சி.சிறிதாருணி (அங்கத்தவர் – அனர்த்தமுகாமைத்துவபெண்கள் கூட்டமைப்பு)
மட்டக்களப்பு மாவட்டமானது 30 வருடகாலமாக கொடூரயுத்தத்தினை அனுபவித்தது. இந்த சூழ்நிலை காரணமாக நிகழ்ந்த கொலை, கடத்தல், காணாமல் போதல், கப்பம் கோரல், இடப்பெயர்வு, பெண்களுக்கெதிரான வன்முறைகள் போன்றவற்றினால் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் உட்பட சிறுபான்மைச் சமூகத்தினைச் சேர்ந்த தமிழ்பேசும் பெண்களை அதிகம் பாதித்தது. ஆயினும் பெண்கள் பலர் இந்த பாதிப்புக்களுக்குள் அமிழ்ந்து போகாது தமக்கும், தம்மைப் போன்ற பிறருக்கும் நிகழும் உரிமைமீறல்களைக் கேள்விகேட்க முன்வந்தனர். அதனடிப்டையில் 1990ம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் பெண்நிலைவாத செயற்பாட்டாளர்கள் பலரினால் தனிப்பட்டமுறையிலும், அவர்கள் சார்ந்த நிறுவனங்கள், அமைப்புக்கள் ஊடாகவும் பெண்கள் உரிமைகளை உறுதிப்படுத்தும், மேம்படுத்தும் செயற்பாடுகள் பல முன்னெடுக்கப்பட்டன. தொடர்ந்தும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்தவகையில் மனிதரால் ஏற்படுத்தப்பட்ட அனர்த்தங்கள் மட்டுமல்லாது இயற்கை அனர்த்தங்களும் கூட மட்டக்களப்பு மாவட்டத்தினை பெருமளவில் பாதித்தன. 2004ம் ஆண்டு மார்கழியில் எழுந்த சுனாமியினால் உயிரிழப்பு, சொத்து இழப்புக்களுடன் பெருமளவு மக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்நேரத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் பெண்கள், சிறுவர்கள் அதிகளவிலான பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தனர். இந்தப் பிரச்சனைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கான அவசர கூட்டமொன்று 2005 தைமாதம் 7ம் திகதி கூட்டப்பட்டது. இதில் பெண்களுக்காகவும் சிறுவர்களுக்காகவும் வேலை செய்யும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதில் சிறுவர்கள் எதிர் நோக்கிய பிர்ச்சனைகள் தொடர்பாக பேச ஆரம்பிக்கப்பட்டு அதற்கே அதிக நேரம் செலவழிக்கப்பட்டமையினால் பெண்கள் பிரச்சனைகள் தொடர்பாக கதைக்கப்படவில்லை. ஆனால் இதன் காரணமாக அக்கலந்துரையாடலுக்கு வருகைதந்திருந்த பெண்கள் நிறுவனங்களைச் சேர்ந்தபிரதிநிதிகளால் இன்னுமொரு கலந்துரையாடல் தைமாதம் 12ம் திகதி 2005இல் ஒழுங்கு செய்யப்பட்டது. சூரியாபெண்கள் அபிவிருத்திநிலையத்தில் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தில் பெண்களுக்காக வேலை செய்து கொண்டிருந்த அமைப்புக்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர். அனர்த்தங்களின் போது பெண்களின் பிரச்சினைகள் அக்கறைக்குரிய விடயமாக பார்க்கப்படவேண்டும் என முடிவெடுக்கப்பட்டதற்கு அமைவாக இன்றிலிருந்து சரியாக 10 வருடங்களுக்கு முன்னர் கூட்டப்பட்ட அந்த சந்திப்பில் பிறந்ததே மட்டக்களப்பு-அனர்த்த முகாமைத்துவக் கூட்டமைப்பாகும். .
இவ்வலையமைப்பு ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களுக்குரிய முறைசார் கட்டமைப்பினை இன்றுவரை கொண்டிராதபோதிலும் சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. 2005ம் ஆண்டு இவ்வலையமைப்பில் உள்ளுர், தேசிய, சர்வதேச நிறுவனங்கள், அரசநிறுவனங்கள், சமூககுழுக்கள், தனிப்பட்ட ஆர்வலர்கள் போன்றோரை உள்ளடக்கிய 50 அங்கத்துவம் வகித்தனஇருந்தது ஆரம்பத்தில் 50ஆக இருந்து பின்குறைவடைந்தாலும் கூட இவ்வலையமைப்பின் பெண்கள் உரிமைசார் செயற்பாடுகளின் உத்வேகம் இன்றுவரை குறைவடையவில்லை.
அனர்த்தத்தின் பின்னர் பெண்கள் எதிர் கொண்ட பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க செயற்பட என உருவாக்கப்பட்ட இவ் வலையமைப்பு பின்னர் பலவிதமான பெண்கள் உரிமைகளுக்காக செயற்படும் வலுமிக்க வலையமைப்பாகமாற்றம் பெறத்தொடங்கியது.
அர்ப்பணிப்பு மிக்க அங்கத்தவர்களது இணைந்த வலு ஊடாக வௌ;வேறு காலப்பகுதிகளிலும் புறச்சூழல் காரணிகளாலும் ஏற்படுத்தப்பட்ட பெண்களுக்கெதிரான சவால்களுக்கு பலவிதமான பதிலிறுப்புக்களை செய்து வருகின்றது. இவை நேரடியாகப் பெண்களுக்கான அவசரகாலஉதவிகள்; ஆலோசனை, வழிகாட்டல் வழங்குவதல் போன்றவற்றில் தொடங்கி விழிப்புணர்வுச் செயற்பாடுகள், சட்டஉதவிகள், வெளியீடுகள், பிரச்சாரங்கள் ஊர்வலங்கள், அறிக்கைகள் எனப் பலவகைப்படும். இவ்வலையமைப்பின் செயற்பாடுகள் தொடர்பான பொறுப்புக்கள் அங்கத்தவர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் கூட்டுப்பண்பினையும் கொண்டிருக்கின்றது.
மேலும் இந்தக் கூட்டமைப்பானது பெண்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளுக்கெதிராகவும், பெண்கள் உரிமைக்காகவும் குரல் கொடுத்தல், போன்ற விடயங்களுக்காக மட்டக்களப்பு மற்றும் ஏனைய மாவட்டங்களில் உள்ள ஏனைய பெண்கள் வலையமைப்புக்களுடனும் ன் இணைந்து செயற்படுகின்றது.
இவ்வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தொடர்பான விடயங்களை கவனத்திற்கொள்ளும் முக்கியவலையமைப்பு என பெறர் பெற்றுள்ள அனர்த்தமுகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பானது 10வருடங்களை கடந்தும் நிலைத்துநிற்பதற்கு திட்டமிட்ட செயற்பாடுகளுடன் ககோதரித்துவ நம்பிக்கையும் அங்கத்தவர்களின் அர்ப்பணிப்பும்; காரணமாக அமைகின்றது.
இந்த வகையில் 11வது வருடத்தில் காலடி வைக்கும் எமது அனுபவம் இது போன்ற அர்ப்பணிப்பு மிக்க சமூக மாற்றத்துக்கான வௌ;வேறு சமூக வலை யமைப்புக்களுக்கும் முன்னுதாரணமாக அமையும் என்று நம்புகின்றேன். இதற்காக இன்னும் பலமாகவும் இணையறாதும் செயற்படுவதுடன் வாழும் சாட்சியாய் இருப்போம் நாம்.
நன்றி