தேனுகா கருணாகரன் (பிரான்ஸ்)
இலங்கையில் போருக்கு பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் பற்றி புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரேஷ்ட சட்டத்தரணியான யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். 2009 -2014 ம் ஆண்டு வரை முடிவுறுத்தப்படாத ஒரு யுத்தம் ;- சித்திரவதைகளும் பாலியல் வன்முறைகளும் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை பார் (BHRC) அமைப்பு மற்றும் மனித உரிமைகள் அமைப்பு இணைந்து இலங்கைக்கான சித்திரவதைகள் சம்பந்தமாக மீறல் அறிக்கை .
வன்முறைக்குள்ளாக்கப்பட்ட சுமார் 40- 50பேர் ஊடாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இவ் ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மனித நேயத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுரமான இவ்வன்முறைகள் இலங்கை அதிகாரத் தரப்பை பொறுப்புக்கூற வைக்க இது ஒரு காத்திரமான சட்ட நடவடிக்கை எனக் கூறப்படுகின்றது.
விடுதலைப்புலிகள் அமைப்புடனான 26 வருட காலம் நடைபெற்ற யுத்தத்தில் வெற்றி கொள்ளப்பட்டதாக கூறிக்கொள்ளும் இலங்கை அரசானது இலங்கையின் 5 வருடங்களுக்கு பின்னரும் கூட கடத்தல்கள், பாலியல் வன்முறைகள், பாலியல் பலாத்காரம் பொய்க்குற்றச்சாட்டு காணிகள் அபகரிப்பு, சித்திரவதைகள் போன்ற பல்வேறு விதமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் இவ் வன்முறைகளுக்கும் துஸ்பிரயோகங்களுக்கும் முகம் கொடுத்த பல தமிழர்கள் புலும்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சி ஊட்டுபவையாக உள்ளன என்றும் மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் மனித நேயத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் சித்திரவதைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிறைமா (Pசiஅல குயஉiஉநை) என்ற முகத்தோற்றத்தின் அளவிலான அடிப்படைகளைக் கொண்ட வழக்கினை இவ்வமைப்புக்கள் உருவாக்கியிருக்கின்றன.
தமிழர்களுடன் நல்லிணக்கைத்தை தேடிக்கொண்டிருப்பதாக (தமிழர்களின் நல்லிணக்கத்தை) தேடிக்கொண்டிருப்பதாக கூறும் இலங்கை அரசு பயங்கரவாத சட்டம் புனர்வாழ்வு முகாம்களை அழித்தல் காணகளை அபகரித்தல் தமிழர்கள் தமது சொந்தங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதை அழித்தல் சித்திரவதை என முனைப்புடன் செயற்பட்டு வருவதை புடம் போட்டுக் காட்டிலுள்ளதுடன் தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்பதையும் இத்தகைய செயல்களினால் பொய்ப்பித்துள்ளது.
யாஸ்மீன் தொடர்ந்து கூறுகையில் பாதுகாப்பு முகவர்கள் பயன்படுத்தும் பீதி மிக்க வெள்ளைவான்களில் பலவந்தமாக ஏற்றப்பட்டு கடத்தப்படுவதாகவும் இதனால் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் பய பீதியுன் வாழ்வதாகவும் ஒரு இளம் தாய் வெள்ளைவானில் கடத்தப்பட்டு மின்சாரக்கம்பிகளால் தாக்கப்பட்டு பின் பெற்றோல் அடங்கிய பிளாஸ்டிக் பையால் மூச்சு திணறடிக்கப்பட்டு பின் நினைவு திரும்பிய பின் அப் பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். என்றும் இப்படி பல சம்பவங்கள் தம்மால் அடையாளம் காட்ப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் கூறுகிறார் யாஸ்மின் சூக்கா
இப்படி பல வன்முறைகளை திரட்டியுள்ள மனித உரிமை அமைப்புக்களுக்கு பொறுப்பானவர்களில் ஒருவரான பேராயர் டெஸ்மண்ட் டுடு கூறுகையில் இழந்துவிட்ட சந்தோசத்தையும் அமைதியையும் இவர்களது வாழ்க்கையில் மீண்டும் இவர்கள் பெறுவது அசாத்தியமே அந்த வகையில் இவர்களின் ஆத்மாவை அழிக்க வேண்டும் என்ற தனது இலக்கினை இலங்கை அரசாங்கம் அடைந்திருப்பதனையே காட்டுகிறது என்கின்றார். டெஸ்மண்ட் டுடு
மேலும் இலங்கையில் துஸ்பிரயோகங்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதின விசாரணை முடியும்வரை சர்வதேச அமைதிகாக்கும் நடவடிக்கைகளிலிருந்து இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் இலங்கையுடனான உறவை சர்வதேசம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்த மனித உரிமைகள் பார் அமைப்பின் தலைவியும் சட்டத்தரணியுமான கேர்ஸிடி பிறிம்லோ தெரிவத்துள்ளார்.
நீங்களும் உங்கள் தரவுகளையும் சாட்சியங்களையும் பிகர்ந்து கொள் விரும்பின் தொடர்புகட்கு
For further information please contact
Sophie Toumazis sophie@tpr-media.com
or Olivia Patt olivia@tpr-media.com
or call +44(0)208 347 7020/+44(0)7974 428858
tpr media consultants
020 8347 7020
www.tpr-media.com
TIMA – The International Media Agency
Artem Special Effects for events, television anNo Fire Zone
Rivinews
ITV: Warren United (TX April 22)
Channel 4: The Last Chance School
follow us @tpr_media_PR
Visit http://www.tpr-media.com/nfor our latest projects and news.