சித்ரா நாகநாதன்
1980 களில் தாகம் கலைஇலக்கிய காலாண்டிதழின் மூலம் பரவலாக அறியப்பட்ட சித்ரா நாகநாதன் ஈழத்து பெண் எழுத்தாளர்களில் தனித்துவமானவர். துணிச்சலும் சமூகநேசிப்பும் அவரின் கதைகளில் காணப்படுகிறது.அவரது முதல் சிறுகதைத் தொகுதி “ கிராமத்து மண்கள் சிவக்கின்றன “ தாகம் வெளியீடாக 1990 இல் வெளிவந்து அந்த வருடத்தின் வட-கிழக்கு மாகாண தமிழ் சாகித்திய விருதும் பெற்றது. அன்றைய காலத்தின் போர்க்கால சூழ்நிலைகளின் காரணமாக பிரான்ஸ{க்கு புலம் பெயர்ந்த சித்ரா நாகநாதன் 1990 களின் போர் நிலைகளை வைத்து எழுதிய “தாகம்” என்ற சிறுகதை பிரபலமானது.
சித்ரா நாகநாதன் செங்கை ஆழியான் கூறுகையில் சித்ரா எழுதிய சிறுகதைகள் ஒரு காலகட்டத்தின் மறைக்கப் படக்கூடாத ஆவணங்களாகவுள்ளன . கிழக்கிலங்கையில் இந்திய அமைதிப் படையின் காலகட்டத்தில் நடந்தேறிய சோக நாடகங்களை அப்படியே தனது சிறுகதையில் சித்ரா நாகநாதன் தந்துள்ளார். இலக்கியம் ஒரு காலகட்டத்தின் கண்ணாடி எனின் சித்ராவின் சிறுகதைகள் அவ்வாறானபணியினைச் செய்துள்ளன. .கலாபூர்வமெனும் போது இச் சிறுகதைகள் அடிபட்டுப் போனாலும் சமுகவியலாவணமாக இவை மிளிர்கின்றன.
ஒரு போராளியின் காதலி காத்திருக்கிறாள்,பெற்றமனம், அடம்பன் கொடியும் புத்தாண்டு வெடியும், மனிதம் இன்னும் மரணிக்கவில்லை, வேதனையின் சுவடுகள், கிராமத்து மண்கள் சிவக்கின்றன, தலைமுறைகள் முதலிய சிறுகதைகள் இந்திய அமைதிப்படைக்காலத்துக் கிழக்கிலங்கையையும் ஆயுதக்கலாசாரத்தின் அட்டூழியங்களையும் சித்தரிக்கின்றன.
போராளி ஒருவனின் வருகைக்காக காத்திருந்த அவன் காதலியின் உணர்வுகளை முதற் சிறுகதை சுட்டுகிறது. பெற்றமனம் அற்புதமான கருக் கொண்ட சிறுகதை.
சித்ரா நாகநாதன் பெண்ணிய கருத்துக்களை வைத்தும் சிறுகதைகள் படைத்துள்ளார்.தமிழீழ போராட்டத்தின் பலத்தையும்,பலவீனத்தையும், துணிச்சலாக சுட்டிக் காட்டி எழுதிய முதற் பெண்படைப்பாளி .சித்ரா நாகநாதனே என்பேன், என்கிறார் செங்கையாழியான்
ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி “குறமகள்”
கிழக்கிலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் “பா. பாலேஸ்வரி.”
1960களில் ஈழத்தின் சிறுகதைத்துறைக்குள் பெருமை தேடித்தந்த (யாழ்நங்கை)”அன்னலட்சுமி இராஜதுரை”
மலையகத்தின் இலக்கியத் தாரகை “நயீமா சித்தீக்”
ஈழத்தின் பெண் எழுத்தாளர் “தாமரைச்செல்வி.”
ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “குந்தவை”
கிழக்கிலங்கை மூத்த பெண் படைப்பாளி “ராணி சீதரன்”
ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளி “யோகேஸ்வரி சிவப்பிரகாசம்”