அடியாழத்தே…

நேபாள மொழியில்:- Bhishma Upreti

ஆங்கிலத்தில்:-Manu Manjil

தமிழில்:- கெகிறாவ ஸ§லைஹா

நான் எரிந்து கொண்டேயிருக்கிறேன்
அக்னியின் உலைக்களத்திலன்று,
என் சொந்த இதயத்தினுள்ளேயே.

துப்பாக்கியில் வெளியான
சன்னங்கள் பிறழ்ந்து
ஆழ்துயிலிலாழ்ந்து கனவிழைக்கும்
கன்னியரின் தலையைத்
தொட்டுத் துளைத்துப்
போகவாரம்பிக்கையில்,
அவலட்சணமான பேரச்சம்
பள்ளி செல்லும் சிறுவனைத்
துரத்தி விரட்ட ஆரம்பிக்கையில்,
விசுவாசங்களை கொன்றழித்து
பேரிரைச்சலுடன் மரணங்கள்
வெடித்திடுகையில்
எல்லாப் புறத்திருந்தும்
மூடிடும் பனிபோல விரிவடைந்து
நான் எரிய ஆரம்பித்தேன்
கன்னங்கரு பீதியில்.

கனவேதுமின்றி
பரவசங்களும் ஏதுமின்றி
நான் வளர்ந்து ஆளாகிய குன்றுகளோ
காய்ந்து வரண்டு துரும்பாகி இளைத்து
வெடித்துச் சிதற
ஆயத்தமாகி இருக்கின்றன ஆதலினால்
ஒரு இருளடர் வருங்காலத்துக்கான முன்னறிவிப்பு
என்னோடு எரிந்த வண்ணம் அடியாழத்தே ஆழமாய்.

நான் விட்டு விடுதலையாகிட
அபார ஆசை கொள்கிறேன்
ஜீவிதத்தினது இராகத்தையே கொல்லுகின்ற
எல்லாவகை எரிதல்களிலிருந்தும்.
இசை இன்னும் ஓயவில்லை.
என்ன விலையாயிருந்தாலென்ன
வாழ்வினது ஜீவன் அழகேயாம்.
வாழ்க்கை அதன் சொந்த நறுமணத்தையே
குடித்தழிக்கக் கூடாது.
நான் இவைபற்றி சிந்தித்துப் பார்க்கிறேன்
ஆழத்தே அடியாழத்தே.
என்னைப் பச்சையாய் எரிக்க
ஆரம்பிக்கும் ஆன்மாவோடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *