வேர்கள் “வரை” கொய்தவள் (ஆழியாளின் கருநாவு பற்றிய குறிப்புக்கள்)

எஸ்தர் விஜித்நந்தகுமார் (,திருகோணமலை,இலங்கை)

http://www.oodaru.com/wp-content/uploads/2014/01/karunavu-170x300.jpg

பெண்களின் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்துக் கிடக்கின்றன பல இரகசியங்கள்அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கி போகின்றன கல்லாக கனத்தப்படி. அபூர்வமாக சில சமயம் அவ் இரகசியங்கள் மகரந்தங்களாய் மிதந்து வந்து இளைப்பாறுதலை தரும் வாய்ப்புக்களை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. சிலசமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அபாயங்கள் நேர்கின்றன.

சிலசமயம் அவற்றை உரத்துப் பேசியோ, கண்ணீர் விட்டு கதறியழுதோ அல்லது எழுதியோ ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தை சிலர் எதிர்கொள்ளும் போது நூலிழை பிரிவதது போல் மெல்ல மெல்ல அவைப் பிரியலாம் அல்லது சலனமற்ற குளத்தல் எறிந்த கல்கைப் போல் அலைகளை அதிர்வுகளை ஏற்படுத்தலாம். அபூர்வமான அவை அடுத்தவனின் மனதை இளக்கி சமூகத்தல் ஒரு மூடப்பட்ட ஜன்னலைத் திறக்கலாம்.அதனைத்தான் கருநாவு ஊடாக ஆழியாள் வெளிப்படுத்த முயன்றுள்ளார்.

கருநாவை நான் வாசிக்க அதிக நேரம் எடுக்கவில்லை.(சிறிய தொகுப்பு என்பதால்) இருப்பினும் சில கவிதைகள் தவளைப் பாய்ந்த குளமாய் சற்று சலசலத்துக் கொண்டேயிருந்தது.

‘கொப்பித்தாளில் கிடந்த குறிப்பு யாருடையது” என்ற கவிதையில் வேகமான அதிர்வை உண்டாக்கியது. இந்த அனுபவம் ஈழத்தில் போர் அமர்க்களத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியும்.அதனை இங்கு நான் அலட்ட விரும்பவில்லை. மௌனித்து ஆழமான காயங்களை நினைத்து மெழுகுவர்த்தியாகி கவிதையுடன் காணாமல் போகின்றேன். யாரிடம் போய் சொல்வது? என்று தெரியாமல் தத்தளிக்கும் இருதலைக் கொள்ளி எறும்பாக நம்மவர்கள் உள்ளுரிலேயும் வெளியூரிலையும் நடைப்பிணங்களாகி வாழ்கின்றார்கள்.
இதை ஆமியாழ் ; கருநாவாக்கியிருக்கிறார். ‘’ஒரு வரலாற்று துன்பியலை இன்று பல பேர் எழுத்துக்களாக்கி ஆவணப்படுத்தி கொண்டேயிருக்கிறார்கள் இவற்றைப் பெண்களின் உணர்வுகளிலிருந்து உதிர்க்கும் போது அது ஒரு மாறுபட்ட சலசலப்பை உண்டுபண்ணுகிறது. திடிரென்று மரக்கிளையில் அமரும் ஒருப் பறவையைப்போல்!!

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எழுத்தாளர்களில் அதிகம் பேசப்படுபவர் ஆழியாள். அவரின் கவிதைகள் எப்போதும் போர் பற்றியே அதிகமாகப் பேசுவார். அதனை தவிர்த்தும் அவரால் மடடுமல்ல எவராலும் கடந்து செல்ல முடியாது. போரின் துயரங்களை நேரில் கண்டதால் என்னவோ கருhவு முழுவதும் அந்த சோகம் ததும்பி வழிகின்றது. இதற்கு

செவ்வரத்தம் பூ கவிதையில்

‘காளி ஆச்சி என்ன செய்வாள்
அவள் செவ்வேரிக் கண்களை
மூடிக் கொண்டு கைவிட்டாள்-‘

அந்தோ ஈழத்தமிழர்களை கடவுளும் கை விட்டு வட்டாள் என்ற உண்மையை அவள் மறைக்கவி;லை.இன்று இலங்கையில் காணாமல் போனோரின் நிலை தொடர்பாக ஜனாதிபதி ஈணைக்குழுவின் முன்னாள் வடகிழக்கு மக்கள் கண்ணீரைக் கொட்டி காணிக்கை படைக்கிறார்கள் ஜயகோ!! பலிப்பீடங்களில் வெட்டபட்ட பலியிடப்பட்ட குமாரரையும் குமாரத்திகளையும் எங்கே புதைத்தீர்கள் என்று குமுறுகிறார்கள் இதனை ஆமியாள்

