ஹல்துமுல்ல மண்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு

தகவல்-முச்சந்தி இலக்கியவட்டம்

ஹல்துமுல்ல மண்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு

கற்றல் சாதனங்களை வழங்க இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் நடவடிக்கை

இதற்கான பொருட்களையும் நன்கொடைகளையும் வழங்க விரும்புவோர் இம்வமைப்பின் நலன்புரி குழுத் தலைவர் என். சந்திரனிடம் (தொலைபேசி இல. 0777518974) ஒப்படைக்கவும் அல்லது  ஹட்டனில் இலக்கம் 18, ஹட்டன் ஹவுஸ் வீதியில் அமைந்துள்ள அறிவொளி கல்வியத்தில் ஒப்படைக்குமாறு சம்மேளனத்தில் தலைவர் லெனின் மதிவானம் அவர்களும் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் அவர்களும் கேட்டுக் கொள்கின்றனர்.

 

பதுளை ஹல்துமுல்ல  கொஸ்லந்தமிரியபெத்த எனும் இடத்தில் நடைப்பெற்ற இயற்கை அனர்த்ததில்- மண்சரிவில் 300க்கும் அதிகமானவர்கள் சிக்குண்டிருப்பதாக அறிய முடிகின்றது.

இதுவரை,  உயிரிழந்த 10 பேரின்சடலங்கள்மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் இருந்து தப்பியிருப்பவர்களில் மாணவர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களின் சுக துக்கங்களில் எம்மால் முடிந்ததை செய்வதே மனித நாகரிகமாகும் என்றவகையில் சகலவற்றையும் இழந்த நிலையிருக்கும் அவர்களுக்காக குறைந்த பட்சம் கற்றல் சாதனங்களையாவது வழங்க முற்படுவது அவசியமானதாகும். 

பதுளை ஹல்துமுல்ல  கொஸ்லந்தமிரியபெத்த எனும் இடத்தில் நடைப்பெற்ற இயற்கை அனர்த்ததில்- மண்சரிவில் 300க்கும் அதிகமானவர்கள் சிக்குண்டிருப்பதாக அறிய முடிகின்றது. இதுவரை,  உயிரிழந்த 10 பேரின்சடலங்கள்மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் இருந்து தப்பியிருப்பவர்களில் மாணவர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களின் சுக துக்கங்களில் எம்மால் முடிந்ததை செய்வதே மனித நாகரிகமாகும் என்றவகையில் சகலவற்றையும் இழந்த நிலையிருக்கும் அவர்களுக்காக குறைந்த பட்சம் கற்றல் சாதனங்களையாவது வழங்க முற்படுவது அவசியமானதாகும். இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *