குரலற்றவர்களின் குரலாய் -லறீனா- ஊடறு எல்லாப் பெண்களின் குரலாகப் பேசுகிறது-யோகி

 

– ரஜினி( மதுரை –இந்தியா

rajini1_2438643g (1)ஊடறு பெண்ணியம் மற்றும் சமூகநீதிக்கான கருத்தியல் தளம்.சர்வதேச அளவில் பெண்ணீயம் தொடர்பானவிவாத்ங்களுக்கு தொடர்ந்து தளம் அமைத்துத்தருவது ஊடறுவின் தனிச்சிறப்பு…..!இந்த் கருத்தியல் பணியை தொடர்ந்து 10 ஆண்டுகளாகச் சிறப்பாக ஆற்றீ வருகிறது…புலம்பெயர்ந்த சூழலிலும் சரி, அசாதாரண போர்ச்சூழலிலும் சரிஇ மற்றசிவில்சமூகத்திலும் சரிஅவ்வப்போது எழும் பிரச்சனைகளை ஊடறுத்துக்காட்டும் ஊடகம்…ஊடறு…பெண்தலைமையில் இயங்கும் ஊடகம் என்ற தனிச்சிறப்புண்டு…கருத்தியல் தளத்தில் மட்டுமல்ல ,செயல்பாட்டு ஊடகமும், ஊடறு…பெண்கள் மீதான வன்முறைகளை வெளிக்கொண்டு வருதல், அதற்கான செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் போன்ற பணீகளை தொடர்ந்து ஆற்றி வருகிறது…இதற்காக றஞ்சி,ஆழியாள் பாராட்டுக்குரியவர்களே…! 

 

 

புதியமாதவி- மும்பை

puthiyamathavi

ஊடறு 10 ஆண்டுகள்.. இந்தப் பயணத்தில் உங்களை எப்போது சந்தித்தேன்? என்பது அவ்வளவு முக்கியமில்லை.எப்போதும் உங்கள் பயணத்தில் உங்களுடன் ஒருத்தியாக இருக்கிறேன்.பனிப்பொழியும் ஆல்ப்ஸ் மலைச்சரிவில் உங்கள் அனைவரையும் சந்தித்த இரவுகள் என்றும் பசுமையாய்…பாரீசு நகரத்தின் ஓவியங்களும் சிற்பங்களும் என்னுடன் பேசியதைவிட உங்கள் மவுனங்கள் என்னுடன் அதிகமாகப் பேசின. பெண்ணிய உரையாடல்கள் பெண்ணிலைச் சந்திப்புகள்  இசைப் பிழியப்பட்ட வீணைகள் , பெயரிடாத நட்சத்திரங்கள் என்று தொடர்ந்த உங்கள் பயணத்தில்.. ஒவ்வொரு ப்க்கமும் ஓர் ஆவணம… நாடுகளின் எல்லைக்கோடுகளை ஊடறுக்கும் வலிமை பெண் நிலை சந்திப்புகளுக்கு உண்டு என்பதைச் சாத்தியப்படுத்தி இருக்கும் இத்தருணம் மிகவும் முக்கியமானது. எங்கெல்லாம் மனிதம் காயப்படுகிறதோ எங்கெல்லாம் அதிகாரவர்க்கம் பெண்ணை அடக்குகிறதொ எங்கெல்லாம் மழலைகளின் சிரிப்பு கள்வாடப்படுகிறதொ அங்கெல்லாம் ஊடறு தன் எதிர்ப்பை தனித்துவத்துடன் அடையாளப்படுத்துகிறது… வாழ்த்துகிறேன்.. தோழியரே. பாதைத் தெளிவாகத் தெரிகிறது. பயணிப்போம். நடக்கும் துணிச்சலுடன் ந்ம்முடன் கூட வருபவ்ர்களை சேர்த்துக்கொண்டு பயணிப்போம். இன்னும் சிலர் நடக்கமுடியாமல் தவிக்கலாம்.. அவர்களையும் தோள்களில் சுமந்துக்கொண்டு பயணிப்போம். பாதைத் தெளிவாகத் தெரிகிறது. பயணிப்போம்… மழைப்பொழியும் நள்ளிரவில்அரபிக்கடலோர வாசல் திறந்து  உங்களுடன் பயணிக்கும்  -புதியமாதவி. -மும்பை. 