“ஒரு சுனாமியாய் அலைவின் களைப்பிலும்
என் மகளைக் கண்டீரோ கண்டீரோ……..
புpதற்றுகிறாள் அப்பைத்தியக்காரி இறுதியில் துரோகங்களினதும் அவமானங்களினதும் பொய்மைகளினதும் அடர் காடுகள் இடையே அவர்கள் பயணித்து மாதுளை முத்துக்களாய்  புளிப்பு இனிப்பாய் சுவைத்த மகளைக் கண்டனர்.
இந்தத் துயரம் யாருக்கடா சாமி வரும்? எம்மவர்க்குத்தான் பல்லாண்டுகள் கடந்தும் விட்டுச்சென்ற சாபத்தின் பின் விளைவுகள்.

30 வருடக்கால யுத்தத்தை நேரில் தரிசித்தவர்கள் இரவோடு இரவாக நிலங்களை விட்டு பிரிந்தவர்கள் (வேர்கள் அற்றவர்கள்) 18 வருடமாக முகாம் வாழ்வை அனுபவித்தவர்கள ;(இன்றும் அனுபவிப்பவர்கள்) கொடும் சுனாமியில் அள்ளிக் கொண்டு போனவர்கள் இனவாத ஒடுக்கு முறைக்குள் அன்று (இன்றும்) முடுக்கி விடப்பட்டவர்கள் இப்படியானவர்களின் கிளைகள் வேலி தாண்டும் பொழுது ஆழியாள் போன்றவர்கள் கத்தியில் பேனையை செய்திருக்கிறார்கள்.

http://www.oodaru.com/wp-content/uploads/2014/01/karunavu-170x300.jpg

அதுதான் “சூட்டுக்கு சொந்தக்காரர்” என்ற கவிதையில் பேசுகிறது. வாழ்வின் உண்மை நிலையை வெகு இலகுவாக ஆழியாளின் வரைபடம் கவிதையில் (உடும்பு பிடி என்பது பிள்ளையின் தவழும் பருவம்) இந்த இடத்தில் கண்ணதாசனின் வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?என்றப்பாடல் எங்கோ ஒலிக்கிறது
சாவின் வழிப்பாதைக்கு மட்டும் தான் வரைபடம் தேவையில்லை அது இயல்பாய் எங்கள் முன்னே நடந்து திரிகின்றது. அதைக் கண்டும் நம்மவர்கள் காணாமல் இருக்கிறார்கள் (சாவின் பயம் யாருக்குத்தான் இல்லை!!)

உள்ளுரிலேயும் வெளியூரிலேயும்புலம்யெர்ந்த மக்களுக்குத்தான் தெரியும் வாழ்ந்து சலித்த பூமியின் அருமை அந்தவகையில் ஆமியாளின் நாட்கள் வரும் கவிதை,அவரின் எதிர்ப்பார்ப்பையும் இப்பபடியும் நடக்கலாம் என்ற எதிர்வு கூறலின் அடிப்படையில் பேசுகிறது.“நாங்கள் கேட்பதெல்லாம் முற்றிலும் எங்களை கைவிடுங்கள்” ஏனெனில் எங்களுக்கென்று வாழ்க்கையும் நாட்களும் மிஞ்சிக் கிடக்கின்றது என்ற நம்பிக்கையை அவர் மெருகேற்றுகிறார்.

இருப்பினும் வாழ்க்கையின் மாயையை கசப்பின் வழுக்கற் பாறைகளில் சறுக்கி உருளும் கூழாங்கல் போல்
ஏன்ற யதார்த்தத்தையும் தட்டிவிட்டு செல்வது ஆழியாளுக்கே உரிய எழுத்தின் அழகு. வாழ்த்துக்கள்.

ஆழியாளின் அனேகமான கவிதைகள் போரின் தடங்களை புரட்டி பார்ப்பதாகவே உள்ளது.(மொழிபெயர்ப்பு கவிதைகளும் உட்பட) போரினதும் இனவாத வெறியினதும் பாதிக்கப்பபட்ட பலதரப்பட்ட நிலையையும் குத்திக் காட்டுவதில் அவர் தம் கவிதைகள் ஒயவில்லை. (ஓயக்கூடாது) பிரசித்திப்பெற்ற லசந்தவின் மரணம் சகலத்தரப்பினரையும் பெரும் துயரத்தை ஏற்படுத்திய ஒன்று (.இன்று வரை) என்னாலும் கூட அதனை சற்று ஜீரணிக்கவே இயலவில்லை. எங்கு அடக்குமுறைகள் அதிகரிக்கின்றனவோ அங்குதான் ஆர்ப்பாட்மும் கோ~ங்களும் துடித்தெழுகின்றன. என லெனினின் வரலாறு சுட்டிக்காட்டுகின்றது. தக்க உதாரணம் லசந்த அவர் தம் எழுத்துக்கள் அதுவே அவருக்கு இறுதி கொல்லியானது. அதனை கவிதாயினி நினைவு கூறும்போது கண்களில் நீர்க்கால்கள், நினைவும் ததும்பி வெடிக்கின்றது.

மேலும் “போரினது வெற்றி” என்ற கவிதையில் ஆசிரியர் தம் இனம் அனைத்தையும் சகிக்க துணிந்து விட்டது. என்கிறார். மண்டையோட்டையும், எலும்புத் துண்டையும் வைத்து விளையாடும் அளவுக்கு போரின் வெற்றி மட்டுமே குவிந்துக் கிடப்பதையும் எவ்வளவு அது சாதாரணமான விடயமாக மனித உயிர்கள் காவு கொள்ளப்படுவதையும் இலங்கை விவகாரத்தில் வெற்றி மட்டுமே எமது நோக்கம் விளைவுகள் அவை சம்பவிக்கவேண்டியதே என்ற மாற்றான் மனப்பான்மை சுடுகின்றது. இதனால்தான் என்னவோ வடகிழக்கில் தோண்டும் இடங்களிலெல்hம் மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் கிடைக்கின்றன. இது மனிதப்புதைக்குழி அல்ல மானிடா மனிதப் புதையல் சேகரித்து வை வரலாறுகள் சரி எலும்புக்கூடுகளால் நிரம்பட்டும்.

ஆழியாளின் கவிதைகள் மீளசுரக்கும் ஒரு காலத்தின் பருவ ஊற்றாக சுரந்து மெல்ல நதியாகி எம்மவர் மனங்களை நனைத்து செல்கிறது அப்போதுதான் தோண்டியெடுத்த மண் உதிரா மரவள்ளிக் கிழங்குகளை போல் மணமும் சுவையும் கொண்டவைகள். அதில் வீடு கவிதை எனக்கு பிடித்திருக்கிறது காணி நிலம் வேண்டும் என்ற பாரதியின் கவிதை தொடங்கி இன்று ஆழியாள் வரை அந்த விருப்பம் வித்தியாசமாக தொடர்ந்துக் கொண்டேயிருக்கின்றது. ஒரு கைப்படாத கட்டடத்தையே இவர் விரும்புகிறார். அதில் வசிக்கும் பாக்கியம் கவிதாரசம் மேலோங்கிய வாசகனுக்கே புரியும்.

மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையிலேயும் பெண்களின் உள்ளக்கிடக்கைகள் இவர்கள் எதனை விரும்புகிறார்கள? எப்படி சுதந்திரமாக மூச்சுவிட விரும்புகிறார்கள் என்பதை ஆழியாளின் கவிதைகளில் தெரிகின்றது. திருகோணமலை மண்ணையும் அவ்வப்போது பிணைக்கும் வரிகளில் அவரின் வாழ்வியல் தடம் மாறிப்போவதுப் பற்றியும் அவரால் தவிர்த்து எழுத இயலவில்லை.

