தமிழ்ச்செல்வியின் கற்றாழை புதினம் NCBH-ன் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது.
கிராமியப் பின்னனி கொண்ட மணிமேகலை என்னும் சாதாரண பெண்ணின் வாழ்வில் நடக்கும் மூர்க்கமான சம்பவங்கள் அவளைத் தொழில் நகரமான திருப்பூருக்கு விரட்டுகிறது. அவளை ஒத்த கைவிடப்பட்ட பெண்களின் புகலிடமாய்த் திகழும் அப்பெருநகர் மறைத்து வைத்திருக்கும் ஒளி குன்றாத புன்னகையை ஈரம் காயாத கண்ணீரை இப்புனைவில் தரிசிக்க முடியும். சுய சார்பும், சுய மதிப்பும் உடைய இவ்வுழைக்கும் பெண்கள் ஒரு கம்யூனாக இணைந்து வாழும் மாதிரி உலகைப் புனைவாக்கி இருப்பதன் மூலம் சு.தமிழ்ச்செல்வி பெண்ணின் நம்பிக்கைகளுக்கு மீண்டுமொருமுறை புத்துணர்வளிக்கிறார்.