யாழ்ப்பாணம் காரைநகரில் கடற்படையால் இருசிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் முகமாக கறுப்புதுணியால் முகத்தைமூடி பதாதைகளை கையில் ஏந்தியபடி யாழ்.நீதவான் நீதிமன்ற கட்டடத்திற்கு முன்பாக யாழ்ப்பாண சமூகம் இன்று நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்டது.
எமது வேதனை உங்களுக்கு புரியவில்லையா?
வருங்காலத்தை மாற்றியமைக்கும் சிறுமிகள் நாம் எம்மை இருட்டறையில் தள்ளாதே!
பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தண்டனையை வழங்கு!
பாலியல் கல்வியென்பது வாழ்க்கைப்பாடம் தயக்கத்தைவிட்டு கற்றுக்கொள்வோம்!
எம் உரிமைகளை ஏன் நீங்கள் வன்முறைப்படுத்துகிறீர்கள்?
நாம் ஒவ்வொருவரும் சமூக பொறுப்புடையவர்களாக செயற்படுகின்றோமா?
சட்ட அமுலாக்கம் எங்கே; அதை உறுதிப்படுத்துபவர்கள் எங்கே?
எமது வேதனை உங்களுக்கு புரியவில்லையா?
போன்ற வாசகங்கள் பதாதைகளில் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிறுவர் நீதிமன்றத்தில் இரு காரைநகர் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நடைபெற்றபோது இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது ஆகும்