– புரோட்டீன்கள் –
கேள்வி கேட்க மறந்தவர்களுக்கு அல்லது முன்னாள் மாற்றுக்கருத்தாளர்களுக்கு: புலிகள் பிழைகள் விட்ட போதெல்லாம் மாற்றுக்கருத்து வைத்தவர்கள் சிலர் இன்றைக்கு ராஜபக்க்ஷ அரசுடன் சேர்ந்து வேலை செய்கிறார்கள். சேர்ந்து செய்யட்டும். ஆனால் ராஜபக்க்ஷ அரசு விடும் பிழைகளுக்கெல்லாம் அவர்கள் மாற்றுக்கருத்து வைக்கமாட்டார்களா? ஏன்? சுப்பனைப் பாடிய உங்களுடைய வாய்கள் அப்பனைப் பாடாதோ? |
பேராசிரியர் ரஜீவ விஜேசிங்ஹவின்
அகதிமுகாம் பாலியலும், ஆதி கிரேக்க மெய்யியலும்
Amnesty Internationalஇன் Sam Zarifi இலங்கை அகதி முகாம்கள் சம்பந்தமாக கூறியிருந்த கருத்தை மறுத்துப் பேசும்போது – CNN பேட்டியாளரிடம் Can I show you the picture?, Let me show you என்று அடிக்கடி திரு.ரஜீவ விஜேசிங்ஹ படங்காட்டி வாங்கிக் கட்டினார். எப்படி என்றால் ரஜீவ “நீங்கள் படங்காட்டுவதை விட எங்களை – ஊடகவியலாளரை உங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதித்தால் நாங்களே நிலமைகளை போட்டோ புடிச்சுக்குவம்” அதனால் மனித உரிமைவாதிகளுக்கும், ஊடகவியலாளருக்கும் அனுமதிப் பத்திரங்களை வழங்குகின்ற வழியைப் பாருங்கள் என்றார் CNN பேட்டியாளர். இங்கே கதைக்க வந்தது அந்த விஷயமல்ல. விஷயம் கீழே.
திரு.விஜேசிங்ஹ Observer பத்திரிகையில் முகாம்களில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் பற்றி இவ்வாறு கூறியிருக்கிறார் “அங்கு ஒருதொகை பாலுறவுகள் நடந்தன”, “அந்த இடத்தில் நான் இருக்கவில்லை அதனால் எதுவும் நடக்கவில்லையென சொல்லமுடியாது” எங்களுக்கு கிடைத்த முறையீட்டின்படி இராணுவவீரர் ஒருவர் இரவு 11 மணிக்கு முகாமொன்றுக்குள் சென்று, அதிகாலை 3 மணிக்கு வெளியேறி உள்ளார். அங்கு நிகழ்ந்தது – அது இன்பத்துக்கான பாலுறவாக இருக்கலாம், ஏதாவது உதவிக்கான பாலுறவாக இருக்கலாம் அல்லது ஆதி கிரேக்க மெய்யியல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ந்திருக்கலாம், எங்களுக்குத் தெரியாது”.
திரு.ரஜீவ சொல்வதுபோல, பாலுறவு இன்பத்துக்கானதாக இருந்திருக்கலாம் – இரு சாராரும் மனம், உடல் ஒப்பிச் சந்தோஷமாக இருந்திருந்தால் அதைப் பற்றி எங்களுக்கும் சந்தோஷமே. அவர்கள் வாழ்கவென்று ஜே!ஜே!ஜே! போடுவோம்.
ஆனால் நீங்கள் இரண்டாவதாகச் சொன்னது போல – உதவிக்கான பாலுறவாக இருந்திருக்கலாம் என்றால் மே 2009 முதல் செப்டம்பர் 2009க்குள் அது என்னென்ன வகையான உதவிகளாக இருக்கும் திரு.ரஜீவ? மற்ற எல்லாவற்றையும் இழந்து போட்ட உடுப்போடும், அரைகுறை உயிரோடும், மிஞ்சின அங்கங்களோடும் வந்த பெண்களும், ஆண்களும், குழந்தைகளும் என்ன உதவிகளை இராணுவ வீரர்களிடம் எதிர்பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? சுட வேண்டாம், அடிக்க வேண்டாம், சாப்பாடு, தண்ணி, நித்திரைக்கு இடம், மாத்துடுப்பு, மருந்து இவைகளோடு இந்த முகாமிலிருந்து உயிரோடு வெளியேறுவது எப்போது, எப்படி? என்பவற்றைத்தவிர.
இதையே மறுபக்கமாகப் பார்ப்போம். இந்த இராணுவவீரர்கள், அடிபட்டு வந்த பெண்களிடமும், ஆண்களிடமும், குழந்தைகளிடமும் இருந்து எவை எவற்றை எதிர்பார்த்திருப்பார்கள்? பணிவு, கட்டுப்பாடு, களையெடுப்புக்கு உதவி, கட்டளைக்கு அடிபணிதல் என்பவற்றை விடவும்.
வெற்றியின் இறுமார்ந்த மனநிலையில் இருந்த இராணுவ வீரர்களின் கட்டளைக்கு, எத்தனை பேர் உயிருக்குப் பயத்தில், அடிக்குப் பயத்தில், சாப்பாடு, தண்ணி கிடைக்காமல் போகும் பயத்தில், முகாமிலிருந்து வெளியேறவே முடியாமல் போய்விடுமோ என்ற திகிலில் – பாலுறவுக்கு உடன்பட்டிருப்பார்கள்?
இதுதான் நீங்கள் மேற் சொன்ன உதவிக்கான கைமாற்றுப் பாலுறவு ரஜீவ.
இது உதவிக்கான பாலுறவு அல்ல. இது திகில் பாலுறவு. இதற்கு பாலியல் வன்முறை, பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி என்றெல்லாம் பெயருண்டு என்பது உங்களுக்குத் தெரியாததல்ல.
மூன்றாவதாக ஆதி கிரேக்க மெய்யியல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ந்திருக்கலாம் என்கிறீர்கள். ஒரு கலந்துரையாடலுக்கு இரு சாராரும் ஏதோ ஒரு விஷயதானத்தின் பொதுப்புள்ளியில் சந்திக்க வேண்டும். ஒரு வெற்றி பெற்ற பெரும்பான்மையின இராணுவ வீரனும், தோல்வியுற்ற சிறுபான்மையினப் பெண்ணும் சந்திக்கக் கூடிய பொதுப்புள்ளி, ஆண்டான் – அடிமைக்குரிய பொதுப்புள்ளியாகவே எங்களுக்குத் தெரிகிறது. அந்த ஆண்டான் – அடிமை வட்டத்தில் கலந்துரையாடல் என்ற பதத்துக்கே இடமில்லை. ஆண்டானின் பேச்சு “கட்டளை”யாகவும், அடிமையின் பேச்சு “மௌனமாக”வுமே என்றும் இருந்திருக்கிறது. அவ்வாறிருக்கையில் நீங்கள் அங்கே கலந்துரையாடல் நிகழ்ந்ததாகச் சொல்கிறீர்கள்.
Liberal Party Of Sri Lankaவில் மிக முக்கிய நபர்களுள் ஒருவராக இருந்த உங்களுக்கு, இலக்கிய, அரசியற் கலந்துரையாடல்களில் ஈடுபடும் உங்களுக்கு “கலந்துரையாடலின்” விளக்கம் விளங்காமல் கண்ணை மறைத்ததன் காரணங்களுள் ஒன்றாக இனவாதத்தைச் சொல்லலாம் அத்துடன் ஜனாதிபதி உங்களுக்குத் தந்த, தரப்போகும் பதவிகளுக்காக உங்கள் மனசாட்சியை நீங்கள் பதவிப் பேராசைப் பேய்க்கு விற்றுவிட்டதையும் சொல்லலாம்.
அடுத்தது நீங்கள் சொன்ன விடயதானத்தை எடுத்துக்கொண்டாலும் ஆதி கிரேக்க மெய்யியலைப் படித்தவர்களாக அடிமட்ட இலங்கை இராணுவ வீரர்கள் இருப்பார்களா? நமது நாட்டுப்பாடத்திட்டம் அவ்வாறான அறிவியற்புலத்தை நோக்கி இதுவரை நகர்ந்ததாக இல்லை என்பதையும் நீங்கள் அறியவில்லை போல. உங்களைப் போல மிகப்பலமான அரசியற் பின்புலத்தில் பிறந்து, Cinnamon Gardenஇல் வளர்ந்து, கொழும்பு St.Thomasஇலும், இங்கிலாந்திலும் செவ்வியல் இலக்கியம், விக்டோரியன் கால எழுத்துக்கள் என்று படிப்பதற்கு நம் நாட்டில் பிறந்த கடைநிலை இராணுவத்தினனுக்கோ, அடிமட்ட வாழ்வையே கண்ட விளிம்புநிலைச் சிறுபான்மைப் பெண்ணுக்கோ வாய்க்கவில்லை.
ஆனால் உங்களின் மேல்த்தட்டு வர்க்க வாழ்வோ, அறிவுப்புலமோ அவர்களுக்கு வாய்க்காமல் போனதை, நீங்கள் ஆதி கிரேக்க மெய்யியல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ந்திருக்கலாம் என்று நக்கலடித்து அவர்கள் இருபாலாரையும் இழிவுக்குட்படுத்துவது உங்கள் பூர்சுவாக் கொழுப்பையே காட்டுகிறது. இவ்வாறு நீங்கள் பேசும் இடத்தில் நீங்கள் ஆண்டானுக்குரிய ஸ்தானத்தில் இருந்து பேசுகிறீர்கள். முகாமுக்குள் இருக்கும் சிறுபான்மைப் பெண்ணும், கடைநிலை இராணுவத்தினனும் உங்களுக்கு அடிமைகள். அவர்கள் இருவருக்கும் – அவர்கள் போன்ற இன்னும் அடித்தட்டில் உள்ள பலருக்கும் – நீங்கள் மேல்தட்டு ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாய் – ஆண்டானாய் இருக்கிறீர்கள்.
இவையெல்லாம் உங்களுக்கு விளங்குமோ, இல்லையோ என்ன கோதாரியோ எங்களுக்குத் தெரியாது. ஆனால் ரஜீவ எங்களுக்கும் ஆதி கிரேக்க மெய்யியலில் ஒரு தொகைப்பட்ட சந்தேகங்கள் உள்ளன.
அதிலொன்று உங்கள் மறைந்த நண்பர் *ரிச்சர்ட் டி சொய்சாவிடம் கூட, அவரைக் கொலை செய்த பிரேமதாஸ அரசின் குண்டர்கள் ஆதி கிரேக்க மெய்யியல் பற்றிய கலந்துரையாடல் ஏதாவது நடத்தியிருந்திருப்பார்களா என்ன?
அதைப் பேராசிரியர் ரஜீவ நீங்கள்தான் எங்களுக்குச் சொல்ல வேண்டும்.
அடுத்த கேள்வி, கேள்வி கேட்க மறந்தவர்களுக்கு அல்லது முன்னாள் மாற்றுக்கருத்தாளர்களுக்கு:
புலிகள் பிழைகள் விட்ட போதெல்லாம் மாற்றுக்கருத்து வைத்தவர்கள் சிலர் இன்றைக்கு ராஜபக்க்ஷ அரசுடன் சேர்ந்து வேலை செய்கிறார்கள். சேர்ந்து செய்யட்டும். ஆனால் ராஜபக்க்ஷ அரசு விடும் பிழைகளுக்கெல்லாம் அவர்கள் மாற்றுக்கருத்து வைக்கமாட்டார்களா?
ஏன்? சுப்பனைப் பாடிய உங்களுடைய வாய்கள் அப்பனைப் பாடாதோ?
ஜனநாயகம், மனித உரிமைகள், மனிதம், சமாதானம், தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம், நவீன இலக்கியம் என்றெல்லாம் சமூகங் குறித்து நேர்மையாகப் பேசுபவர்கள் வன்முறையின் எந்த வடிவத்தையும், பாசிசத்தின் பல நூறு முகங்களையும் அடையாளங் காணும் வல்லமை உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் வன்முறையை – பாசிசத்தை – அதிகாரத்தின் குவிவுமையத்தை – நோக்கிக் கேள்விகளை எறிந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள்தான் மாற்றுக்கருத்தாளர்கள்.
மற்றப்படி ‘ஆள் பார்த்து’, ‘பதவி பார்த்து’, ‘விருது பார்த்து’, இன்னும் என்னென்னமோ பார்த்து – இன்றைக்கு வாயை மூடிக்கொண்டு இருக்கும் ஒருகாலத்திய மாற்றுக்கருத்தாளர்களை முன்னாள் மாற்றுக்கருத்தாளர் என்றுதான் எனிச் சொல்ல வேண்டும்.
பேரினவாத அதிகாரம் அவர்களையும் விழுங்கி ஏப்பம் விடும் இன்னொரு காலம் இது.
* மறைந்த ரிச்சர்ட் டி சொய்சா மன்னிப்பாராக.