யாழினி- யோகேஸ்வரன்.

DSC_0016 -sss

ஊடறுவின் ஊடறுத்த பதிவுகள் பெண்ணியல் சிந்தனைகளாகவும் சமூக மாற்றத்திற்கான ஆயுதமாகவும் கடந்த பத்து வருட காலமாக பரிணமித்து வருகின்றது.இந்நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக ஊடறுவோடும் அதன் இணைந்த செயற்பாடுகளோடும் கூடவே பயணிக்கிறேன் என்பதில் பெரும் மனமகிழ்வடைகின்றேன். ஊரறிந்த பெண்களை உலகறியச் செய்த பெருமையும் ஊடறுவுக்கேயான தனித்த இயல்பு.பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் ஆங்காங்கே தூவப்பட்டுக்கொண்டிருந்த என் கவிகளுக்கு முதன் முதலில் இணையம் மூலமாக உலாவ அங்கீகாரம் கொடுத்து என்னையும் ஒரு பெண் படைப்பாளி என உணர வைத்ததும் ஊடறுவே .பலநாட்டுப் பெண் படைப்பாளிகளை உலகறியச் செய்து அவர்கள் படைப்புக்களோடு மட்டுமல்லாமல் இதயங்கலோடும் நல் உறவு வைத்து அவர்களிடையே சிறந்த தொடர்பாடலை இன்று வரை நிலைக்கவும் செய்து வருகின்றது. அதுமட்டுமன்றி வளர்ந்து வருகின்ற இளம் பெண் படைப்பாளிகளுக்கு சிறந்ததொரு களத்தை வழங்கி வரும் ஊடறுவும் அதன் நிர்வாகிகளும் பெரிதும் பாராட்டுதலுக்குரியவர்கள் .பெண்களுக்கான வெளிகளை அகலப்படுத்தி அவர்களது படைப்புக்களுக்கு சிறந்த களத்தை ஊடறு வழங்கி வருவது நம்மில் பலருக்கு மகிழ்வே.

லறீனா அப்துல் ஹக் –

 

lareenaகுரலற்றவர்களின் குரலாய் – ஒரு காலத்தில் பெண்களுக்கென்றொரு குரல் இருக்கவில்லை. அவர்கள் குரல்கள் அற்றோராய், மௌனப் பெருவெளியின் பாத்தியக்காரிகளாய் வார்க்கப்பட்டிருந்தார்கள். அதிகம் பேசாத, குரலை உயர்த்தாத பெண்களே குலப் பெண்களாய், போற்றுதலுக்கு உரியவர்களாய் சமூக மனநிலையில் பதிக்கப்பட்டிருந்தார்கள். தமது பிரச்சினைகளை, பெண்ணினத்தின் பிரச்சினைகளை, அவர்களுக்கான உரிமைகளைப் பற்றியெல்லாம் உரத்துப் பேசும் பெண்கள் அடக்கமற்றவர்களாக, வெட்கமற்றவர்களாக நோக்கப்படும் அவலமான நிலை இருந்தது. இப்போதும்கூட, பெண்களின் பிரச்சினைகள், பெண்ணுக்கான சமத்துவம் பற்றியெல்லாம் பேசும் பெண்களை, “பெண்ணியவாதி” என்று முத்திரை குத்தி, ஒரு தினுசான ‘உயிரி’யாய்ப் பார்க்கும்/ஓரங்கட்டும் பொது மனநிலை இருக்கவே செய்கின்றது. இது கசப்பான கள யதார்த்தம்.

பொதுவாகக் குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களுக்கெதிரான வன்முறைகள் என்பன பற்றியெல்லாம் வெகுஜன ஊடகங்களில் வெறுமனே ஒரு செய்தித் துணுக்காக மட்டுமே பேசப்படுகின்றன. இணையவெளிகளில் வன்முறைகள் இடம்பெற்ற முறை பற்றிய கற்பனார்த்தமான வக்கிர வர்ணிப்புகள், தத்தமது தளங்களின் “ரேட்டிங்”கை உயர்த்திக்கொள்வதற்கான கீழ்த்தரமான உத்தியாய்க் கைக்கொள்ளப்படுகின்றன. இதனிலும் ஒருபடி மேலே போய் பொதுவெளியிலும், சமூக வலைதளங்களிலும் பாலியல் சார்ந்த வன்முறைகளுக்குப் பெண்ணையே குற்றவாளிகளாக முன்னிறுத்தி, பெண்களுக்கு உபதேச வகுப்பெடுக்கும் பண்பாடற்ற நடைமுறைகள் விசனத்துக்கு உரியவகையில் சர்வ சாதாரணமாக மாறிவிட்ட அவலம் தொடர்கிறது.  இந்நிலையில், பெண்கள் பற்றிய அனைத்துக் கோணங்களையும் அலசி ஆராயவும், அவை குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வூட்டவும் பெண்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கி ஆற்றுப்படுத்தவுமான ஓர் அகன்ற “வெளி”க்கான தேவைப்பாடு மறுதலிக்கப்பட முடியாததாகும். இந்தப் பின்புலத்திலேயே “ஊடறு டொட் கொம்” இணையதளம் மிகுந்த கவனக்குவிப்பைப் பெறுகின்றது. தனக்கான முக்கியத்துவத்தினை, சமூகத்தில் தனக்கான வகிபாகத்தை, ‘அதிகார வெளியினை ஊடறுத்து’ நிலைநிறுத்துவதாக தொடர்ந்து இயங்கி வருகின்றது. பெண்களால், பெண்களுக்கான சுயத்தின் குரலை உரத்து ஒலிக்கச் செய்து வருகின்றது.

பத்தாண்டுகால நிறைவினை எட்டி நிற்கும் “ஊடறு” பெண்கள் சார்ந்த செய்திகளை, அறிக்கைகளை வெளியிடுவதோடு மட்டுமின்றி, இணைய வெளியிலே பெண்களின் எழுத்துக்களுக்குக் களம் தந்து அவற்றை ஒரேயிடத்தில் ஆவணப்படுத்தும் முயற்சியிலும் இயங்கி வருகின்றது. அதுமட்டுமல்ல, பெண்களின் எழுத்துக்களைத் தொகுத்து நூல் வடிவில் வெளிக்கொண்டுவரும் உன்னதப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன், செயற்பாட்டுத் தளத்தில் நேரடியாகவே களமிறங்கி வெவ்வேறு நாடுகளிலும் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து, அவர்களின் கருத்துக்களைப் பகிரவும், பெண்கள் சார்ந்த பன்முகப் பிரச்சினைகள், தீர்வுகளைப் பற்றிக் கலந்துரையாடவுமாய் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்யும் அடுத்த கட்டத்தை நோக்கியும் நகர்ந்துள்ளது. இவ்வாறு, பன்முகத் தளங்களிலும் “ஊடறு”வின் வீரியமிக்க செயற்பணி தொடர்ந்து வருவது மிகுந்த பெருமிதத்துக்கு உரியது. குரல் அற்றோரின் குரல்களுக்கு மொழிதரும் தாயாய், பெண்களின் எழுத்துக்களுக்குக் களம் தரும் பிரபஞ்ச வெளியாய்த் திகழும் “ஊடறு”வின் பணிகள் மகத்தானவை.

ஒரு தசாப்த காலத்துக்குள், குறிப்பிட்டுக் கூறத்தக்க அடைவுகளை எட்டியிருக்கும் இந்த இணைய தளத்தின் இன்றைய உயர் நிலைக்குப் பின்னால் உள்ள அர்ப்பணிப்பும் இடையறாத முயற்சியும் உழைப்பும் புறந்தள்ளப்பட முடியாதவை; மிகுந்த போற்றுதலுக்கு உரியவை; ஆதர்சமாகக் கொள்ளத்தக்கவை. அந்த வகையில், “ஊடறு” இனிவரும் காலங்களிலும் தன்னுடைய காத்திரமான பணிகளை இதைவிடவும் வேகமாகவும் வீரியமாகவும் முன்கொண்டு செல்லவேண்டும் என்று மனம் கனிய வாழ்த்துகின்றேன். மிக்க அன்புடன்,  லறீனா அப்துல் ஹக் –

