மார்ச் 8 முன்னிட்டு ஊடறுவில் பல ஆக்கங்கள் ஒரே நேரத்தில் பிரசுரமாகின்றன
கெகிறாவ ஸஹானா.
நூற்றியொராவது நபர்
ஒரு நல்லவனைப்போல நடித்து
அருகில் வருகிறாய்.
நான் கேட்காதபோதும்
உதவிகள் செய்கிறாய்.
என்றோ ஒருநாள்
நீயும்
என் பட்டியலில் சேர்ந்த
நூற்றியொராவது நபராக மாறுவாய்,
என் பெண்மையை
என் மென்மையை
ஆராதித்து அருகே வந்து,
நான் எதுவும் கண்டுகொள்ளாததால்
அல்லது எதற்கும் வளைந்து கொடுக்காததால்
என்னைத் தூற்றித் திரிகின்ற
மற்ற நூறு பேரையும் போலவே.
எம் பெண்டிர் நிலை விடிகிறது. நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன். கையில் குழந்தை@ அடுப்பில் குழம்பு@ எதிரே பிளாஸ்டிக் ப+க்கள். மீண்டும் மூடிய ஜன்னல்@ மூடிய கதவு. வெளியே பேச்சுக் குரல்கள். வெளியே மனிதர்கள் வாழ்கிறர்களா என்ன? இந்த நாலு சுவர்களுக்கப்பால் மனுஷ வாழ்க்கை இருக்கிறதா என்ன? இருக்கட்டுமே. அவர்கள் வாழ்ந்தால் என்ன? வீழ்ந்தால் என்ன? எனக்கு கையில் உள்ள குழந்தை பெரிது, அடுப்பில் கொதிக்கும் குழம்பு பெரிது, அதைவிடப் பெரிது நான் தினமும் பார்க்கும் டீவி மெகா தொடர்.