மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய – உரையாடலின் (26.4.2015) இரண்டாவது அமர்வின் -ஒலிவடிவம்

 மூன்றாவது அமர்வு – (26.4.2015) -தலைமை  -புதியமாதவி,

 puthiyamathavi

 

 

 

 

 

 

பாலினம், பாலின பாகுபாடு      -ரஜனி

 

IMG_8994

 

நாம் இன்றைய சூழலுக்குப் பொருத்திப் பார்க்கலாம்? இன்றைக்குள்ள உரிமை அரசியலை எடுத்துக்கொள் வோம். அரசையும் சட்டத்தையும் நோக்கியே தன்னுடைய பாதையை இந்த அரசியல் வகுத்துக் கொண்டுள்ளது.என்னைப் பொறுத்த வரை அடையாள அரசியல் என்பது இன்னமும் சிக்கலானது. ஒரு அடையாளத்தை எல்லா காலத்திற்கும் தேவையான ஒன்றாக நாம் வரையறுக்க வேண்டியிருக்கிறது. அதைத் தற்காலிகமான ஒரு தேவையாகப் பார்க்கவே முடியாது. ஆனால், அடையாளம் என்பது ஒரு தனிப்பட்ட அலகாக எனக்கு மட்டுமே உரிய ஒன்றாக பார்க்கும் பொழுது அது என்னை ஒருவிதத்தில்  சிறைப்படுத்திவிடுகிறது. அடையாளம் என்பதை ஒரு விரிந்த தளத்ததில் வைத்துப் பார்க்க முடியுமானால்; ஒரு பரந்த தோழமை யுடன் இணைத்துப் பார்க்க வேண்டுமானால் முதலில் நான் என்ன என்பது நமக்குத் தெரியவேண்டும், 

ஓர் ஆரம்ப கால வயதிலிருந்தே உட்பதியப்படும் ஆணை முதன்மைப்படுத்தும் சமூகக் கட்டமைப்பின் வகிபாகங்கள் மற்றும் பால்நிலை அடையாளங்கள் பெண்கள், சிறுமிகள், ஆண்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான வன்முறையை ஏற்படுத்தியும் மற்றும் தனிப்பட்டவர்கள் அவர்களது முழுமையான ஆற்றல் திறனளவிற்;கு விருத்தியடைவதைத் தடுக்கின்றதுமான பாரதூரமான தாக்கங்களைக் கொண்டிருக்கலாம் என தெரிவிக்கும் ஒரு அதிகரிக்கின்றளவிலான சான்றுகள் உள்ளன.ஓர் ஆரம்ப கால வயதிலிருந்தே உட்பதியப்படும் ஆணை முதன்மைப்படுத்தும் சமூகக் கட்டமைப்பின் வகிபாகங்கள் மற்றும் பால்நிலை அடையாளங்கள் பெண்கள், சிறுமிகள், ஆண்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான வன்முறையை ஏற்படுத்தியும் மற்றும் தனிப்பட்டவர்கள் அவர்களது முழுமையான ஆற்றல் திறனளவிற்;கு விருத்தியடைவதைத் தடுக்கின்றதுமான பாரதூரமான தாக்கங்களைக் கொண்டிருக்கலாம் என தெரிவிக்கும் ஒரு அதிகரிக்கின்றளவிலான சான்றுகள் உள்ளன.
IMG_9013 1
பெண் சுயம் என்று நான் சொல்வது சுய அடையாளத்தை .தன்னை தானே செதுக்கி உயரங்களை சிகரங்களை  நோக்கி செல்கிற பெண்ணோட தேடல் வெளிதான் நான் பேசபோற சுயம் .
Wயோட மகள்  Xஓட சகோதரி  Yயுடைய மனைவி Zஉடைய அம்மா இப்படிதான் பல பெண்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள் .வீட்டைத்தாண்டி அவர்களின் பெயர் இல்லை .ஏன் திருமணம் ஆனதற்கு  பிறகு திருமதி என்ற அடையாளத்திற்குள் அவள் பெயரே அவளுக்கு சொந்தமில்லை .அதான் இனிஷியல்லயும் நம்ம பெயர் இல்ல .பரம்பரைலையும் நம்மக்கான அடையாளம் இல்ல . கையிலிருப்பது ஒரு பேனா .இதே மாதிரி தோற்றத்தில் இதே மாதிரி  மையளவில் இதே மாதிரி செயல் திறத்துடன் லட்சக்கணக்கான பேனாக்கள் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திலும்  உள்ளது .இந்த மையில் நாம் என்ன எழுதிறோம் என்பதை பொறுத்து தான் அந்த பேனாவுக்கு அர்த்தம் கிடைகிறது . இந்த பேனா மாதிரி தான் பெண் வாழ்க்கையும் . பெண்கள் உலகம் முழுவதும் ஒரே மாதிரி உடல் உறுப்புக்கள் ,ஹார்மோன்கள், செயல்திறனுடன் இருக்கிறோம் .அதுவும் கோடிக்கணக்கில் . அதில் எத்தனைப் பேர் அடையாளங்களாக இருக்கிறார்கள் ? அர்த்தமுள்ள வாழ்வை வாழ்கிறார்கள் ?
20150426_084914

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *