தகவல் -சிறகு நுனி-
கடந்த 13.03.2010 சனிக்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரை காத்தான்குடி கலாசார மண்டபத்தில் ஏறக்குறைய 300 பெண்கள் கலந்து கொண்ட கருத்துப்பகிர்வு நிகழ்வொன்று இடம்பெற்றது. சிறகுநுனியின் அணுசரனையுடன் கவிஞர் பெண்ணியா ஏற்பாடு செய்திருந்தார் |
இந்நிகழ்வில் பெண்களின் பல்வேறு துறை சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கென புதியதொரு அமைப்பினை உருவாக்குவதற்கான அவசியம் குறித்து கலந்து கொண்ட பெண்கள் பலர் தம் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இது ஒரு முழுநாள் நிகழ்வாக மீண்டும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டுமென சிலர் கருத்துத் தெரிவித்தனர். நிகழ்வின் இறுதியில் அமைப்பை உருவாக்குவதற்கு விருப்பமானவர்களின் விபரங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர். அ. மார்க்ஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.