ஆன்மாக்கள் அழுகின்றன

ஸ்ரீசித்திரா (இலங்கை)

 

ஒவ்வொருவரும் உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் நாங்கள் இவ்வாறு வளரக் காரணம் யார்? இக்கொடுரமான வன்முறையை செய்ய எங்களை வளர்த்து விட்டது யார்?எங்கள் சிந்தனையை அறிவை நல்ல சமுதாய வளர்ச்சிக்கு  வித்திடாமல் நசுக்கி  ஒழித்தமைக்கு காரணம் யார்?

வெறுமனே சமுதாய நலன் பேச்சில் வேண்டாம் ஒவ்வொரு மனிதனும் என்ன செய்தீர்கள் எம் போன்றவர்களுக்கு என உங்களையே கேட்டுவிட்டு

உங்களில் உத்தமர்கள் இருந்தால்

எங்களைத் திட்டுங்கள் கல்லால் வீசுங்கள் காறித்துப்புங்கள்

மானசீகமாக மன்னிப்புக் கேட்கிறோம்

————-

 “இப்படிக் கொடுரமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இப்படித்தான் சாவு வரணும்”

“இவனுகள் எல்லாம் மனுசனா இந்த வயசிலே_யே இவ்வளவ கொடுர  எண்ணமா? உங்கள எல்லாம் சட்டம் நேர்மைப் படி தண்டிச்சா அது கடவுகளு;கே பொறுக்காது.”

சீ.. சி.. து.. தூ

கூட்டம் இறந்த உடல்களில் துப்பியது. வேறு சிலர் உங்களுக்கெல்லாம் இது தான் தண்டனை என அருகில் இருந்த கற்களை பொறுக்கி அந்த இறந்த உடலுக்கு எறிந்தனர் ஆளயும் அவனுகளின் உடுப்பையும் பாரன் தலையால தெறிச்சாங்களே இந்தாங்கடா? மண்ணோடு மண்ணாய் போங்க மண்ணைவாரி அந்த முகங்களில் வீசினர்.

 இன்னும் சிலா இந்த சமுதாயத்தை கெடுக்கிறதே இவனுகள் தான் என சமுதாய அக்கறையுடன் திட்டித் தீர்த்தனா. மூன்று ஆன்மாக்களும் அழுதன.

 இன்னும் இந்த சமுதாயம் திருந்தவில்லை இறந்த மூன்று உடல்களையும் இப்படித் திட்டித் தீர்க்கின்றார்களே நாம் உயிருடன் இருந்த போது இந்த சமுதாயம் இந்த மக்கள் பொதுநலம் போதிக்கும் புருசர்கள் இன்று எம்மைச் சுற்றிக் கூடியிருக்கும் இந்தக் கூட்டம் இந்த உத்தமர்கள் எல்லாம் எங்கே போயிருந்தீர்கள் எங்களுக்கு எல்லோரையும் போல வாழ ஆசைதான் சிறுவர்களுடன் சிறகடிதத்துப் பறக்க ஆசைதான் படித்து நல்ல வேலை செய்து சுயமாக நல் சிந்தனையுடன் வாழ ஆசைதான்  ஆனால் எங்கள் இளமைக்காலத்தை எங்கே வாழ வைத்தீர்கள். எங்களை இத் தீயவழிக்கு இட்டுச் சென்றவரே நீங்கள் தானே

 நாங்கள் எங்களது வறுமையால் தொடர்ந்து படிக்க வசதியில்லாமல் கல்வியை இடைநிறுத்தியபோது சமூகத்தில் உள்ள ஒருவராவது வந்து எம் படிப்பினைத் தொடர உதவி செய்தீர்களா?

 நாம் பட்டினியாக பாடசாலை சென்ற போது ஒரு மனிதன் வந்து எமது பசியை ஆற்றினீர்களா? நாங்கள் கல்வியை இடைநிறுத்தி சம்பாதிக்க நினைத்த போது எமக்கு ஆகக் குறைந்தது ஒரு தொழிலைச் செய்ய ஒரு புத்திமதியாவது கூறினீர்களா? அல்லது ஒரு தொழிலையாவது கற்றுக் கொடுத்தீர்களா??

 உங்கள் பிள்ளைகளைப் போல் ஆடைகள் போட்டு மகிழ நினைத்த போது எமது சேட்டின் ஓட்டையை மறைக்க உங்களால் ஊசி தானும் வாங்கிக் கொடுக்க மனம் வந்தததா??

 வயசுக் கோளாளறில் நாம் தீய பழக்கத்திற்கு அடிமையான போது யாரேனும் சமுதாய நலன் பேசும் ஒருத்தர் எங்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்தீர்காளா?

 பெண்களைக் கேலி செய்த போது அத்தப்பை யாராவது அன்பாக உணர்த்தினீர்களா நாம் அன்புக்காக ஏங்கிய போதெல்லாம் சமூக நீதி பேசும் நீங்கள் எம் பின்னால் றவுடி எனும் பெயர் சூட்டி அல்லவா மகிழ்ந்தீர்கள்  எமக்கு சட்டம் தெரியாது. சமூக நலன் தெரியாது கால் போன போக்கோடு மனம் சொன்ன பாதையில் தடுமாறித் திரிந்தபோது ஒருவர் எம்மீது அன்பு செலுத்தியிருந்தால் எம் பாதையையே மாற்றியிருந்தால்…

 நீங்கள் என்ன செய்தீர்கள் எல்லாவற்றையும் வேடிக்கை பாலீத்து எம்மைத் தூண்டிவிட்டு எம் பலத்திற்கு பயந்து எம் முன்னால் எம்மை போற்றினீர்கள் அத்திவாரமே இல்லாத எங்களை உங்கள் நலனுக்காக உச்சியில் வைத்தீர்கள்.

இன்று வீழ்ந்து கிடக்கும் எமக்கு போதனை மட்டும்

இன்று மட்டும் ஏன் புத்தனாக எம்முன் வந்தீர்கள்;

 ஒவ்வொருவரும் உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் நாங்கள் இவ்வாறு வளரக் காரணம் யார்? இக்கொடுரமான வன்முறையை செய்ய எங்களை வளர்த்து விட்டது யார்?

எங்கள் சிந்தனையை அறிவை நல்ல சமுதாய வளர்ச்சிக்கு  வித்திடாமல் நசுக்கி  ஒழித்தமைக்கு காரணம் யார்?

வெறுமனே சமுதாய நலன் பேச்சில் வேண்டாம் ஒவ்வொரு மனிதனும் என்ன செய்தீர்கள் எம் போன்றவர்களுக்கு என உங்களையே கேட்டுவிட்டு

 உங்களில் உத்தமர்கள் இருந்தால்

 எங்களைத் திட்டுங்கள் கல்லால் வீசுங்கள் காறித்துப்புங்கள்

மானசீகமாக மன்னிப்புக் கேட்கிறேம்

மறுபிறவி இருந்தால் நாமும் மனிதராக வாழ…

 

பெண் சஞ்சிகையில் வெளிவந்த இக்குறிப்பை ஊடறுவுக்கு அனுப்பித்தந்தவர் அஞ்சனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *