ஈழத்தின் பெண் எழுத்தாளர் சிதம்பரபத்தினி எனும் பத்தினியம்மா திலகநாயகம் போல்.
சிதம்பர பத்தினி என்ற புனையெரில் 1963களிலிருந்து சிறுகதைகைள எழுதியவர் ;இவரின் சிறுகதைகளின் கருவாக பெண்ணியம், காதல், குடும்பம் போனறவைகள் ஆகும் இவரின் சிறுகதைகளான தெளிவு, அண்ணா, நிஜமும் நிழலும் மன்னிப்பு , எரியகம் போன்றவற்றை குறிப்பிடலாம். தான் எப்படி எழுதத் தொடங்கினார் என்பது அவருக்கே ஆச்சரியம் என்கிறார். சுதந்திரன், ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இவரின் சிறுகதைத் தொகுப்பு நிஜமும் நிழலும் இவர் சில குழந்தைகளுக்கான கவிதைகளையும் எழுதியுள்ளார்.
பெண்களின் மனங்களில் ஏற்படும் மனவடுக்கள் மாறவும் – ஆறவும் என் கதைகள் ஒற்றடம் போல் இடமளித்தால் …. பிரக்ஞையுள்ள மானிடர் மத்தியில் பெண்கள் நியாயபூர்வமான உரிமைகளுடன் – சமத்துவத்துடன்- வாழ வழி விட்டால் அதுவே என்னை எழுதத் தூண்டிய எண்ணங்களின் – உணர்வுகளின் மகத்தான வெற்றி என்கிறார் சிதம்பரபத்தினி