நல்லு பதிவு உண்மையில் ஊடறு இப்படியான பதிவுகளை வெளிக்கொணருவது எமக்கு ஆறுதலாக உள்ளது
தமிழ் மக்களுக்கு யார் இருக்கிறார்கள் பாருங்கள் குமார் ரூபசிங்க என்ன பாடு பாடுகிறார் என்று ஊடறு உண்மையில் உங்கள் தளத்தை அடிக்கடி பார்ப்பவனில் நானும் ஒருவன் நேர்மையான பல தகவல்களை எமக்கு தருவதில் நீங்கள் நிகா தான் வடிவமைப்பு பின்னுது
very good purotin sabash
The article written by Proteins is excellent standard. Well Done
உலக வகைப்படுத்தலை இரண்டாக பிரிக்கலாம். ஒரு வகை உலகம் என்பது பல இரசாயனங்கள் வாயுவுகளாலும் உருவானது. மற்றய உலகம் என்பது சம உரிமை, அன்பு, காதல், மனித உரிமை என்பதால் உருவான உலகம்.சாதாரண மனிதர்களுக்கெல்லாம் இரண்டு உலகங்கங்களையும் ஒன்றாக இணைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் மெய்யிளார்கள் இந்த இரண்டு உலகங்களையும் பிரித்துப் பார்க்கத்த தெரியாத அப்பாவிகள்.
ராஜூவ மெய்யிளார் அல்லது மெய்யியல் படித்தவர் என்றால் என்ன செய்வார்? இராணுவீரரின் அதிகார நிலமையையும் அகதிமுகாமிலும் உள்ள ஒரு அகதியின் அதிகார நிலமையையும் சமனானதா என்று கேள்வி கேட்டிருப்பார். இவரது உறவினப் பெண்மணி அந்நிமையில் அன்நிலைமயில் இருந்தால் மட்டுமே ராஜூவ இந்தக் கேள்வியை கேட்டுப்பார். இவர்கள் ஆதி கிரேக்க மெய்யியல் தங்களுக்குத் தேவையானதை மட்டும் பொறுக்கி எடுத்து பாவிப்பது இன்று நேற்று தொடங்கியது அல்ல.
கி.மு 700 ஆண்டு நடந்த அரசியலை அரிஸ்டோட்டல் தனது “அரசியல்” என்ற புத்தகத்தில் இவ்வாறு விபரிக்கின்றார். ‘மசடோனியாவைச் சேர்ந்த சோலோ என்பவர் அரசியல் சாசனத்தை ஓர் கவிதை வடிவில் எழுதினார். 3000 உறுப்பினரைக் கொண்ட சட்டசபை. இந்த உறுப்பினர்கள் சட்டசபையில் பேசவும் முடியும். அத்தோடு 600 பேர் நீதிபதிகள். எந்தவொரு சமூக தட்டிலிருந்தும் வசதியாக நீதிபதிகளுக்கு சம்பளம் வளங்கப்பட்டு இருந்தது. இதனால் இரண்டு ஒலிவ் மரத்தை சொந்தமாக கொண்ட ஒரு ஏழை விவசாயியால் கூட நீதிபதியாக வந்து பணக்கார வர்க்கத்தில் உள்ளவரை தண்டிக்க முடிந்தது. இந்த சனநாயக்த்துக்கு கடவுளையே குற்றவாழிக் கூட்டில் நிறுத்தக் கூடய பலம் இருந்தது.”
கிட்டத்தட்ட 2700 வருங்கழிந்தும் இதில் அரைச் சதவீதமாவது உங்கள் அரசியலில் அடைய முடிந்ததா? ராஜூவவின் ஆதி கிரேக்க மெய்யியல் கல்வியெல்லால்லாம் தராதரமே தவிர உண்ணமையான கல்வி அறிவு என்று கூற முடியாது. இது உங்கங்கள் பூர்சுவாக் கூட்டங்களோடு விஸ்கி அடித்துக் கொண்டு உரையாடவும் உங்கள் பேராசியர் பதவிக்குமே உதவும். ராஜூவ போன்ற பூர்சுவாக்காரர்களால் எந்தச் சமூகத்துக்குமே பலனில்லை.
பூரோட்டின்களின் கட்டுரை மிகத்தரமானதும், மிகவும் நேர்மையானதுமான பதிவு.
வரலாறு என்பது திருப்பத் திரும்பவும் அதே வகையாக வந்து கொண்டிருக்கும் என்பது எவ்வளவு கொடுமையான உண்மை. தனிநாட்டுக்காக போராடிய போது புலிகள் செய்த கொடுமைகளைலெ;லாம் ஒரு சாரார் கண்களை முடிக்கொண்டு தனிநாட்டுக் கனவுக்காக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். அப்போது இதற்கு எதிராக கூக்குரல் எழுப்பியவர்களுக்கெல்லாம் இப்N;பாது என்ன நடந்தது? இப்போது இலங்கையில் நடக்கும் ஆட்சியில் தமிழர்கள் எப்படி நடத்தப் படுகின்றார்கள் என்பதற்கு ராஜூவவின் இந்த சாட்சியமே போதும். இதை பூரோட்டின்களின் கட்டுரை பூர்சுவாக் கொழுப்புடன் சொன்ன அதே ஆதி கிரேக்க மெய்யிலை வைத்தே குடைந்திருப்பது நன்றாக உள்ளது.
உலக வகைப்படுத்தலை இரண்டாக பிரிக்கலாம். ஒரு வகை உலகம் என்பது பல இரசாயனங்கள், பல வாயுவுகள், பல எல்லைகள், பல நிறங்கள், பல மொழிகள், பல இனங்கள் போன்றவற்றால் உருவானது. இரண்டாவது வகை உலகம் என்பது சம உரிமை, அன்பு, காதல், மனித உரிமை என்பதால் உருவான உலகம். சாதாரண மனிதர்களுக்கெல்லாம் இரண்டு உலகங்கங்களையும் ஒன்றாக இணைத்துப் பார்ப்புதில்லை. ஆனால் மெய்யிளார்கள் இந்த இரண்டு உலகங்களையும் பிரித்துப் பார்க்கத்த தெரியாத அப்பாவிகள்.
ராஜூவ மெய்யிளார் அல்லது மெய்யியல் படித்தவர்கள் என்றால் என்ன செய்வார்? இராணுவீரரின் அதிகார நிலமையையும் அகதிமுகாமிலும் உள்ள ஒரு அகதியின் அதிகார நிலமையையும் சமனானதா என்று கேள்வி கேட்டிருப்பார். இவரது உறவினப் பெண்மணி அந்நிமையில் அன்நிலைமயில் இருந்தால் மட்டுமே ராஜூவ எப்போது இந்தக் கேள்வியை கேட்டுப்பார்;. இவர்கள் ஆதி கிரேக்க மெய்யியல் தங்களுக்குத் தேவையானதை மட்டும் பொறுக்கி எடுத்து பாவிப்பது இன்று நேற்று தொடங்கியது அல்ல.
ஏன் இந்த ஆதி கிரேக்க உதராணத்தை ஏன் ராஜூவ பின்பற்றாமல் விட்டார். எல்லாம் பூரோட்டின்கள் சொன்னமாதிரி ஆண்டான் அடிமை Business தான்.
ஆதி கிரேக்க அரசியல் உதாரணம்:
கி.மு 700 ஆண்டு நடந்த அரசியலை அரிஸ்டோட்டல் தனது ‘அரசியல்’ என்ற புத்தகத்தில் இவ்வாறு விபரிக்கின்றார். ‘மசடோனியாவைச் சேர்ந்த சோலோ என்பவர் அரசியல் சாசனத்தை ஓர் கவிதை வடிவில் எழுதினார். 3000 உறுப்பினரைக் கொண்ட சட்டசபை. இந்த உறுப்பினர்கள் சட்டசபையில் பேசவும் முடியும். அத்தோடு 600 பேர் நீதிபதிகள். எந்தவொரு சமூக தட்டிலிருந்தும் வசதியாக நீதிபதிகளுக்கு சம்பளம் வளங்கப்பட்டு இருந்தது. இதனால் இரண்டு ஒலிவ் மரத்தை சொந்தமாக கொண்ட ஒரு ஏழை விவசாயியால் கூட நீதிபதியாக வந்து பணக்கார வர்க்கத்தில் உள்ளவரை தண்டிக்க முடிந்தது. இந்த சனநாயக்த்துக்கு கடவுளையே குற்றவாழிக் கூட்டில் நிறுத்தக் கூடய பலம் இருந்தது.”
கிட்டத்தட்ட 2700 வருங்கழிந்தும் இதில் அரைச் சதவீதமாவது இலங்கை அரசியலில் அடைய முடிந்ததா? ராஜூவவின் ஆதி கிரேக்க மெய்யியல் கல்வியெல்லால்லாம் தராதரமே தவிர உண்ணமையான கல்வி அறிவு என்று கூற முடியாது. இது உங்கங்கள பூர்சுவாக் கூட்டங்களோடு விஸ்கி அடித்துக் கொண்டு உரையாடவும் ராஜூவவின் பேராசியர் பதவிக்குமே உதவும். ராஜூவ போன்ற பூர்சுவாக் காரர்களால் எந்தச் சமூகத்துக்குமே பலனில்லை. இதே போல் pick and choose opinionist are worst enemy of democracy.