்துள் வைத்திருக்கிறது. நாம் அதனை ஒன்றுகுவிக்கும் வேலையில் தொடர்ந்தும் செயற்பட உங்கள் ஒத்துழைப்பையும் உதவியையும் எதிர்பாரக்கிறோம். விமர்சனங்களும், உரையாடலும் ஊடறுவை மேன்மேலும் வளர்க்கும் என்பதையும் நினைவு கொள்கிறோம்.
தொடர்ந்த ஒத்துழைப்பைக் கோரியபடி…11 வது வருடத்தில் உள் நுழைகிறது ஊடறு.
ஊடறு வெளியீடுகள் மற்றும் விபரங்கள் பற்றிய குறிப்புக்கள் –
– ஊடறுவின் 10 வருட பயணத்தில் உங்களோடு நாங்களும் கரங்கோர்த்து மகிழ்கின்றோம்.
ஊடறு பற்றிய விமர்சனங்கள் சில…!
–ஆனந்தவிகடனில் ஊடறு பற்றி.. அருள் எழிலன்…
– பெண் குரல்கள் பதிவாகும் பெருவெளி – அணி
– பெண்ணிய இலக்கிய வரலாற்றில் ஊடறு தனக்கென தனியிடத்தைப் பெற்று தலைநிமிர்ந்து நிற்கிறது.–புதியமாதவி
– ஊடறு பற்றி நட்பு இணையத்தளத்தில்- எழுதிய குறிப்பு –க. சித்திரசேனன்
– ஆறாவது ஆண்டில் ஊடறு !சில குறிப்புக்கள் – யதீந்திரா
– பெண் எழுத்துக்கள் பற்றிய கட்டுரையில் ஊடறு பற்றி…வ.கீதா
– ஊடறு – ஒரு பார்வை மா.சந்திரலேகா (இலங்கை)
– விடுதலைபெற்ற விழுமிய வாழ்தலை நோக்கி… , லறீனா அப்துல் ஹக்.(இலங்கை)
– பெண்களுக்காக வாதாடும் ஊடறு.-ஸர்மிளா ஸெய்யித்,இலங்கை)
– ஒரு சினிமா -பெண்களுக்கான , நான் தொடர்ந்து வாசிக்கும் இணையதளம் ஊடறு – திலகபாமா
A good way to go down the memory lane. Vaazhthukkal.