முபீன் சாதிகா (இந்தியா)
தன்னழிவிக்கும் பாடல்
இறவாத் தன்மையும் இரங்கா நெஞ்சழிவும்
உருக்கும் நைவும் படரும் இன்னலும்
வருந்தா பையுளும் அயரா மருகலும்
நசியும் உயவும் நயவா அலமரலும்
புழுங்கும் இடரும் குழையும் இடும்பையும்
கொடுங்கண் நீரும் குமையும் வதனமும்
ஓலமும் புலம்பலும் பூசலும் பொருமலும்
பொங்கும் பாயும் பொரியும் குமுறும்
போற்றிடும் குலைவை ஏற்றிடும் அலைவை
குவியும் துன்பத்தில் வதியும் துக்கத்தில்
மேம்படும் கையறவும் பொருந்திய இசையாய்
உள்ளீடும் மோனத்தில் பொதிந்த சாக்காடும்
அகத்தில் நிகழ்ந்த கூத்தென ஒலித்து
தன்னழிவித்து முன்னிலையில் படர