உலகை மாற்றிய 11 “பெண்கள்”

index  கை மாற்றிய 11 பெண்கள் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு Huffnington post  பத்திரிகை உலகளவில் முக்கியமான பெண் ஆளுமைகளில்  11 பேரை தேர்ந்தெடுத்து  அறிமுகப்படுத்தியுள்ளது.  

நுஜுத் அலி 

march11 -1 

யேமன் நாட்டுச் சிறுமியான நுஜுத் அலி தன 10வது வயதில் தன்ன விட 20வயது மூத்த மனிதரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தப்பட்டார்.ஆனாலும் ஓரு வழக்கறிஞரின் உதவியால் மணவிலக்குப் பெற்றார். இன்றைக்கு மத்திய கிழக்கு நாடுகளில் பெண்ணுரிமைக்காகப் போராடும் பெண்ணாக சர்வதேச அளவில் அறியப்பட்டிருக்கிறார்.‘நான் நுஜுத் 10வயதானவள் மேலும் விவாகாரத்தானவள்   (I Am Nujood, Age 10 and Divorced)என்ற இவரது சுயசரிதை நூல் அதிக விற்பனயில் இருக்கும் சிறந்த சுய சரிதை

  வேரிஸ் டைரி

march11-2

சோமாலிய நாட்டு மாடல் வேரிஸ் டைரி 1990 இல் தன் மத ஆசாரச் சடங்கான,கட்டாய பாலுறுப்பு அறுவயால் (கந் வெட்டுதல்) பாதிக்கப்பட்டவராக உலகஅளவில் அறியப்பட்டவர். அத்தகைய கொடிய நிகழ்வுகளுக்கெதிராக தொடக்கத்திலிருந்து செயல்பட்டு வருகிறார். பல்வேறு அமப்புக்கள் உருவாக்கியிருக்கிறார். அதில் ஓன்று பெண்களின் உரிமை மற்றும் கௌவரவத்திற்காகசெயல் பட்டுக்கொண்டு இருக்கிறது. மற்றொன்று பெண்களின் கட்டாய பாலுறுப்பு அறுவை கொடுமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்காமாகக் கொண்டு செயலாற்றி வருகிறார். (இவர புகழ்பெற்ற சுயசரிதயான ‘பாலவனப் பூ’ (DesertFlower)நூல் உன்னதம்வெளியிடஇருக்கிறது)   http://udaru.blogdrive.com/archive/1016.html (ஊடறுவில்வெளிவந்தஇவரின் கட்டுரை)

 

ஷெரில் வுடுன்

march11-3

நியூயார்க் டைம்ஸின் எழுத்தாளர் நிகோலஸ் கிறிஸ்டோஃபின் மனைவியாக அறியப்பட்ட ஷெரில் வுடூன் பல்திறன் படைப்பாளி. இவரும் புலிட்சர் பரிச வென்றவர். மாற்று எரியாற்றல் றயில் நிபுணர். தன கணவருடன் சேர்ந்து ‘பாதி வானம்’ (Half The Sky)என்ற நாவலை எழுதியிருக்கிறார். சர்வ தேச உதவிகள சரியான முறயில் பயன்படுத்த ஓரு வழிகாட்டியாக இந்நூல் போற்றப்படுகிறது. வளரும் நாடுகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்பது பெண்களின் கல்வியிலும் முன்னேற்றத்திலும் செய்யப்படும் முதலீடுகளே இகும். இவை சிறந்த பலன கொடுக்கும் என்று இந்நூல் பரிந்துரைக்கிறது.

 

ராச்சேல் மடோவ்

march11-4

தனது மாறுபட்ட நிகழ்ச்சிகளால் புகழ் பெற்ற ராச்சேல் மடோவ் ‘பிரதான நேரத்தின் செய்தி நிகழ்ச்சியால்’ அறியப்பட்டவர். ‘முதன் முதலில் ஹோட்ஸ் உதவித்தொகை பெற்ற கே அமெரிக்கவாசி’ என்று வெளிப்படையாகத் தன்னை கூறிக்கொண்டவர். ராச்சேல் மடோவின் நிகழ்ச்சி, கெய்த் இல்பர்மான் உடன் கவுன்டவுன் மற்றும் ஜான் ஸ்டூவர்டுடன் தின நிகழ்ச்சி என்று மிகவும் பேசப்படுகிற நிகழ்ச்சிகளில் பிரச்சினக்குரியவர்களை பிரச்னைக்குரிய விடயங்களை முன்னிறுத்வதால், சமீப காலமாக அமெரிக்க அரசியலின் இரு கட்சிகாரர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளானவர்.

ஈவ் ஏன்ஸ்லர்

march 11 -5a தனது விருது பெற்ற நாடகமான TheVaginaMonologues மூலம்அறியப்பட்ட ஈவ் ஏன்ஸ்லர் பெண்களுக்கெதிரான வன்முறையை ஓழிக்கஇயங்கும் சர்வதேச இயக்கம் ஓன்றின் தலைமப் பொறுப்பில் உள்ளவர்.இவர் உருவாக்கி உள்ள இலாப நோக்கமற்ற கழகமான வி-டே (V-Day)என்பது காங்கோ நாட்டில் போர் மற்றும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு மையமாக இயங்குகிறது.

 தமிழ் கூறு நல்லுலகில் செயல்பட்டுவரும் தமிழ்ப் பெண் ஆளுமைகளை அறிமுகப்படுத்த
மிகவும் முயற்சி செய்தோம். ஆனால் அதற்கான செயல் கட்டமைப்பு வாய்க்காததால்
அடுத்த வருட மகளிர் தினத்தில் நிச்சயமாக அறிமுகப்படுத்த உள்ளது உன்னதம்.)

 டாக்டர்வாங்கரி மத்தாய்

march11-6 பசுமை வளைய இயக்கம் என்ற பெயரில் பெண்கள் உரிமை மற்றும் சுற்றுச் சூழல் பற்றி கவனம் செலுத்கிற அமைப்பு 1970 -ல் உருவாக்கியவர். 2004 -ல் இந்த அமைப்பிற்கு நோபல்விருது வழங்கப்பட்டது.இப்பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண் இவர்.

சோம – மாம்

march11-7 சோமலி மாம், குழந்தையாக இருக்கும் போதே, ஒரு பாலியல் அடிமையாக1970-ல் கம்போடியாவிற்கு விற்கப்பட்டவர்.பல ஆண்டுகளாக தினமும் பலாத்காரத்திலும் பயங்கர சித்திரவதையிலும் சிக்கி துன்புற்றவர். ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பித்து வெளியேறி தன் அனுபவத்தை வெளிப்படுத்தி, தன்னப்போல் பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்கப் போராடி வருகிறார். தற்போது இதற்காக ஒரு இயக்கத்த ஆரம்பித்து உலகு முழுவதுமான பெண்ணடிமை மற்றும் பாலியலுக்கான மனித விற்பனயை ஒழிப்பதற்கு பாடுபட்டு வருகிறார்.

மாரி. சி. வில்சன்

march11-8 மாரி. சி. வில்சன், பெண்கள ; இன்னும் அதிக அளவில் அரசியலுக்கு
வர வேண்டும், இன்னும் அதிகமாக ஜனநாயகத்தில் பொறுப்பு வகிக்க
வேண்டும் என்ற முழக்கத்தை முன்வத்து வெள ;ளை மாளிகை திட்டம்
The White House Project)) என்ற இயக்கத்தை உருவாக்கியவர்
.

ஜோஹன்னா சிகர் டாடோடிர்

march11 -9

ஜோஹன்னா சிகர் டாடோடிர் ஐஸ்லாந்தின் முதல் பெண் பிரதமர்.
வங்கிகளுக்கெதிரான தீவிர திருத்தங்களைக் கொண்டுவந்தவர். இதனால்நாட்டின் சரிவை தடுத்தவர். ஐரோப்பாவின் மிகவும் பெயர் பெற்றபெண்மணியாக ஜெர்மன் பெண் அதிபர் ஏஞ்சலா மெர்கெல்லுடன் போட்டியில் இருக்கிறார்.

கேத்தன் பிக்கலோ

march11-10

இன்றக்கு உலகையே தன்ன நோக்கி திருப்பிய கேத்தன் பிக்கலோதன  The Hurt Locker  படத்தின் இயக்குநர். ஒஸ்கர் விருது பெற்ற முதல்பெண் இயக்குநர்.இயக்கம் தயாரிப்பு மற்றும் திரைப்படங்களில் வன்முறைபற்றிய தேடல் இவற்றில் தொடர்ந்து எல்லைகளை விரிவாக்கி வருபவர்.

 சுமந்தா பவர்

march-11-11 புலிட்சர் பரிசு வென்ற சமந்தா பவர் ஒரு பத்திரிகையாளர். மனித உரிமை அவமதிப்பு மற்றும் இன அழிப்புக்கெதிராக எழுதி வருபவர். சூடான் நாட்டின் டார்ஃபர் கொடுமைகளை உலகின் முக்கியமான நாளிதழ்களின் முன்பக்கத்தில் தொடர்ந்து எழுதி கவனப்படுத்தியவர். உலகிற்கு வெளிப்படுத்தியவர். இப்போ அமெரிக்க பாதுகாப்பு சபையின் பல்நோக்க விவகாரத் துறையின் இயக்குநராக இருக்கிறார். 

 

– நன்றி-  உன்னதம், மார்ச் 2010, கௌதம சித்தார்த்தன்

1 Comment on “உலகை மாற்றிய 11 “பெண்கள்””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *