அ முத்துலிங்கம் தனது பேனாவின் வக்கிரத்தால் பெண்போராளிகளின் ஒழுக்கத்தின் கட்டுடைப்பில் இலக்கியம் படைக்கின்றார் அவரின் கதையளப்பில் ஈ.பி.ஈஆர்.எல:எப்பின் அங்கம் வகித்த பெண் போராளிகளைப்பற்றி வலிந்து தனது கதையில் கட்டுடைப்பு செய்கிறார்.
எந்தவித ச‘மூகப்பொறுபுமின்றி வெறும் த்ரிலிற்கும் பிரபல்யத்திற்கும் பேய்கதை எழுதுகிறார். பெண் பேராளிகளின் உயிர்த்தியாகங்களையும் , அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் கதையளக்கிறார்.
ஈழ போராட்டத்தில் முதல் பெண் போராளியான சோபனா என்ற சோபா ஈ.பி.ஆர்.எல்.எப் ஐ சேர்ந்தவர் இவரே முதல் பெண் போராளியாவார் அதன் பின்னரே மற்றைய இயக்கங்கள் பெண்களை தமது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டனர்;
.பெண்களால் ஆணுக்கு நிகராக போர்க் களங்களில்கூட நிற்க முடியும்,ஆயுதம் ஏந்திப் போராட முடியும் என்பதை நிரூபித்தவர்கள் இந்த ஈழப் பெண் போராளிகள். அப்படியிருக்க ….அ. முத்துலிங்கம் தனது ஆணாதிக்க பேயாட்டத்தை இப்படி வர்ணிக்கிறார்.
(தோழர் சிவா மறுபடி சொப்பனாவை அணைத்தார். அன்று இரவு அது 17வது தடவை. அவள் அவருடைய தலைமுடியை ஏழு குதிரை வேகத்தில் இழுத்தபடி முன்னேறினாள். அவள் கன்னமும் உதடுகளும் நெற்றிப் பொட்டும் ஒரே சிவப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. ‘ஓ சொப்பனா, சொப்பனா’ என்றார் தோழர் சிவா. அவருக்கு அந்தப் பெயரைப் பலதடவை உச்சரிக்க வேண்டும்போலத் தோன்றியது. அவர் குனிந்து தன் கால் பெருவிரலைப் பிடித்தார். ‘என்ன? என்ன?’ என்று பதறினாள் சொப்பனா. நேற்று மதில் பாய்ந்தபோது காயம் என்றார். ‘இங்கேயா?’ என்று பெருவிரலை தடவினாள். ‘ஓமோம்’ என்று தலையாட்டினார். அங்கே முத்தம் பதித்தாள். ‘இங்கே?’’ என்று கணுக்காலைத் தடவினாள். அவர் ‘ஓமோம்” என்று சொல்ல அங்கே முத்தம் பதித்தாள். ‘இங்கே?’ முழங்காலைத் தடவினாள். ‘ஓமோம்’. அங்கேயும் முத்தம் பதித்தாள். அவள் முத்தங்கள் மேல்நோக்கி ஏறின. உடம்பின் உறுப்பின் பெயர்களும் மாறியபடியே வந்தன.)http://www.kalachuvadu.com/issue-181/page86.asp
பெண்களது உரிமைகளை அவர்களது பாலியல் சுதந்திரத்தை மற்றும் பாலியல் உணர்வை கொச்சைப்படுத்தி அம்மண உடல்மீதமர்ந்து எக்காளமிடுகின்றார். இறந்தவளைப் புணருது அவரது பேய்க்கதை .பாலியலை வெளிப்படுத்துகிறோம் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறோமென்று பெண்களை தம் பேனாவின் வக்கிரத்தால் குத்திக் கிழித்து ஆணாதிக்கபேயாட்டம் போடும் இந்த இலக்கிய ஆணாதிக்க வாதிகள் பேய்ககதையென்று பெண்களையும் அவர்களது ஒழுக்கத்தையும் கட்டுடைப்பு செய்கின்றோம் என தமது பொய்யான குரலால் பேய்க்கதை எழுதுகின்றனர்.
இது வர்க்க சமூகத்தின் சாபம !; பெண்களின் வரலாற்று பாதையெங்கும் நிற்குமிந்த …ஆணாதிக்க பேயாட்டம்
ஈழப்பேராட்டத்தில் நாம் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் அவை சரியானதாகவோ அல்லது பிழையானதாகவோ இருப்பினும் முழப்பெண்கள் சமூகத்தின் வாழ்விலும் ஈழப்போராட்டத்தில் பெண்கள் பங்கேற்றமை பெண்களின் வரலாற்றில் ஒரு வெற்றிச் சாதனை தான். அது கொஞ்சமாய் இருந்தால் என்ன ?? பேய்க்கதையாக இருந்தால் என்ன…??
ஆயிரமாயிரம் ஆண்டு ஆணாதிக்க பெரு நோயால்…
…அழுகிப்போன ஆண்குறி…
புளுத்துப் போன மூளை
வீரப் பிணங்களைப் புணரும் பேடிப் பிணங்கள்
அருமைச் சகோதரிகளே…வீரப்போராளிகளே…
உமது நிர்வாணம் அவமானமல்ல…
– புரட்சிகர பெண்கள் விடுதலைமையத்தின் வெளியீட்டிலிருந்து