ஆழியாளின் கவிதைகளில் நவீனத்துவம் மெருகேறிக் கிடப்பதுடன் புதிய புலத்தில் அவர் தம் வாழ்கின்ற சூழலையும் அனுபவத்தையும் புலத்தில் திணிக்கப்பட்ட கலாச்சார வாழ்க்கையும் தவிர்க்க முடியாமல் திணறுவது தெரிகின்றது.
அவரின் அவுஸ்திரேலிய கவிஞர்களின் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் மொத்த அழகு. ஒரு காலத்தில் நானும் வால்ட் விட்மன் ,நெருதா, எலியாட்ஸ் முதலானோரின் எழுத்துக்களை தமிழில் வாசிக்க சந்தர்ப்ம் கிட்டும் போது தேடல் பசி சற்று தீர்கின்றது இதில் ஆழியளைப் போன்று  தென்னிந்தியாவின் லீனா மணிமேகலை இலங்கையின் பேராசிரியர் நுஹ்மான் போன்றவர்ளைக் குறிப்ப்டலாம்.

கறுப்புக் காட்டுமிராண்டி என்றக் கவிதையில் நிறவாதத்தின் கொடுமையைப் பேசுகின்றார். கறுப்பு என்பதால் உரிமைகள் மறுக்கப்படுவதும் மறுக்கப்பட்தும் உலகறிந்த பேருண்மை. அழகு என்பது வெள்ளை என்ற மனோநிலையும் மாயையும் மக்கள் மனங்களில் பலாபிசினாய் ஒட்டிக் கிடக்கின்றது. இத்தனை விடயங்களையும் ஆழியாளின் இச்சிறு தொகுப்பு பெரும் எண்ணிலடங்கா சிந்தனை நூலிழைகளை கோர்த்து கொண்டெ வருகிறது. ஒவ்வொன்றையும் பிரித்து ரசித்து சீர்செய்து நேர்த்தியாய் நெசவு தரிக்கும் வேலையை மட்டும் வாசகனிடம் விட்டு செல்கிறார்.

கவிதை மொழி கவிதை என்பது ஒருவகை அனுவம,; உணர்வு பற்றைக்காட்டை வெட்டி செல்லும் தேடல், எதிர்ப்பு, ஆசை, குமுறல், கண்ணீர் எனப் பலவகைக்குள் கொண்டுவரலாம். இவைகளை செதுக்கும் உளி வேண்டுமானால் அவரவரைப் பொறுத்தது. செதுக்கலாம் உடைக்கலாம் அமைதியாக விட்டு விட்டு செல்லலாம் ஒரு நதியில் விழுந்த மழையைப் போல.இதனை கவிஞர் தமது ஆரம்ப உரையிலேயே குறிப்பிடுகின்றார். இழந்த வாழ்வின் அடையாளங்களும் ஏமாற்றமும்,துன்பியலும் புலம்பெயர்ந்த வாழ்வின் உண்மை நிலைப்பாடும் சிலந்தி வலையாய் இவரை சுற்றி பின்னிக் கிடக்கின்றது. அது தன் வலையை பெருப்பித்துக் கொண்டேப் போகின்றது. கவிஞரின் எழுத்து எரிமலையானது பெருகிவிட்ட வாழ்வியல் அனுபவத்தையும் முதிர்ச்சியையும் இன்னும் பல புத்தகங்களை காலப்போக்கில் குமிறிக் கொண்டேயிருக்கட்டும்.எளிமையான எழுத்துக்களுடனும் புதுக்கவிதை அழகுடனும் ஒரு நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட மணப்பெண் போல வெட்கத்துடன் எழுத்துக்கள் நாணுகின்றன.

எல்Nhருக்கும் பொதுவான அபிப்பிராயம் வெளிநாட்டில் ரம்மியமாக வாழலாம் தொல்லைகள் இல்லை சுதந்திரக் காற்றை அங்கு இறைவன் வானத்திலிருந்து கொட்டுகின்றான் என்று. இது முற்றிலும் உ;ண்மையல்ல புலம் பெயாந்தவர்கள் இன்றும் தம் மண்ணை நினைத்து நிலைக்குலைந்து நடைப்பிணங்களாகவே வாழ்கிறார்கள் எல்லா சொளகரியங்களும் வசதியும் இருந்து என்ன? எல்லாம் கிடைத்தது உயருள்ளவைகளையும் உயரற்றவைகளையும் நேசித்தவைகளும் அனுபவித்தவைகளும் உரித்துக்களையும் இழந்தப்பின்னர்தானே?!காலம் காயங்களை ஆற்றலாம்.தழும்புகள் புலம்பெயர் மக்களின் முகங்களில் இன்னும் அறையப்பட்டிருக்கின்றது என்பதை ஆழியாளின் ; கருவாவு கதைக்கிறது.

எல்லாமே இருந்தும் ஏதுமற்ற வெறுமைத் தோற்றத்தை விரக்தியை அழுத்திச் செல்கின்றது.
வெறும் கற்பனையை மட்டும் பிரட்டி பிரட்டி தட்டாமல் யதார்த்த வாழ்நிலையின் பல விடயத்தை இக் கருநாவு பேசுகின்றது. இருப்பினும் இன்னும் இவரின் மன வெளி பதிப்புக்கள் வெளி வர வேண்டும் குறிப்பாக புலம் பெயர் சமூகத்தின் தற்போதைய உணர்வுகள் போராட்டங்களும் இனி வரும் காலத்தில் வித்தியாசமான உணர்ச்சிப் பெருக்குடனும் புலம்பெயர் சமூகத்தின் பெண்களின் மனவோட்டங்கள் வெளி வரும் என நினைக்கின்றேன். இவரின் கவிதை அடர்த்தியும் கூடவேணடும் என்பது எனது கருத்து.

இறுதியாக அவுஸ்திரேலியாவில் , இத்தாலியல் சுங்கிடிச்சேலை அணியத்தான் முடியுமா?ஒரு வேளை அவர் சுங்கிடிச் சேலை அணிய வேண்டும் என்று விரும்பின் அவர் இலங்கைக்கு விரைந்து வந்தாலும் அதற்கு அரசின் அனுமதி பெறவேண்டும் என்பதை அறிவாரோ என்னவோ அதுதான் இன்றைய இலங்கையின் யதார்த்தம்.

பிற்குறிப்ப:
(இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பிரஜைகள் வடக்குக்கு செல்வதென்றால் அரசின் முன் அனுமதி பெறவேண்டும்)

கணவனையிழந்தவளின் கண்ணீர்
கிழவனின் சிரிப்பு
புலவனின் கோபம் ஆழியாளின
“கருநாவு அத்தனையும் அர்த்தமுள்ளவைகளே!!

—————————————————————–

கருநாவு கவிதைத் தொகுதி பற்றி வெளியீடும் விமர்சனங்களும்

– மரப்பாச்சி வழங்கும் கவிதை வாசிப்பும் -ஆழியாளின் கருநாவு கவிதைத்தொகுதி வெளியீடும்

– ஆழியாளின் கருநாவுஅறிமுகம்

– ஆழியாளின் ‘கருநாவு’ மீதான என் பார்வை …!யாழினி

– ஆழியாளின் ‘கருநாவு’ கவிதைத் தொகுதி அறிமுகநிகழ்வு

– தூண்டி அமைப்பின் ஏற்பாட்டில் “ஆழியாளின் கருநாவு” கவிதை நூல் அறிமுக நிகழ்வு புகைப்படங்கள் சில

– ஆழியாளின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் ‘கருநாவு’ கவிதைத் தொகுதியை முன்வைத்து ஒரு குறிப்பு — சு. குணேஸ்வரன்

– கருநாவு கவிதைத் தொகுதி பற்றிய குறிப்பு – வெலிகம ரிம்ஸா முஹம்மத்

– அந்தரித்து திரியும் பேரவலத்தின் நிழல் கவிந்த தனிமை – ஆழியாளின் கவிதைகள்-சி.ரமேஷ்

-ஆதித்தாயின் பெண்மொழியாய் ஆழியாளும் லூசிலி க்ளிஃப்டனும்- புதியமாதவி -மும்பை

-ஆழியாள் கவிதைகள் = மேகத்துக்குள் இயங்கும் சூரியன். -க.பஞ்சாங்கம். புதுச்சேரி-8

தேசிய கலை இலக்கிய பேரவை- ஹற்றன் கிளை அறிவியற் கூடத்தில்-ஆழியாளின் ‘கருநாவு’ கவிதை விமர்சனமும் கலந்துரையாடலும்

-ஆழியாளின் கருநாவு கவிதைத் தொப்பு மீதான விமர்சனமும் வெளியீடும் 16.10.2014 அன்று கொட்டக்கலையில்நடைபெற்றது -தகவல் -சந்திரலோக கிங்ஸ்லி

வேர்கள் “வரை” கொய்தவள் (ஆழியாளின் கருநாவு பற்றிய குறிப்புக்கள்–எஸ்தர்விஜித்நந்தகுமா(,திருகோணமலை,இலங்கை)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *