-கி-கலைமகள் (இலங்கை)
என்னை விசாரிப்பவர்களுக்கும்
நம் மீது அனுதாபப் படுவவர்கள் – என
காட்டிக் கொள்பவர்களுக்கும் சொல்
நான் உயிருடன் இருப்பதாக
பால்குட பவனிகளிலும்
நீதான் முன் செல்வாய் என்பது
எனக்குத் தெரியும்
விடுதலை செய்யப்படவிருக்கும்
பட்டியல்களிலும்
உயிரோடிருப்போரின் பட்டியல்களிலும்
எனந்னைத் தேடி அலையும் உனக்கு – நான்
என்ன சொல்வது
மீண்டும் என்னை வழியனுப்பி வைத்து
சந்திவரை பார்த்துக்
கொண்டிருப்பதற்காகவேனும்
நான் வீடு வர ஆசைப்பட்டேன்.