நூல் அறிமுகம் -றஞ்சி (சுவிஸ்)
அ. வெண்ணிலாவின் “பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்”சிறுகதை தொகுப்பு
அன்றாடம் பெண்கள் வலிகளையும் சந்தித்தும் பலாத்காரப்படுத்திலம் உள்ள இவ் சமூகத்தில் பெண்களை வன்முறைக்குட்படுத்தும் செய்திகள் வழக்கமான ஒன்றாக மாறிப்போன இன்றைய காலகட்டத்தில் வெண்ணிலாவின் பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் என்ற சிறுகதைத்தொகுப்பு வெளிவந்திருப்பது முக்கியத்துவம் வாய்நதது.
இவரின் சிறுகதைகள் எப்பொழுது பேசப்படக்க் கூடிய கதைகளாகவே உள்ளன,இச் சிறுகதைகள் பெண்களின் வலியை வெளிப்படுத்துவதாகவும், பெண்களின் பாதிப்புக்களை வெளிப்படுத்துபவையாகவும் உள்ளன.
இன்றைய சமூக சூழலை, பெண் மனதின் வலியை, வலிமையை, சகமனுஷியாய் ஏற்கக் கோரும் கோரிக்கையை முன் வைக்கும் இச்சிறுகதைகள் .ஆதிச் சமூகம் தொடங்கி இன்று வரை ஆணுக்கு நிகராய் உழைக்கும் பெண்களின் நிலையை கதைப் போக்கில் பதிவு செய்துள்ளார் வெண்ணிலா
கதைகள் தோறும் பெண்கள், உழைப்பை மட்டுமல்லாமல் கற்பிதங்களை கட்டுடைத்து சுயமாய் வாழும் வலிமை மிக்க பாத்திரங்களையும், சுயத்தை தக்க வைக்கப் போராடும் பெண்களின் கதைகளும் தொகுப்பெங்கும் காணப்படுகின்றன.
இந்த சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 17 கதைகள் உள்ளன. முதல் 5 கதைகளும் ஒரு பதின் வயது பெண்ணுக்கும் இந்த ஆண் மைய சமூகத்திற்கும் இடையே நிகழக்கூடிய மோசமான அனுபவங்கள். அடுத்த 12 கதைகளுமே பெண்களின் வெவ்வேறு மனநிலைகள், அவர்கள் இச்சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களின் நிராசைகள், கிராமத்துப் பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகள் என விரிகிறது கதைகள். வெண்ணிலாவின் கதைகளில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் மொழி. இதுவரை பெரிய அளவில் இலக்கியங்களில் . நெசவுத் தொழில் செய்யும் பெண்கள்தான் இவரின் கதைக்களம். குறிப்பாக சிறுமிகள். ஒவ்வொரு கதையின் முடிவுமே மனதைக் கனக்கச் செய்கின்றன.
தமிழ் இலக்கிய உலகில் கவிஞராக அறியப்பட்ட வெண்ணிலாவினால் எழுதப்பட்டுள்ள இக் சிறுகதைகள் பெண் ஆண் சமத்துவத்தை உணர ஒரு எளிய கதைக்கருவை கையாள்கிறார் .
பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்
-அ.வெண்ணிலா; பக்.160
ரூ.100
விகடன் பிரசுரம், சென்னை-2
044- 4263 4283.