தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்ட ‘வளர்பிறை’ பெண்கள் தலைமைத்துவ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கிராமிய அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கோரிய அமைதி ஊர்வலம் இன்று புதன்(24) கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் பெற்றாவில் அமைந்துள்ள மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க அலுவலகத்தில் குறித்த அமைதி ஊர்வலம் ஆரம்பமானது.குறித்த ஊர்வலமானது மன்னாரில் உள்ள 13கிராமங்களில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும்,மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரி குறித்த அமைதி ஊர்வலம் இடம் பெற்றது.
இதே வேளை குறித்த ஊர்வலத்திற்கு பேசாலை மற்றும் வங்காலை மீனவர்களும் ஆதரவு தெரிவித்து குறித்த அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வாசிக்க
http://www.lankaviews.com/ta
பாலியல் வன்முறைகளுக்கு எதிராகப் போராட்டம்!
பாலியல் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மட்டக்களப்பு நகரில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் ஒன்று கூடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக மகளிர் அமைப்புகளினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இரு செய்திகளையும் தொடர்ந்து வாசிக்க
http://www.lankaviews.com/ta