-பிரம்மராட்சசி- ( Thanks tp Thanimam)

greenwave12

ராட்சசி- சிவகாமி கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றாயா?
சிவகாமி – ஆம் சொல்.
ராட்சசி – மல்லன் ராஜ்ஜியத்தில் யுத்தங்கள் தீர்ந்து அமைதி ஆட்சி என்று கேள்விப்பட்டேன் உண்மையா?
சிவகாமி – ம் அப்படித்தான் பேசிக்கொள்கின்றார்கள். ஆனாலும்..
ராட்சசி- ஆனாலும்?! இந்த ஆனாலும் என்ற பதிலுக்குப் பின் ஏதோ மர்மம் இருப்பதாய்த் தெரிகின்றதே..
சிவகாமி – ம் மர்மங்கள் இல்லாத ராஜ்ஜியங்கள் எங்குண்டு?
ராட்சசி- ஏன் இங்கில்லையா?
சிவகாமி – அட பைத்தியமே முடிச்சவிழ்ந்து தெட்டத்தெளிவாய் நம் சுவர்க்க நுழைவுக்கான ஆயத்தங்கள் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. முட்டாள் பெண்ணே இன்னுமா அரியணையை நம்பிக்கொண்டிருக்கின்றாய்?

ராட்சசி- என்ன செய்வது நான் படிக்கும் பாலர்பாடசாலையில் நம்புவதுபோலாவது நடித்தாகவேண்டுமே.
சிவகாமி – நல்லகாலம் நான் நாட்டியத்தோடு நிறுத்திக்கொண்டேன். அந்தப்பக்கம் தலைவைத்துவிடவில்லை.
ராட்சசி- ஆயனச் சிற்பியைக் காணவேண்டும்.
சிவகாமி – ஏன்? எதற்கு?
ராட்சசி- அவரிடம் சொல்லி சில சிலைகளை செதுக்கவேண்டும்.
சிவகாமி – சிலையா? புரியவில்லை.
ராட்சசி- நாங்கள் இருந்ததற்கான அடையாளமாய் சில சிலைகளையாவது விட்டுச் செல்வோமே.
சிவகாமி – ஹா ஹா ஹா.
ராட்சசி- ஏன் சிரிக்கிறாய் சிவகாமி?
சிவகாமி – இரத்தமும் சதையும் உத்வேகமும் கொண்ட மனிதர்களையே தீர்வை கட்டும்போது சிலையாவது கலையாவது. போ போ போய் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகு.
ராட்சசி- இந்த வாழ்தலுக்கான அர்த்தம் புரியவில்லை.
சிவகாமி – புரியவில்லையா பிடிபடவில்லையா??
ராட்சசி- இரண்டும்தான்.
சிவகாமி – சரி உன்னை நான் ஒன்று கேட்டுக்கொள்கின்றேன் நீ பழமைவாதியா? புதுமைவாதியா? இல்லை புரட்சிவாதியா?
ராட்சசி- இந்த மூன்றும் இல்லை. நான் சந்தர்ப்பவாதி.
சிவகாமி – பலே பலே. நான் சபதவாதி. நீ சந்தர்ப்பவாதி…. ஹா ஹா…..
(சிரிப்பொலி நீள்கின்றது. ஒற்றர் படை அசுவங்களின் குழம்பொலி எழுகின்றது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *