கவுரவக் கொலைகள்??

– ஓவியா

‘கவுரவம்’ என்ற சொல்லை கொலைகளுக்கு அடைமொழியாக்கலாமா? என்பதே மிகப் பெரிய கேள்விதான், ஆனாலும் ஆக்கியிருக்கிறார்கள்,  பெரும்பாலும் குடும்பத்தினரால் இந்தக் கொலைகள் நடத்தப் படுகின்றன, சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியான ‘ஆருஸி’ கொலை வழக்கு இதற்கொரு உதாரணம். இதில் பெரும்பகுதியும் கொலை செய்யப் படுவது பெண்கள். சாதிப் பிரச்சனையாகப் பரிணமிக்கும் போது ஆண்களும் சில இடங்களில் கொலை செய்யப் படுகிறார்கள். சில தினங்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது, ஒரே சாதிக்குள் தடை செய்யப் பட்ட உறவிலுள்ள ஓர் ஆணும், பெண்ணும் விரும்பித் திருமணம் செய்து கெண்டார்கள், அந்த ஊரை விட்டே விலகிச் சென்று விட்டார்கள், நிறை மாதக் கர்ப்பிணியாக தனது மனைவியை அழைத்துக் கொண்டு அந்த மணமகன் தனது ஊருக்குத் திரும்பியிருக்கிறார், பெண்ணின் சொந்த சகோதரன் தங்கையைப் பார்ப்பதாகக் கூறி அந்த வீட்டுக்கு சென்றிருக்கிறார், தமையனைப் பார்த்த பெண்ணுக்கு மட்டற்ற மகிழ்ச்சி, உபசரித்து மகிழ்ந்திருக்கிறார். பேசிக் கொண்டடிருந்த அணண்னன் சட்டென கத்தியை எடுத்து நிறைமாதக் கர்ப்பிணியானள தங்கையைக் குத்திக் கொன்று விடுகிறார். இப்போது அந்த மாபெரும் ஆண்மகன் தலையை நிமிர்த்திக் கொண்டு கைதாகியிருக்கிறாராம். அவருடைய சாதி வழக்கறிஞர்கள் சட்டப் புத்தகங்களை புரட்ட முடிகிறதோ இல்லையோ நீதித் துறையை புரட்டி விடலாமென்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்களாம்.

ஏனெனில் அந்தக் கொலைகாரர் இப்போது தான் ஒரு நல்ல சாதிமான் என்று நிருபித்திருக்கிறார் இல்லையா?மீண்டும் சில தினங்களுக்கு முன் வந்த மற்றொரு செய்தி, தர்மபுரி அருகே ஒரு பெண் ஒரு வெறிக்கும்பன் காம வன்முறைக்குப் பயாகிற ôர், அந்தப் பெண்ணின் தாயார் அந்தப் பெண்ணிற்கு நீதி வேண்டுமென்று பரிதவிக்க, அந்தப் பெண்ணின் சகோதரிகள் அந்தப் பெண்ணைக் கொன்று விடும்படியோ அல்லது குடும்பத்தை விட்டு அனுப்பி விடும்படியோ வயுறுத்துகிற ôர்கள். அந்தப் பெண் அந்தக் குடும்பத்தின் மானத்திற்குக் களங்கமாகப் பார்க்கப்படுகிறாள்.

தங்கள் வீட்டுப் பையன்கள் மேல்சாதிப் பெண்ணைக் கூட்டி வரும்போது அதனை விரும்புகிற அதே சாதிக்காரர்கள் தங்கள் வீட்டுப் பெண்கள் தங்களை விட தாழ் நிலையிலுள்ள சாதிப் பையன்களை விரும்பிச் சென்று விடும்போது அவர்களைக் கொலை செய்யும் அளவிற்கு சாதி வெறி வந்து விடுகிறது.

இவ்வாறாகப் பெண்களைக் கொலை செய்யும் உரிமையை அப்பெண்ணின் பெற்றோர் மட்டும்தான் எடுத்தக் கொள்கிறார்கள் என்று இல்லை, திருமணத்திற்கு பிறகு வேறிடத்தில் உறவு கொள்கின்ற பெண்ணின் புகுந்த வீட்டுக்காரர்களுக்கும் அவளைக் கொலை செய்வதற்கான அதிகாரம் கிடைத்து விடுகிறது, ‘கவரிமான்’ என்று தமிழ்க் திரைப்படம் ஒன்று வந்தது, நடிகர் சிவாஜி கணேசன் தேவி ஆகியோர் நடித்தது, தமிழில் கவுரவக் கொலையை நியாயப் படுத்தி எடுத்த படம் என்று அதனைக் குறிப்பிடலாம்.

ஒரு வீட்டில் ஒரு பையன் சற்று வித்தியாசமாக வாயாடிக் கொண்டு வளர்ந்து வந்தான். சில வருடங்களுக்குப் பின் அவன் சாமியாராகி விட்டதாகக் கூறினார்கள், அதன்பின் அவனது தோற்றத்தில் இன்னும் மாறுதல்கள் வந்ததாக பேசிக் கொண்டார்கள், திடீரென ஒரு நாள் ஊருக்குச் சென்றிருந்த அவன் பிணமாகித் திரும்பினான். பான மாற்றம், ஓரினச் சேர்க்கை இவையெல்லாம் தங்கள் குடும்பத்தில் ஒருவரிடம் இருப்பதாகத் தெரிய வந்தால் அக்குடும்பம் அவர்கள் மரணத்தையோ அல்லது மறைவையோ விரும்புகிறது, இதுவும் கவுரவப் பிரச்சனைதான், பாலியல் வன்முறைக்குக் குரல் கொடுப்போர் அதே வேகத்துடன், தீவிரத்துடன் இந்தக் கொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பார்களா என்றால் இல்லை என்று சொல்லலாம், ஏனெனனில் இச் செய்திகளைப் படிக்கும் போது அவர்களின் மனது கொலை செய்தவரின் நியாயங்களுடன் உடன்படுகிறது.

உண்மையில் பாலியல் வன்முறைகளை விட அதிக அளவில் நடைபெறும் இந்தக் கவுரவக் கொலைகள் பற்றி இந்த சமூகம் கள்ள மவுனம் சாதிக்கிறது. மேலும் நமது அமைப்பில் குற்றத்தைத் தண்டிக்கின்ற அமைப்புகளான காவல் துறை, மற்றும் நீதித்துறை, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் அமைப்புகள் இவையனைத்துமே சாதிக்கும், ஆணாதிக்கத்திற்கும் உட்பட்ட அமைப்புகளாகவே இருக்கின்றன.

கவுரவக் கொலைகளில் கிட்டத்தட்ட 56.6 திருமணமான பின் ஏற்படும் உறவுச் சிக்கல்களினால் நிகழ்கின்றதாகவும் 35.9 சாதியப் பிரச்சனைகளால் ஏற்படுவதாகவும் புள்ளிவிபரம் தரப்படுகிறது, இதில் சாதியத்தால் நடத்தப்படும் கவுரவக் கொலைகள் பற்றி அதனை ஒரு சமூகக் கொடுமையாக எடுத்து வைப்பது இப்போது ஓரளவிற்கு சாத்தியப் பட்டு வருகிறது, திருமணமான பின் ஏற்படும் உறவுச் சிக்கல்களில் நடைபெறும் கொலைகள் பற்றி இச் சமூகம் ஒரு சண்டித்தனமான மவுனத்தையே கடைப் பிடிக்கிறது, அந்தக் கொலை நியாயம்தான் என்று சொல்லாமல் சொல்கிறது.

நாம் மேலே சொல்யருக்கும் அனைத்து உதாரணங்களிலும் இன்னும் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் இந்த அநியாயக் கொலைகளிலும் சம்பந்தப் பட்டிருக்கும் சமூக நிறுவனங்கள் இரண்டு, ஒன்று சாதி அடுத்தது குடும்பம், உன்மையில் இவை ஒரே நிறுவனம்தான், சாதி அமைப்பின் நிர்வாகப் பிரிவாகவே குடும்பம் இயங்குகிறது, உண்மையில் கொலை செய்பவர். கொலை செய்யப் படுபவர் இருவருமே இந்த சாதி அமைப்பிற்கு பயானே ôரே. அம்பேத்கர் சொன்னது போல சம்புகனைக் கொன்ற இராமன் குற்றவாளியல்ல. அவனுக்கு இதுதான் தர்மம் என்று எழுதிய மனுதர்மமே குற்றவாளி. இந்த அமைப்புகளில் இருந்து உருவாகிறவர்களாகவே இந்த அரசியல் வாதிகள் இருக்கிறார்கள், எனவே அவர்கள் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ இந்த வன்முறைகளைத் தூண்டிவிடுகிறார்கள் என்பதுடன் அவர்களது குறுகிய அரசியல் நலனுக்கு இவற்றை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இதில் பெண்ணடிமைத்தனம் வகிக்கும் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கு ‘பெண்’ குடும்ப மானத்தைக் காப்பாற்ற வேண்டிய சுமையை எப்போதும் சுமந்து கொண்டிருப்பவளாக இருக்கிறாள், அவள் காவல் வைத்திருக்கப் பட வேண்டியவள் அவ்வாறு காவல் வைக்கப் படாவிட்டால் அவள் இந்த தர்மத்தை (பதி விரதா தர்மத்தை, மனுதர்மத்தை, சாதி தர்மத்தை) இயல்பாக பின்பற்றுபவளாக இருக்க மாட்டாள் என்று மனுதர்மம் சொல்யிருக்கிறது, ஒரு பெண் சாதிக் கோட்டை, குடும்பத்தின் கோட்டை, இராமயண இராமன் வரைந்த கோட்டை தாண்டிவிட்டால் ஒரு காவலாளியாக தனது கடமையை தான் சரிவர செய்யவில்லை என்று அந்த வீட்டின் ஆண் தலை குனிகிறான்.

அவளைத் தேடிக் கொலை செய்து விடுவதன் மூலம் தனது பழியைத் துடைத்துக் கொள்ள முடியும் என்று அவன் நினைக்கிறான், அவனது ஊரும், சமூகமும் அப்படியே நினைக்கிறது, சிறைப் பிடிக்கப் பட்டால் கூட அவனுடைய கவுரவத்தை போற்றுகிற ஒரு சமூகம் அவனுக்கிருக்கிறது, அந்த சமூகம்தான் குற்றவாளி. இதே அடிப்படையில்தான்ஒவ்வொரு முறை பெண் மீதான வன்முறை நடக்கும்போதும் பெண் உடை, பழக்க வழக்கங்கள் மீதான கட்டுப்பாடு குறித்து இந்த சமூகம் உடனே வரிந்து கட்டிக் கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் இந்தக் கவுரக் கொலைகள் இருக்கின்றன.

ஏனெனில் உலகம் முழுவதும் ஆணாதிக்கம் இருக்கிறது. இங்கு ஆணாதிக்கத்தின் மிகத் தேர்ந்தெடுத்த வடிவமாக சாதியும்இருக்கிறது, ‘ஆணாதிக்கம்’, ‘சாதி’ இவை இரண்டுமே மக்கள் மனதில் புனிதமானவை என்றும் தங்களுக்குப் பாதுகாப்பானவை என்றும் நம்ப வைக்கப் பட்டிருக்கின்றன. இவற்றின் இந்தப் புனிதத் தம்மை மீது போர் தொடுக்காமல், இந்த அமைப்புகளில் கவுரவம் இல்லை என்பதைப் புரிய வைக்காமல், மனிதர்களுக்குக் ‘கொல்வதில் கவுரவம் இல்லை’ என்பதைப் புரிய வைக்க முடியாது. முதல் இந்த அமைப்புகளில் கவுரவம் இல்லை என்று ஆண்களுக்கு புரிய வைக்கு முன்னால் இந்த அமைப்புகளில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை பெண்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

இது நாள் வரையிலும் பெண்கள் சாதியை எதிர்த்து வெளியில் வரவில்லை. அவர்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு மணமகனுக்காக வெளியில் வருகிறார்கள், ஆனால் சாதியை எதிர்க்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை, சாதி மாறி திருமணம் செய்வதில் சாதியின் இறுக்கம் உடைபடுவதென்பது உண்மைதான். ஆனால் அதில் பெண் விடுதலை நிகழாத பட்சத்தில் அந்த ஆணின் சாதிக்கு அவள் மாற்றம் செய்யப் பட்டு விடுகிறாள். அவ்வாறு நிகழாமல் இருக்க வேண்டுமென்றால் பெண் சாதி அமைப்பை விட்டு வெளியே வர வேண்டும். அதனால்தான் பெரியார் பெண்கள் தன்மானம் பெற வேண்டுமென்றால் மதத்தின் பிடியிருந்து வெளிவர வேண்டும் என்று சொன்னார்.

இன்றைய தினம் பெண்கள் அனைவரும் படிக்கிறார்கள், பள்ளியில் படிக்கும் ஏட்டுக் கல்வியோடு அவர்கள் நின்று விடாமல் பொதுவான கேள்வியறிவை வளர்த்துக் கொள்வதுடன் குடும்ப சாதி அமைப்பின் மீதான கலகக்காரர்களாகப் பெண்கள் மாற வேண்டும், தங்கள் மீது சுமத்த்ப் பட்டிருக்கும் சடங்குகளை அவர்கள் கேள்வி கேட்க வேண்டும், தனக்குப் பிடித்த ஓர் ஆணுக்காக மட்டுமல்லாமல் தங்கள் சொந்த விடுதலைக்காக இந்தக் குடும்ப அமைப்பு மற்றும் சாதி அமைப்பு மீது அவர்கள் போர் தொடுக்க வேண்டும், உதராணமாக தங்களுக்கு பிடிக்காத சடங்குகளைசெய்ய மாட்டோம் என்றும், தங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுவதற்காகவும், தாங்கள் விரும்பும் கல்வியைப் பயில்வதற்காகவும், தங்களுக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுப்பதற்காகவும், தங்களுக்கான அரசியல் அமைப்பை கட்டுவதற்காகவும் அவர்கள் போராட வேண்டும். இந்த இடத்தில் மறைந்த சாகித்ய அகதாமி விருது பெற்ற நாவலாசிரியர் சு.சமுத்திரம் அவர்களின் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ என்ற நாவலை வாசகர்களுக்கு பரிந்துரைப்பது பொருத்தமாக இருக்கும். அந்த நாவல் இந்த சாதி அமைப்பை எதிர்த்துப் போராடும் ஒரு பெண்ணைப் பற்றி முழுமையாகப் பேசுகிறது. பெண்ணுக்கு ‘சாதி’ எதிரான அமைப்புதான் என்பதைப் பற்றி வமையாகப்
பேசிய நாவல் என்று அதனைக் கூறலாம்.

இன்னும் வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் சாதி மத ஆணாதிக்க அமைப்பு சார்ந்த கவுரவங்களைப் புறந்தள்ளி தனிமனிதர்களின் தன்மானம் சார்ந்த பெருமைகளை ஆணுக்கும் பெண்ணுக்கும் வளர்த்தெடுக்க வேண்டும். இதுவே கவுரவக் கொலைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் வழியாக இருக்க முடியும்.

சிந்தனையாளனில் வெளிவந்த கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *