தகவல் எஸ்,எம்.பாத்திமாபாஹிரா (அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பு )
அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பானது பெண்கள் ஊடான சமூக மறுமலர்ச்சி என்ற தூர நோக்கினை அடைந்து கொள்வதற்காக 1997ம் ஆண்டு ஆரம்பிக்க்கப்பட்டது. பேண் தலைமைத்துவக் குடும்பங்களை இலக்குக் குழுக்களாக கொண்டு செயற்பட்ட இவ் அமைப்பில் ஆரம்பத்தில் 21 அங்கத்தவர்கள் அங்கம் வகித்தனர். இருப்பினும் அனைத்துப் பெண்களுக்காகவும் செயற்பட வேண்டிய தேவையும் அவசியமும் ஏற்பட்டதனால் சகல பெண்களையும் இணைத்து தற்போது இவ்வமைப்பு இயங்கிக்கொண்டிருப்பதுடன் தற்போது அதன் செயற்பாடுகளும்,அங்கத்தவர்களும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றமையைக் காணலாம்.2010 இல் இருந்து பெண்களுக்கான வாழ்வாதார வழிகாட்டுதல்கள்,கல்விக்கான உதவிகள்,சுகாதாரச் செயற்பாடுகள்,குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாளல்,சமூக அணிதிரட்டலும் ஊக்குவிப்பும்,தமிழ் முஸ்லிம் மக்களிடையே சமாதான சக வாழ்வை ஏற்படுத்தல், பெண்களைப் பலப்படுத்தல், பெண்களையும் சிறுவர்களையும் பாதுகாப்பதற்கான பொறிமுறைகளை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளை பல உத்திகளுக்கூடாக மேற்கொண்டு வருகின்றது.
இதன் முக்கிய செயற்பாடாக இன நல்லுறவிக்கான மே;பாட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.இதில் தமிழ் முஸ்லிம் சமூகப் பொறுப்பு வாய்ந்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர் மற்றும் நிறுவன முகாமைத்துவம்,தலைமைத்துவம் தொடர்பான பயிற்சி பட்டறைகள்,நடத்தப்பட்டது. ஆத்துடன் பெண்கள் பிரச்சினைகளைப் பேசக் கூடிய பிரதேச ரீதியான வலையமைப்பு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதுடன் குழுவாக இயங்கக் கூடிய பொறிமுறை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடங்களில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இன முரண்பாடுகள் ஏற்பட்ட காலகட்டங்களிலும் சமாதான காலங்களிலும் எவ்வாறு இரு இன மக்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ்நதனர் எனும் தமது அனுபவங்களை ப் பகிர்ந்து கொள்ளும் ஒன்று கூடலும் நடைபெற்றது. ஆத்துடன் இன நல்லுறவை மே;படுத்துவதற்கான வாசிகசாலை ஒன்றும் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது என்பதையும் கூறிக்கொள் விரும்புகின்றோம். எதிர் காலத்தில் சமூக அபிவிருத்தி நோக்கிய பயணத்திற்கு இவ்வமைப்பு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.