 

எஸ்தர்

estharகால்கள் நனைக்கும் அலைகள் நினைவை நனைத்து மறைகிறது.தூரத்தில் தெரியும் கடலும் அடிவானமும் ஏதோ என்னிட்ம் சொல்கிறது. ஒரு சில பேரலைகள் இன்னும் முந்திக்கொண்டு ஓடி வருகிறது.ஊடறுவின் நினைவாண்டுகள் சில உண்மைகளை எழுத சொல்லும் போது …….,ஊடறுவுக்கும் எனக்குமான உறவு கிட்டதட்ட 11 வருடங்களாகும். 2005 ம் ஆண்டுதான் ஊடறு பறறி எனக்கு தெரிந்தது யார் ஊடறுவை அறிமுகப்படுத்தி வைத்தது என்பது எனக்கு ஞாபகம் இல்லை.கவிதைகளை அனுப்பி அவைகள் பிரசுரிக்கும் நாளில் நான் மிகவும் மகிழ்ந்தேன் பெண்கள் பற்றிய தளங்களையும் பார்வையை நேர்த்கியாக கொண்டு நகர்த்தியதை என்னால் அனுமானிக்க முடிந்தது.காலப்போக்கில் நான் பல்கலைக்கழக கற்றலால் ஊடறுவுக்கு எழுதுவது கொஞ்சக்காலம் ஸ்தம்பிதம் அடைந்தாலும் காலவோட்டத்தில் இயல்பாக ஊடறுவுடன் கிளை நதியைப் இணைந்தக்கெணடன். இங்குதான் இசைப்பிழியப்பட்ட வீணையில் ஊடறுவுடன் இணைய சந்தர்ப்பம் கிட்டியது. ஊடறுவின் “மை” கவிதை தொகுப்பும் விடியல் சிவாவினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.என் மண் சார்ந்த மக்களின் குறிப்பாக மலையக பெண்களின் கவிதைகள் வெளிவந்ததை ஓரு நாள் பேராசிரியர்கள் சிவசேகரத்துடனும் நூஃமான் அவர்களுடனும் மாலை நேரமொன்றில் வாய் வலிக்க வலிக்க அலட்டியது இன்றும் நினைவில் நிற்கிறது. அந்த நாள் எனது விருப்பமான எழுத்தாளன் சுந்தரராமசாமியின் நினைவரங்கு பல்கலைக்கலகத்தில்; இடம்பெற்ற நாளாகும். ‘இந்த புத்தகத்தை தா வாசிச்சிப் போட்டு தாரேன்’ என்று வாங்கிக் கொண்டு போனதும் மறக்க முடியாது. ஊடறுவின் நாடு கடந்த உழைப்பு பெரிது. சமூகத்தில் நலிவுற்ற மக்களின் குரல்களை பதிவு செய்வதில் ஊடறு தாமதிப்பதில்லை.அது சிரியாவில் சீரழியும் குர்திசாக இருக்கட்டும் மலையகத்தில் உழச்சி உழச்சி ஓடுகளான மக்களாகட்டும் இந்தியாவின் தாராவியின் மௌன ஓலங்களாகட்டும் அனைத்து நலிவுற்ற மக்களின் தளம் ஊடறுதான் என்ற மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.நெல்லு வெளையும் மண்ணில் நெருப்பு வெளஞ்சாலும் பிடுங்கி எறிந்துவிட்டு ,உழுது விதை விதைப்பேன் ,விருதுகள் வந்து குவியாவிட்டால் என்ன,கூடி நின்ணு மாந்தர் கூட்டம்,சாத்தானகளின் வேதம் ஓதினாலென்ன, பசித்தவர்கள் பக்கமே ஊடறு என்றும் ,இருக்கும்!! அந்த நம்பிக்கையில் ஊடறுவின் தளம் இன்னும் தன் கால்களை அகலப் பதிக்கவும் ,காத்திரமான படைப்பாளிகளையும் இனம்காண ஊடறு தம் பணி தொடர வாழ்த்துகிறேன்.

 

-யோகி

yogi -.jpg 1ஊடறு இணையத்தளம் தற்போதுதனது 10-ஆம்ஆண்டு நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. எனக்கும்ஊடறுக்குமானஉறவுக்கு எத்தனை வயது என்று கேட்டால், என்னால் சரியாகப் பதில்சொல்ல முடியாது. காரணம், ஊடறுவைநான் அடையாளம் கண்டு கொண்ட நாளிலிருந்து, அதைப்பின் தொடர்ந்து  வருகிறேன். விமர்சனங்கள், செவ்விகள், கவிதைகள், குறும்படங்கள் எனப்பலவழிகளில் ஊடறுவோடு நான்பயணித்திருக்கிறேன். அதற்குமுதல்காரணமாக இருப்பதுஅதிலிருக்கும்இணைஇணையத்தளங்கள்தான்.எனதுமுன்மாதிரிஎனநினைக்கும்பெண்ணியஎழுத்தாளர்களின்படைப்புகளைச்சிரமப்பட்டுத்தேடிப்போகாமல், ஊடறுவுக்கு வந்தாலே போதும் என்றரீதியில் இணைக்கப்பட்டிருந்தது வாசிப்புக்குமிகவும்வசதியாக இருந்ததோடு பெண்ணியவாதிகளின் எழுத்துகளைப் புதுப்பித்துக்கொள்ள ஏற்ற ஓர் இணையத்தளமாகவும்ஊடறு இருந்திருக்கிறது. ஊடறுப்போன்ற பெண்கள் எழுத்துகளுக்கும் பெண்கள்பிரச்னைகளுக்கும் வேறு இணையத்தளம் குரல்கொடுக்கிறதா என்று கேட்டால் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

தனக்கான தளம் எங்கே என்று பெண் எழுத்தாளர்கள் தேடித்தவிப்பதற்கு இடங்கொடுக்காமல், தனது வாசலை எல்லாருக்குமாகத் திறந்து வைத்திருக்கிறது ஊடறு. வெறும் இலக்கியப்படைப்புகளுக்கு மட்டுமின்றி, பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும், சமூதாயப்பிரச்னைகளுக்கும் நாடு, இனம், மொழிப்பாராமல் தனது பங்களிப்பை ஊடறு செய்துவருவதின் வழி ஒருவிதையெனத் தொடங்கி இன்று ஒருமாபெரும் விருச்சமாக வளர்ந்துநிற்கிறது.

 எவ்வித அரசியல் நோக்கமின்றியும், லாபநோக்கமின்றியும், யாருக்கும் வளைந்து கொடுக்காமல் தனது சீரான பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஊடறுவோடு, புதியதலைமுறை எழுத்தாளர்கள் கைகோர்த்துத் தங்களின் அடையாளத்தை மீட்டெடுத்துக்கொள்ளுங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன். காரணம், ஊடறுமட்டும் தான் எல்லாப் பெண்களின் குரலாகப்பேசிக் கொண்டிருக்கிறது. –  ஊடறு எல்லாப் பெண்களின் குரலாகப் பேசுகிறது –நன்றி

 

ஷாமிலா முஸ்டீன்

shamila

பெண்களின் கலையும் இலக்கியமும் செய்திகளும் ஊடருத்துப் பாயும் இந்த நதி முன்னோக்கிப் பாய்ந்து கொண்டே இருக்கனும் என்பது எனதவா.இன,பிரதேச பேதமற்று இலக்கியங்கள் சங்கமிக்கும் இந்த வலையில் எந்த எலியேனும் நறும்பிடாதவாறு அதனை நெறிப்படுத்தும் விதம் வரவேற்கத் தக்கது.தன்னடக்கமும் ஒழுக்கமும் உள்ள கலைஞன் மட்டுமல்ல வலைத்தலங்களும்மும் தான் வெற்றி பெறுவது திண்ணம்.

 

சந்திரலேகாஊடறு பற்றி உங்களுடன்…

chandraleka 8553

 மலையகப் பெண் கவிதைகளின் தொகுப்பான இசைபிழியப்பட்ட வீணையே எனக்கு ஊடறுவை அறிமுகப்படுத்தியது. 10. அன்றிலிருந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக உடறு இணையத்தளத்தின் வாசகியாக இருக்கின்றேன். உலகின் பல்வேறு இனஃ மத, சாதி கடந்த அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்துப் பிரச்னைகளையும் வெளிக் கொணர்வதில் ஊடறு தனித்துவமானது. புதிய பெண் எழுத்தாளர்களை உருவாக்குவதில் ஊடறுவின் பணி மிகவும் பயனுள்ளது பெண் படைப்பாளிகளின் படைப்புகள் கவிதை, கட்டுரை, விமர்சனம் எனப் பல்வேறுபட்ட விதங்களில் பெண் விடுதலைக்கு வித்திடும் வகையான ஒவ்வொன்றையும் வரவேற்கின்றேன். இன்னும் பெருவெளியில் சிந்தனைச் சிறகு விரித்து சுகந்திர கீதம் பாட வாழ்த்துக்கள். 

  

 

விஜயலட்சுமி சேகர்

IMG_9031

பத்து வருடங்கள்

பூத்துக் குலுங்கும் மொட்டுகளுடன் மட்டும்
நின்றுவிடாது
காலத்தின் கண்ணீரிலும்
உழைப்பின் வியர்வையிலும்
ஊறிப்போய்க்
கிடக்கின்றாய்.
சி வேளை சொறிச்சலாய் வரும்
சுடச் சுடச் செய்திகள்
ஊதவும் முடியாது

பருகவும் முடியாது
வீங்கிய உதட்டுடன்
தவிக்கும் வேளையில்
மருந்தாய் ,தம் தரும் கனவாய்
“ஊடறு”த்து நீ
உணர்வுகளைப் பேச.
கன கன காலமாய்…
காலையில் எழுந்ததும்
விலைப்பட்டிருக்கும் எம் காலடி மண்
அடுத்த அடி வைப்பதற்கும்
அனுமதி மறுக்கப்பட்டிருக்கும்
நில நிலமை
இவ்வாறே இவ்வாறே
இன்று வரை இவ்வாறே…
எம் ஒவ்வொரு விடியலையும் நாம்
எண்ணும் பொழுதுகளில்
தமக்கென்றொரு நாடு
தமக்கான மக்கள்
என
கதிரைக்கும் மேசைக்குமான
இடைவெளியில் இருந்தபடி
கனாக் காணும்
இணையத் தள ராசா ராணிகளின்
கதைகள் பல கடல் பல மலை தாண்டி..

எனினும்

கையில்; ஓட்டுடன் 

உணர்வு தேடும்
உன் உலா….நிதம் நிதம்..
வலம் வர வேண்டும்; என்பதே
என் வாழ்த்தாகவும்
கூடுதலாய் வேண்டுதலும்.

 

வாழ்த்துக்களுடன்  -மாத்தளை ஜெஸீமா ஹமீட் 

jeseemmaஊடறு….நீ கேடறுத்து பரவு….     

உனக்கும் எனக்குமான

உறவின் நீளம்

வருடம் ஒன்றுதான்…

உன் சாதனைக் காலங்களோ
தசாப்தம் தாண்டிய தடங்களாய்
கடல் கடந்து போகிறது…
காதலில் விழுந்து
கண்ணீரில் கரைந்து…
பெண்ணுரிமைப் போற்றி
பாதகங்கள் தூற்றி…
பேதங்கள் மறந்து
தேசங்கள் தோறும்
சொந்தங்கள் சேர்த்து…
சோகங்கள் துடைக்கும் ஊடறுவே…!
நீ பொய்களை ஊடறுத்துப் பாயும் ஜீவநதி….
சில ஜீவன்கள் தலைமேல் சமுதாயம் திணிக்கும்
தரித்திரங்கள் மாற்றி நீ எழுது புதிய விதி…

 

ச. விஜயலட்சுமி

 

IMG_8643 sபெண் சதா ஆக்கபூர்வமாக தன் சந்ததிகளுக்காக தன் இனத்திற்காக இரத்தங்களுக்காக குழந்தைகளுக்காக சிந்திப்பாள் ஊடறுவும் அப்படியே.ஊடறு இந்த சொல் தரும் கணம் அதன் அடர்த்தி ஊடறுவின் செயல்பாட்டால் பன்மடங்கு அதிகரிக்கிறது.ஊடறு கடந்த பத்தாண்டுகளில் பெண்களுக்கான தளமாக அழுத்தமானதொரு செயல்பாட்டினைக் கொண்டிருக்கிறது.பெண் எனும் ஓர்மைக்குள் பல பெண் படைப்பாளிகளைப் பிணைக்கிறது.காற்றடிப்பதை நாம் கவனிக்காமலேயே பயணிப்பதுபோல ஊடறுவை கவனியாமலும் , கவனித்தும் வந்திருக்கிறேன்.ஊடறு என்கிற பெயரோடு ஆழியாள்,ரஞ்சி எனும் பெயரையும் தோடர்ந்து கேள்விப்பட்டிருக்கிறேன்.அவ்வப்போது தேடிச்சென்று வாசித்திருக்கிறேன்.உறுதியும் போர்க்குணமும் தாய்மையுமாக ஊடறு எனக்கு பின்னிப் பிணைந்து காட்சிதருகிறாள்.ஊடறு என்கிற புள்ளியில் பெண் படைப்பாளிகளை கலைஞர்களை ஒருங்கிணைக்கும் மாபணி பத்தாண்டுகளாகத் தொடர்வது எளிதன்று.ஊடறு பதிப்பித்த நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை அவ்வகையில் ஊடறு பதிப்பகமாக திறம்பட செயல்படுகிறது.வேறு வேறு தேசங்களுக்குள் இருப்பவர்களின் கூடுகை இது.தோழிகள் ரஞ்சி,ஆழியாள் இருவரது பொறுமையும், உழைப்பும், வெளிப்படைத்தன்மையும் ,உறுதியும் அலாதியானது.குடும்பம் ,பணி என்கிற இரட்டைச்சுமையை மீறி நேரம் கொடுத்து வளப்படுத்தி வருகிறார்கள்.பெயரிடப்படாத நட்சத்திரங்கள்,இசைபிழியப்பட்ட வீணை முதலான காலத்தின் கடக்கவியலா உணர்வுகளை,அரசியலை நமக்கு கொடுத்துவருக்கிற பணி மேலும் தொடரவேண்டும்.பெண்ணிய சந்திப்பினை தொய்வின்றி எல்லைகளை உடைத்து நடத்திவருவதும் அதன்மூலம் தேசங்கடந்த பிணைப்பை ஏற்படுத்துவதுமான ஆக்கபூர்வமான இயக்கத்திற்கு பாராட்டுகள்,தொடரட்டும் ஊடறுவின் பணிஞ்ஊடறு பத்தாண்டு பணிகளோடு இனிவரும் ஆண்டுகளில் அடுத்தடுத்த தலைமுறைகளோடும் இணைகிறது .எதிர்காலத்தின் பெண்ணிய செயல்பாடுகளுக்கான ஆவணம் ஊடறு ,,,

 

சு. குணேஸ்வரன்

 kunes 3

தாயகம், தமிழகம், புகலிடம் என்ற மூன்று தளத்திலும் இலக்கியத்தின் ஊடாகவும் சமூகச் செயற்பாடுகளின் ஊடாகவும் தொடர்ந்து கால்பதித்துவரும் பெண்களின் படைப்புக்களை ஒருமுகப்படுத்தும் ஊடறுவின் பணி தொடரவேண்டும்

வே. தினகரன்

thin

ஊடறு தனது பத்தாவது வருடத்தை பூர்த்தி செய்கிறது. எனக்கு ஊடறுவோடு 8 வருடகால தொடர்பு உண்டு.றஞ்சி குழுவினரின் தொடர்ச்சியான உழைப்பாலும், செயற்பாட்டாலும் ஒரு தசாப்தத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது.இயந்திரமயமான வாழ்க்கைச்சூழலில் ஊடறு தனது சக்கரத்தை இலகுவாக சுழற்றிக்கொண்டு நகரவில்லை என்பதை நானறிவேன்.அதன் பயணம் கடுமை நிறைந்தது.ஊடறு கடந்த, கடக்கும் சவால்களை ஓரளவு அறிந்தவன் நான்.எவ்வித உவத்தல் காய்தலின்றியும் மிக நேர்மையாக, பல்வேறு தளங்களில் இயங்கியோரின் பெண் நிலைச்சார்ந்த கருத்துக்களுக்கும் களம் வழங்கி இயங்கிவந்தமையே அதன் வெற்றிகரமான பயணத்துக்கு முக்கிய காரணமாகும்.
ஊடறு இன்றுவரை தனது நோக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் முன் செல்வதையும், தவிர்க்கமுடியாத வேளைகளில் சில கடுமையான முடிவுகளை நீண்ட கலந்துரையாடல்களின் பின் எடுப்பதையும் பார்த்து மௌனமாய் மகிழ்ந்ததுண்டு. மை, இசைப்பிழியப்பட்ட வீணை,பெயரிடாத நட்சத்திரங்கள் என்பன பெண் படைப்பாளிகளுக்கு ஊடறு வழங்கிய அச்சு நூல் வாய்ப்புக்களாகும். இவற்றில் இசைப்பிழியப்பட்ட வீணை மலையகப்பெண் படைப்பாளிகளின் கவிதைத்தொகுதியாகவும். பெயரிடாத நட்சத்திரங்கள் தமிழீழ விடுதலைக்கான பெண் போராளிகளின் கவிதைப்படைப்புக்களாகவும் வெளிவந்தவை. ”இசைப்பிழியப்பட்ட வீணை” இலங்கை மலையக பெண் படைப்பாளிகளுக்கு உலகலாவிய தமிழ்ச்சூழலில் சிறந்த அறிமுகத்தை பெற்றுத்தந்த தொகுதி.
உண்மையில் ஊடறுவின் பணிகளில் மிகச்சிலவற்றில் நானும் பங்கெடுத்துள்ளேன் என்றவகையில் மகிழ்ச்சியடைகிறேன். புதியவர்களின் வருகையையும் வாசிப்பையும் , பகிர்வையும் எப்போதும் போலவே இப்போதும் ஊடறு கோரி நிற்கிறது.
இந்த பத்து வருடகால ஊடறுவின் இயக்கத்தில் பங்களித்த , பங்கெடுக்கின்ற அனைத்து படைப்பாளிகளுக்கும், உடல் உள ரீதியில் பங்களிப்பை செய்யும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தடைகள் தாண்டி முன் செல்க.
முக நூலில் … ஊடறு டொட் கொம்
இணையத்தில் ..www.oodaru.com

 

 பா.செயப்பிரகாசம்

 

jeyapirakasam

ஊடறுவுக்கு இன்னொரு வாழ்த்து.

மகளிருக்கு இரு வடிவங்கள் உள; ஒன்று உடல்வடிவம்.மற்றொன்று கருத்தியல் வடிவம்.இவ்விரண்டின் இயக்கமும் நெறிப்பாடும்- எங்கிருந்து பிறந்தனவோ அந்த ஆணியல் சமுதாயத்தில் தங்கியுள்ளது. ‘இது எனது உடல்;இதன்மீது எனக்கு மட்டும் சுதந்திரம் உண்டு’ கோருகிற புதியவள் ஒருத்தி உருவாகி வருகிறாள்.அந்தப் புள்ளியில் பழைய கருத்தியலை உடைத்து தனக்கான புதியகருத்தியல் வடிவம் கொண்டு விடுகிறாள். இவ்வுலகப் பரப்பில் பாதிக்கு மேலாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களை இப் புதியவள்களாக கண்டெடுக்கும் முயசியின் பெயர் “ ஊடறு”. அதேபொழுதில் எக்காரியமாயினும் அறம் பேணுதலை முதன்மையிடத்தில் கொண்டு ஊடறு இயங்குகிறது.2014-சனவரி 3, 4- ஆகிய தேதிகளில் சென்னைப் பல்கலைக் கழக தமிழரங்கில் ஊடறுவின் ’பெண்கள்சந்திப்பும் தமிழ்த்துறையும்’ இணைந்து நடத்திய இருநாள் கருத்தரங்கு சான்று. ’ஊடறு’-வின் முன்னெடுப்புகளுக்கு அதன் பத்தாண்டுகளின் நிறைவில் இன்னொரு தோழமையின் வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *