அண்மையில் பிரான்ஸ்,சுவிஸ் நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த மாலதி மைத்ரியுடனான உரையாடல்கள் மிகவும் பயனளித்திருந்தன. பல விடயங்களை அவருடன் உரையாடக் கூடியதாக இருந்தது.இந்த வெட்டவெளி சிறை பற்றியும்
கேள்விகளை முன்வைக்கும் மக்களின் ஒவ்வொரு செயற்பாடும் போராட்டமாக மாறிவடுகிறது. விடுதலை வந்து சேருமென்ற கனவை விட விடுதலைக்கான அன்றாடப் போராட்டங்களே வாழ்வுக்கான அழகியலாகின்றன.வாழ்வாதராங்களை அழித்துவிட்டு இலவசப் பொருள்களுடன் வாழ்ந்து விடலாமென கனவு காணும் சமூகத்தினரின் அரசியல் அவ்வளவு தெளிவானதில்லை ஒரு சமூகத்தின் எதிர்காலம் தனக்கான போராட்டங்களை அடையாளம் காணுவதில்தான் அடங்கியுள்ளது .நமது அடையாளத்திற்கான அப்போராட்டங்கள் பற்றிப் பேசுகின்றன மாலதி மைத்ரியின் வெட்டவெளி சிறை இக்கட்டுரைகள்
80 களின் பிற்பகுதியில் உருவான ஈழப் பெண்கவிஞர்களின் அரசியல் தன்னெழுச்சி தமிழகப் பெண் கவிஞர்களின் கவிதை வெளியில் சில மாற்றங்களை நிகழ்த்தியிருந்தாலும் அவற்றை கவிஞர்கள் தெளிவாக அறிந்திருக்கவில்லை விடுதலை அரசியலை கருப்பொருளாக முக்கிய செயல்தளமாக இக்கவிஞர்கள் எடுத்துக்கொள்ளவில்லை அரசியல் சமூக நெருக்கடிகளின் காரணமாக சில அரசியல் கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல தமிழகப் பெண் கவிஞர்களின் தங்கள் கவிதைக்குள் இயங்கும் அரசியலுக்கு எதிரான அரசியல் சக்திகளுடனும் நிறுவனங்களுடனும் செயல்பட்டுத் தங்கள் படைப்புக்கும் தமிழச்சமூகத்திற்கும் தொடர்ந்து அநீதி இழைத்து வருகின்றனர். என சாடுகின்றார்
ஈழ அரசியல் சொல்லாடல் களம் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வழியாக உலகெங்கும் விரியத் தொடங்கியது. இதன் ஊடாக நூல் விற்பனைத் தளங்களும் உலகெங்கும் விரிவடையத் தொடங்கின. இந்த உலகச் சந்தையை அறுவடை செய்து கொள்ள படைப்பாளிகள் ஈழம் குறித்து எழுதத் தொடங்கினர் சிறு பதிப்பகங்களும் இந்தப் போட்டியை பயன்படுத்திக் கொண்டு பெரும் முதலாளியாயினர். இதே காலகட்டத்தில் தான் பல தமிழ்ப்படைப்பாளிகள் தமிழ்திரைதுறைக்கும் அரசியில்வாதிகளுகு;கும் தரகர்களாக மாறினர். தமிழகத்தின் முப்பெரம் அழிவு சக்தியின் பங்குதாரர்கள் சிற்றிதழ் இயக்கங்களால் மனிதவுரிமைப் போராளிகளாகப் பிரபலப்படுத்தப்பட்டனர் ஆனால் ஈழப்போரைத் தடுத்து ஈழத் தமிழர்களை காப்பதற்கான உண்மையான அரசியல் போராட்டத்தை இந்தப் படைப்பாளிகளும் பதிப்பாளர்களும் முன்னெடுக்கவில்லையென்பது வரலாற்று அவலமாக மீந்து நிற்கிறது.என தனது ஆதங்கத்தையும் அவர்களின் சந்தர்ப்பவாதத்தையும் அவளிப்படுத்துகிறார்.
வண்புணர்ச்சியால் வாழும் ஆண்களின் தேசம் என்ற புனித ஆண் அல்லது நம்பிக்கைகுரிய ஆண்மகன் இந்தியாவில் எத்தனைபேர் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆண் உறவினர்கள்தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள்,ஆசிரியர்கள் அதிகாரிகள், அரசியில்வாதிகள்,காவல்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் என யாருமே பெண்களை மதித்து நடத்தத் தெரியாத சமூகத்தில் வண்புணர்ச்pயே ஆண்களின் பெருமை என நம்பும் தேசத்தில் பிறந்து வாழ்வது அவமானத்திற்குரியதாக உள்ளது என வண்புணர்ச்சியால் வாழும் ஆண்களின் தேசம் கட்டுரை பல விடயங்களை பேசுகிறது. தூக்கு கயிறும் பெண்களின் பாதுகாப்பும்,திரைவழி நுழையும் வன்கொடுமை,ஆண்களை கட்டிப்போடுங்கள் கருப்பையில் இருந்து தொடங்கும் சாதி ஒழிப்பு என கட்டுரைகளும் விமர்சனங்களும் வெட்டவெளிச் சிறையில் நிறைந்து காணப்படுகின்றது.
வெட்டவெளி சிறை”
காலச்சுவடு பதிப்பகம்