தனது வாழ்க்கைக்காக தினமும் கடலுக்கு போகும் புத்தளத்தின் வீரப் பெண்மணி ” கடலுக்குப் போற பாத்திமா ”
இது ”கடலுக்குப் போகும் பாத்திமா”.
புத்தளம் பிரதேசத்தில் முன்னோடி மாதர் சங்கத்தில் சேவை செய்பவர் சகோதரி சாகரிக்கா அவர் பல பெண்களின் அன்றாட வாழ்வியலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி வருகின்றார். அந்த வகையில் ”கடலுக்குப் போகும் பாத்திமா” வை அறிமுகம் செய்யும் சாகரிக்கா உண்மையில் . ”பாராட்டப்பட வேண்டிய சமூக சேவகி. என்றால் அது மிகையாகாது. ஆண்களைப் போல தோணி ஓட்டி கடலுக்குச் செல்லும் துணிவுள்ள பெண் பாத்திமா ஆனால் சமூகம் இவளை இன்னும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்று சகோதரி சாகரிகா சொல்கிறார். புத்தளத்திலே பிறந்துஇ வாழ்ந்ந்து வருபவர் பாத்திமா வாழ்தாராத்துக்காகப் சவால்களைக் எதிர் கொள்ளும் பாத்திமா“வை இச் சமூகத்திற்கு மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட வேண்டியது எமது கடமையாகும் என சாகரிக்கா கூறுகிறார்.
புத்தளம் ஏரியிலே ஓடம் செலுத்திப் மீன் பிடித்துப் தனது வாழ்கையை நடத்தும் பாத்திமாவின் வாழ்க்கை என்பது நாம் சொல்லத் தேவையில்லை. ”கடலுக்குப் போகும் பாத்திமா” என்று சொன்னால் புத்தளத்தில் எல்லோருக்கு தெரியும்
“வாடைக் காற்று வீசுகின்ற காலத்திலே நல்ல வாழ்க்கையுண்டு எங்களுக்கு ஒடத்திலேஎன்கிறார் பாத்திமா இரவினிலே தொழிலுக்காகப் செல்லுகிறோம். அந்த இறைவனை நம்பி என்கறார் பாத்திமாவிடம் ஒரு ஓடம் கிட்டதட்ட 30 வருடங்களான பழமை வாய்ந்த ஓடம் அது.
வெள்ளி நிலா தான் எமக்கு விளக்காய் எரியும் என்று கூறும் பாத்திமாவின் சுற்றி வர கன்னாக் காடு சேறு நிரம்பிய கடல் அலை. அவர் மன உறுதியுடன் வள்ளத்தை தாங்கிய போது அவரின் உழைப்பின் வேதனையை பார்த்தல் கதறி அழவேண்டும் போல் இருக்கும் கைகள் இரண்டும் காயத்துப்போய் இருக்கிறது பாத்திமாவின் கடினமான உழைப்பின் அடையாளங்கள் அவை.தனது பிள்ளைகளின் வயிறு காயாமல் இருப்பதற்காக தனது கரங்களை அவர் காய்த்துக் கொண்டுள்ளார். பாத்திமாவை பார்க்க பெருமையாக இருக்கிறது.
கடலுக்குப் போகும் பாத்திமா மாதர் சங்கம் ஒன்றின் தலைவியாகவும் பொது சேவை செய்கிறார். அல் அஜ்மா பெண்கள் சங்கத்தின் தலைவி – பெண்களுக்கே முன்மாதியாக இருக்கும் பாத்திமா