பெண்களுக்கெதிரான வன்முறைகளும் தடுப்பதற்கான வழிமுறைகளும்

 பெண்களுக்கெதிரான வன்முறை என்றால் பகிரங்க அல்லது தனிப்பட்ட வாழ்வில் நிகழுகின்ற அத்தகைய செயல்களின் அச்சுறுத்தல் பலவந்தம், சுதந்திரத்தின் எதேச்சையான பறிப்பு என்பன உள்ளடங்கலாக உடல், உள மற்றும் பாலியல் அல்லது துன்பத்தை விளைவிக்கின்ற அல்லது விளைவிக்கக்கூடிய பால் அடிப்படையிலான வன்முறையின் ஏதேனும் செயற்பாடு ஆகும். பெண்களுக்கெதிரான வன்முறையானது சமத்துவம் அபிவிருத்தி மற்றும் சமாதானம் என்பவற்றின் குறிக்கோள்களை அடைவதற்கான தடை ஆகும். இவ்வன்முறையானது பெண்கள் தமது மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் அனுபவிப்பதை இல்லாததாக்குகின்றது. எல்லாச் சமூகங்களிலும் பெண்களும் சிறுமிகளும் உடல், உள மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு பாரிய அல்லது சிறிய அளவில் உள்ளாக்கப்படுகின்றனர். பெண்களின் தாழ்ந்த பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்து என்பன பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு காரணமாவதுடன் அதன் விளைவுமாகும் 

 

அரசாங்கத்தினால் செய்யப்படவேண்டியவை 

 அரச சார்பற்ற நிறுவனங்களால் செய்யப்பட வேண்டியவை

– இளைஞர் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்களால் செய்யப்பட வேண்டியவை

-யாவரினாலும் ன்றுபட்டு செய்யப்பட வேண்டியவை

சமவாயத்தின் உறுப்புரை 11ன்படி ஆணுக்கு பெண் பாரபட்சமின்றி சமமான நியதி மற்றும் நிபந்தனைகளில் வேலைக்கமர்த்தப்படவேண்டும் எனத் தேவைப்படுத்தப்படுகின்றது. கைத்தொழில் நிறுவனங்களில் பால் வேறுபாடின்றி 14 வயதிற்கு உட்பட்டவர்களை வேலைக்கமர்த்தமுடியாது. ஆனால் இரவுவேலை தொடர்பில் பெண்கள், இளம்பராயத்தவர் மற்றும் சிறுவர் தொழிற்சட்டம் பிரிவு 2ன்படி 18 வயதிற்கு உட்பட்டவர்கள் கைத்தொழில் நிறுவனங்களில் இரவுவேளையில் வேலைக்கமர்த்தப்படலாகாது. இரவுவேலை என்பது இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரையிலான 11 மணத்தியாலங்களை உள்ளடக்கியதாகும். ஆயினும் பெண்களை கைத்தொழில் நிறுவனங்களில் வேலைக்கமர்துவதாயின் பின்வரும் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவையாவன:

– பெண்ணின் விருப்புக்கு மாறாக வேலைக்கமர்த்தலாகாது.

– தொழில்தருநரிடமிருந்து எழுத்துமூலமான சம்மதம் பெறப்படவேண்டும்.

– காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இடையில் வேலைக்கமர்த்தப்பட்ட பெண் இரவு 10 மணிக்கு பின்னர் வேலைக்கமர்த்தப்படலாகாது.

-இரவுவேலை செய்யும் பெண்களுக்கு சாதாரண கொடுப்பனவின் 1 1.2 மடங்குக்கு குறையாத கொடுப்பனவு செலுத்தப்படவேண்டும்.

– இரவுவேலை செய்யும் பெண்களின் சேமநலனை கவனிக்க பெண் காப்போன் நியமிக்கப்படவேண்டும்.

– அவர்களுக்கு ஓய்வெடுக்கும் அறை மற்றும் பொழுதுபோக்குகள் தொழில்தருநரால் வழங்கப்பட்டும்.

– ஒரு மாதகாலப்பகுதியில் 10 நாட்களுக்கு மேல் அவ்வாறு பெண் வேலைக் கமர்த்தப்படலாகாது.

இத்தகைய நிபந்தனைகள் முகாமைத்துவ அல்லது தொழில்நுட்ப தன்மையில் பொறுப்பான பதவிகளிலுள்ள பெண்களுக்கும் உடலுழைப்பு அல்லாத சுகாதார மற்றும் சேமநல சேவைகளில் வேலை செய்யும் பெண்களுக்கும்இ குடும்பத்தவருடைய கைத்தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கும் ஏற்புடையதாகாது.

தொழிற்சாலைச் சட்டத்தின் பிரிவு 25ன்படி பெண்களை அசையும் ஆதனங்களை அசைந்து கொண்டிருக்கும் போது துப்புரவு செய்ய அனுமதிக்கக்கூடாது. மேலும் தொழிற்சாலைச் சட்டம் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்கள் தொடர்பான ஏற்பாடுகளைச் செய்கின்றது. தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒவ்வொரு பெண்ணும் உணவு மற்றும் ஒய்வுக்காக ஒதுக்கப்பட்ட இடைவேளை தவிர வேலைநேரம் ஒரு நாளைக்கு 9 மணத்தியாலங்களையும் ஒரு வாரத்தில் 48 மணத்தியாலங்களையும் விஞ்சுதலாகாது. தொழிற்சாலையில் இரவில் பின்வரும் நிபந்தனைகளுக்காக பெண்கள் வேலைக்கமர்த்தப்படலாம்.

2002ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின் விளைவாக வேலைநேரம் தொடர்பான மேற்படி ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும் தொழிற்சாலையின் ஏதேனும் வேலை அழுத்தம் பெண்களை மேலதீக வேலைநேரத்திற்கு அமர்த்துவதன் மூலம் அத்தகைய அழுத்தம் சீர்செய்யப்படமுடியும். பெண்ணின் மேலதீக வேலைநேரம் ஒரு மாதத்திற்கு 60 மணத்தியாலங்களை விஞ்சக்கூடாது. கர்ப்பமுற்ற பெண் அவளது கர்ப்பக் காலத்தில் அல்லது பிள்ளையைக் கவனிக்கும் தாய் பிள்ளை பிறந்ததிலிருந்து ஒரு வருடத்திற்கு மேலதீக வேலையில் பொதுவாக அமர்த்தப்படலாகாது. ஆயினும் அக்காலத்தில் வெளிப்படையான சம்மதத்தை எழுத்தில் கொடுத்தால் வேலைக்கமர்த்தமுடியும். மேலும் ஒரு பெண் ஒரு நாளைக்கு 12 மணத்தியாலங்களை விட மேலதீகமாக வேலைக்கமர்த்தப்பட முடியாது.

ஒரு வகுப்பினரான பெண்களுக்கு குறித்த வேலை பெண்களின் உடல்நலனைப் பாதிக்குமெனில் மேலதீக வேலைநேரத்தை தடைசெய்யலாம் அல்லது மட்டுப்படுத்தலாம். அத்துடன் இரவுவேலையில் ஈடுபடும் பெண்களுக்கு போக்குவரத்து வசதிகளையும் விதந்துரைக்கலாம். மேற்கூறப்பட்ட சட்ட ஏற்பாடுகள் முகாமையில் பொறுப்பான பதவி வகிக்கும் பெண்களுக்கு ஏற்புடையதாகாது.

இலங்கை அரசியலமைப்பு • (1978 (SRI LANKAN CONSTITUTION)

பெண்கள் இளம்பராயத்தவர் மற்றும் சிறுவர் தொழிற்சட்டம்

கடை காரியாலைய ஊழியர் (ஊழியம் மற்றும் ஊதியம் ஒழுங்குவிதி) சட்டம்

கடை காரியாலைய ஊழியர் (ஊழியம் மற்றும் ஊதியம் ஒழுங்குவிதி) சட்டத்தின் பிரிவு 10ன்படி 14 வயதிற்கு உட்பட்டவர்கள் எவரும் கடை மற்றும் காரியாலயங்களில் வேலைக்கமர்த்தப்படலாகாது. பொதுவாக கடை காரியாலத்தில் முற்பகல் 6 மணிக்கு முன்னரும் பிற்பகல் 6 மணிக்கு பின்னரும் வேலைக்கமர்த்தப்படலாகாது. ஆயினும் 18 வயதடைந்த பெண் ஹொட்டல் மற்றும் விடுதிகளில் பிற்பகல் 6 மணிக்கும் பிற்பகல் 10 மணிக்கும் இடையில் வேலைக்கமர்த்தப்படமுடியும். அத்துடன் வதிவிட ஹொட்டல்களில் இரவில் வேலைக்கமர்த்தமுடியும். வியாபாரக் கடை அல்லது அலுவலங்களில் பிற்பகல்6 மணிக்கும் பிற்பகல் 10 மணிக்கும் இடையில் வேலைக்கமர்த்தப்படமுடியும்.

– மகற்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டம்

– தண்டனைச் சட்டக்கோவை

– பராமரிப்புச் சட்டம்

– கணவனையிழந்த மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதியச் சட்டம்- குடும்ப வன்முறைச் சட்டம்

– பாலியல் தொழிலுக்காக பெண்கனையும் சிறுவர்களையும் ஈடுபடுத்தலை தடுத்தலும் எதிர்த்தலும் மீதான சமவாயச் சட்டம் என்பனவாகும்

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம். – 1948
((UNIVERSAL DECLARATION OF HUMAN RIGHTS.

(INTERNATIONAL DOCUMENTS IN RELATION TO WOMEN’S RIGHTS)

UNHR

CEDAW

(CONVENTION ON ELIMINATION OF DISCRIMINATION AGAINST WOMAN.)

DEVAW :-

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழித்தல் மீதான பிரகடனம்- 1993
(DECLARATION ON THE ELIMINATION OF VIOLENCE AGAINST WOMEN)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *